கலாம் வீடு
ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிவாசல் தெருவில் அமர்ந்திருக்கிறது.அக்னிப்பரவையை விண்ணில் சிறகடித்து பறக்க விட்ட கலாம் என்னும் மாமனிதனின் இல்லம்.மொத்தம் மூன்று தளங்களை கொண்ட கட்டிடம் முதல் தளத்தில் கலாமின் அண்ணன் ஜெயினுல்லாபுதின் தன் குடும்பத்தோடு வசிகிறார் இரண்டாம் தளத்தில் கலாம் பயன் படுத்திய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.அவர் பெற்ற விருதுகள்,புகைப்படங்கள், பயன்படுத்திய பொருட்கள்,போர் விமானத்தில் பயன்படுத்திய பிரத்யேக ஆடை.மற்றும் அவர் தன் உயிரினும் மேலாக நேசித்த அவருடைய புத்தகங்கள்.முதலில் அவருடய புத்தகங்களை பார்த்த போது அவை விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்கள் தான் என நினத்தேன் அங்கிருந்தவர்களிடம் கேட்டபின்புதான் அவையேல்லாம் அவர் படித்த புத்தகங்கள் என்பது தெரியவந்தது அறிவியல்,சமயம்,இலக்கியம்,வரலாறு,தத்துவம்,பொருளாதாரம் என அனைத்து தரப்பு புத்தகங்களும் நமக்கு அங்கே காணக்கிடைக்கும்,(கலாம் எழுதிய புத்தகங்கள் மட்டும் விலைக்கு கிடைக்கின்றன).அந்த புத்தகங்களை பார்த்த போதுதான் தோண்றியது கலாம் தன் வாழ்நாள் முழுவதும் வாசித்துகொண்டெ தன்...