இடுகைகள்

ஏப்ரல், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆதாமின் மகன் அபு

ஆதாமின் மகன் அபு என்னும் அத்தர் வியாபாரியின் வாழ்நாள் ஆசை மனைவியோடு ஒரு ஹஜ் பயணம். இனியோரு ஹஜ் பயணத்திற்கு இருப்போமா! என்ற கேள்வியால் இந்த வருடம் போய்த்தீருவது என முடிவுசெய்கிறார்.அரசின் ஹஜ் கமிட்டியில் இடம் கிடைக்காது என்ற சந்தேகத்தால்ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் செல்ல முயற்சிக்கிறார்.வீட்டில் இருந்த பசுமாடுகள்.மனைவி கழுத்தில் இருந்த நகைகள்,முற்றத்தில் நிற்கும் பலா மரம்   உட்பட அனைத்தும் விற்கப்பட்டு பயண ஏற்பாடு நடைபெறுகிறது   .பயணத்திற்கு ஒருவரம் முன்பு சந்தைக்கு சென்று தேவையான அனைத்தும் வாங்கி வரும்போது பலாமரம் முறிக்கப்பட்டு கிடக்கிறது. மாலை பணம் வாங்க செல்லும் போது தான் மரம் புழுத்துபோயிருப்பது தெரிய வருகிறது மரத்திற்கு பேசிய விலையில் பாதிவிலைக்கு கூட மரம்   தகுதி இல்லாமல் இறுக்கிறது   இருந்தும் மர வியாபாரி ஜான்சன் தான் முன்பு உறுதியளித்த முழுத்தொகையை தர முன்வருகிறார் ஆனால் அபு வாங்க மறுத்துவிடுகிறார். .நண்பரான பள்ளி ஆசிரியர் பணம் அளிக்க முன் வரும்போதும் உடன் பிறக்காதவர் அளிக்கும் பணத்தை ஏற்க நபி அனுமதிக்கவில்லையென்று மறுக்கிறார்.டிராவல்ஸ் ஏஜன்ட் ஆஸ்ரப...