இடுகைகள்

மே, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நதிக்கரை இலக்கியகூடுகையின் மூன்றாவது   கூட்டம் இனிதே நிறைவடைந்திருக்கிறது .முழுக்க முழுக்க சிறுகதை அமார்வாக இக்கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.தமிழில் வெவ்வேறு காலகட்டங்களில்   எழுதப்பட்ட தமிழ் சிறுகதை அமைப்பில் புதிய சாத்தியங்களை உருவாக்கிய கதைகளான. பிரபஞ்ச கானம் ­- மெளனி ரத்னாபாயின் ஆங்கிலம்   - சுந்தரராமசாமி காற்று – கு.அழகிரிசாமி கரடி – ஜெயமோகன் விபத்து – அசோகமித்ரன்                       ஆகிய கதைகள் விவாதிக்கப்பட்டது இக்கதைகளைப் பற்றிய எனது எண்ணங்கள் பிரபஞ்ச கானம் தமிழ் சிறுகதை எழுத்தில் வாசகனுக்கு உட்சபட்ச சாவாலை அளிக்கக்கூடியது மெளனியுனுடை சிறுகதைகள்.முற்றிலும் அகவயத்தன்மை கொண்டு டைரி குறிப்புகளைப் போல எழுதும் நடை.தமிழ் சிறுகதைகள்   மூலவர் என புதுமைப்பித்தனால் பாரட்டப்பட்டவர். இக்கதையில் எதிர் வீட்டில் வசிக்கும் ஆண் பெண் இருவர். நன்றாகப் பாடும் பெண் ஒரு கட்டத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு பாடமுடியாமல் போகிறது.பாடினால் அவள் உயிர் போய...
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டம்    கடந்த ஞாயிறன்று   இனிதே நடந்துமுடிந்திருக்கிறது .உண்மையில் எதிர்பார்த்ததற்கு மேல் இரு மடங்க்காக ஆட்கள் வந்திருந்தனர் (எதிர்பார்ப்பு இரண்டு,நான் ,சுரேஸ்பிரதிப்,வருகை_நான்கு ). ஒருவருக்கொருவர் அறிமுகம் முடிந்ததும்.முதலில்தீவிர   இலக்கியத்திற்குள் எவ்வாறு வந்தோம்( மாட்டிக்கொண்டோம்) என்பதைகுறித்து பேச்சு துவங்கப்பட்டது .எளிய தலைப்பாதலால் அனைவாரலும் தயக்கம் இல்லாமல் பேச முடிந்தது   .   நான்   ( ஒன்றாம் வகுப்பில் பாபு சார் சொன்ன பைபிள் கதைகளில் ஆரம்பித்து பழய மள்ளிகை கடைகளின் இடுக்களில் கிடந்த சிறுவர் மலர்,தங்க மலர், துப்பறியும் நாவல்களான,ராஜேஸ்குமார் ,சுபா, பின்னர் கல்கி ஜெயகாந்தன் .பின் ஜெயமோகன் என்று என் வாசிப்பு கடந்து வந்த பாதையைப்பற்றிப்பேசினேன், அடுத்த நிகழ்வில் நாவல் வாசிப்பு அதில் உள்ள சவால்கள்,ரசனை,நாவலின் வகைமகள் குறித்து பேசப்பட்டது நாவலின்(படைப்புகள்) வகைமைகளை கண்டு கொள்ளல் குறித்த சுரேஸ் பிரதிப் விளக்கம் : அடிப்படையில் நாவல் என்பது சமூகம் மேல் வைக்கப்படும் ஒரு விமர்சனம் இயல்புவாத...