. ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தண்டா காட்டுப்பகுதியில் இருந்தேன். மூன்று நாட்கள் முழுவதுமாக காட்டில் நம் ஆதிவாழிடத்தில் இருந்தேன். எதிர்பாரமல் நண்பர்கள் மூலம் அமைந்த பயணம். தூய வெள்ளி உருகி ஒடியது போன்று ஓடிய சுணை,கால்களை முத்தமிடும் பாசிமீன்கள் .தூய காற்று பச்சைப்போர்வைக்குள் ஊடுருவும் சூரியன் என பரவசப்படுத்துபவை ஏராளம் இருந்தன.. காட்டெருது,கடமான். தோகைவிரித்த மயில் வெள்ளைக்கயிறு திரித்தது போன்ற பாம்பு சிறுத்தை பாதம் என கொஞ்சம் விலங்குகளை காணமுடிந்தது .இக்காட்டில் புதர் செடிகள் அதிகம் இருந்தது .பெரு மரங்கள் குறைவு .நீர்மத்தி,புருசு காட்டுவேம்பு, ஆகியவை அதிகம் காணப்பட்ட மரங்கள்.எங்களுக்கான வேலை தினமும் குறிப்பிட்ட பரப்பு சென்று அப்பகுதியில் உள்ள தாவரங்கள் விலங்குகளை கணகெடுக்க வேண்டும். வழிகாட்டியாய் வன ஊழியர்கள் வந்தனர். காட்டுக்குள் சோளகர் இன பழங்குடிகளைப் பார்க்க முடிந்தது .ஆற்றுமண்ணின் முகம் .ஒல்லியான குட்டையான தேகம். தாய்மொழி கன்னடம் போன்ற ஒரு பாஸை .அவர்கள் பேசும் தமிழ் சுவாரசியமாக இருக்கிறது. பேசும் போது கோவிந்தா என்ற பதம்...
இடுகைகள்
ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
கொற்றவையும் மங்கலதேவியும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இன்று கொற்றவை முதல் வாசிப்பை முடித்திருக்கிறேன். மூன்று நாட்களாக பித்து பிடித்தது போல் இருந்தது. கொற்றவை எனக்குள் சன்னதம் கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள்…முதல் நூறு பக்கங்களை வாசிக்க மட்டும் பத்து நாட்களாகியிருக்கின்றன. மரபிலக்கியங்கள் சம்பந்தமாக நான்வாசித்த நான் முதல் நாவல் இரண்டாவது நூல் கொற்றவை. முதல் இரண்டு அத்யாயங்களை நண்பன் ஒருவனிடம் வாசிக்க கொடுத்தேன்.முதல் நான்கு வரிகளை படித்து விட்டு தலை சுற்றுகிறது என்றான்.வாசித்து முடித்ததும் கொஞ்சம் தலைகணம் கூட வந்திருக்கிறது. தமிழில் இலக்கிய வாசகனுக்கு வாசிக்க சவால் அளிக்கும் படைப்புகளில் முதன்மையானது கொற்றவைதான்.இவ்வாசிப்பு எனக்கு வெண்முரசை வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.நாவலின் முன்பு ஐம்பது பக்கங்களும் பின் இருபது பக்கங்களும் இந்நூல் கடல்கோளும் முந்தைய அதற்கு பிந்தைய கடற்கரையும். போல் இருக்கிறது. சமீபத்தில் கண்ணகி கோயிலுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்பு இரண்டாவது முறையாக சென்று வந்தேன்.எழு மலைகளின் சிகரத்தில் உச்சியில் பெரியாற்றின் கரையில் தான் எரித்த மதுரையின் வெம்மை கண்டு மனம் குளிர்ந்து...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாத கூட்டம் நேற்று (10 06 2018) நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமகால இளம் எழுத்தாளர்களாகிய k n செந்தில்( சகோதரிகள் ) சுனீல் கிருஸ்ணன்( பேசும் பூனை ) ஆகியோருடைய கதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சகோதரிகள் குடித்து குடித்து தனக்கு வரும் பொருளாதார வாய்ப்புகளைக் கூட மறுத்து .இறுதியில் தன் வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் (சிற்பம் செதுக்குதல்) கையில் நகம் பிய்ந்து தன் இயலாமைக்காக அழும் விஸ்வம் குடியால் ரோட்டில் படுத்துகிடக்க வேண்டி வரும்போது .. பள்ளிக்கு போய் கொண்டிருந்த திலகா தாயால் அடித்து பலவந்தமாக வேலைக்கு அனுப்பப்படுகிறாள். பின் அவளின் தங்கையும் கணவனுடன் எதிர்பார கூடல் ஒன்றின் போது உருவான கருவை .தன் கஸ்டங்களை போக்க வந்த ஆண் மகன் என நினைத்து அத்தனை பழிச்சொற்களுக்கும் மத்தியில் அக்கருவினூடே தன் கனவை சுமக்கிறாள் .தாய் இந்திராணி. அவள் கனவு அவளை கேலி செய்வது போல மீண்டும் ஒரு மகள் தீபா... தாயின் காலம் கடந்த கருவை அறிந்து மகளுக்கு வரும் திருமண பந்தம் அனைத்தும் நின்று போகிறது. வீட...