சீர்மை நாவல் ஒரு பதிவு

நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக் கூட்டம் இன்று திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளாராகிய அரவிந்தனின் சீர்மை நாவல் பேசுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சிறுநாவல் கென் வில்பர் என்ற அறிஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு வகையான ( Biograpahical fiction). தன் வாழ்வின் முப்பது வயது வரை மற்றவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் கென் வில்பருக்கு. திடீரென மனதில் ஒரு மெல்லிய துக்கம் பரவுகிறது. மெல்ல அத்துக்கம் தேடலாகி மாறி அவரை அழைக்கழிக்கிறது. எதேச்சையாக தன் புத்தகவெளியீட்டில் சந்திக்கும் ஒருவரின் தூண்டுதல் மூலம் உலகில் சமகாலத்தில் நிகழ்ந்து வரும் ஒட்டுமொத்த அறிவுத் துறையையும். ஒன்றாக இணைக்க முடியுமா? என்ற மாபெரும் முயற்சியில் ஈடுபடத்தொடங்குகிறார். இதற்கிடையில் அவருக்கு நண்பர்கள் ஏற்பாட்டின் மூலம் த்ரேயா என்ற பெண்ணுடன் திருமணமாகிறது. மகிழ்ச்சியான அவர்களின் திருமண வாழ்க்கையில் பெரும் அதிர்சசியாய் சிறிது நாட்களுக்குள்ளாகவே த்ரேயாவிற்கு புற்று நோய் இரு...