குற்றமும் பழியும்

நதிக்கரை இலக்கியவட்டம் வாசகசாலை அமைப்பு இணைந்து நடத்திய எழுத்தாளர் தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவல் பற்றிய கூட்டம் கடந்த ஞயிறு அன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேவிபாரதி அவரின் மனைவியோடு நேரில் கலந்து கொண்டார். தமிழின் சிறுகதை, நாவல் வடிவத்தில் மொழி, கதைகூறு முறை வடிவம் சார்ந்து. புதுமைகளை முயற்ச்சிப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் தேவிபாரதி இது அவருக்கு கூடி வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக விளிம்பு நிலை மக்களின் வாழ்கையைப் பற்றி எழுதும் போது அறியமலோ அறிந்தோ வந்து ஒட்டிக் கொள்ளும் முற்போக்குத் தனம் இதில் அறவே இல்லை என்பதே இந்நாவலை தனித்தன்மை. சிறு வயதில் தானக்கு தெரிந்த பெண். வட்டிக்கடைக்காரன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படிகிறாள். அதை நேரில் பார்க்கும் சிறுவன் அவளுக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியாவிட்டாலும். அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து ஒரு அரிவாளை எடுத்து அவனை நோக்கி ஓங்குகிறான் . கையில் வைத்திருக்கும் அரி...