கடிதம் சிறுகதை
கடிதம் சிறுகதை "இன்னும் கொஞ்ச நாள்ல ஜீவா வயசு க்கு வந்துற்வா இப்பவே அடிவயிறு வலிக்குதுன்றா இவனுக்கும் கொஞ்சம் வெவரம் தெரிய ஆரம்பிச்சிருச்சு . அம்மா இருக்கும் வீட்டை எனக்கு குடுக்க அண்ணனும் சரின்ருக்கான் நான் போறேன் சிம் மாத்திட்டேன் போன் பண்ணவேணாம்." கடும்கோடையின் இரவு... பகலில் உறிஞ்சிய வெப்பத்தை இரவில் துப்பிக்கொண்டிருந்தன வீட்டின் சுவர்கள். குடிசையின் புழுக்கத்தோடு காற்றின் வெப்பமும் அவன் உடல் மீதுபட்டு தோல்கள் எரிவது போலிருந்தது தொண்டை வறண்டு அவனுக்கு தாகம் எடுத்தது! மெல்ல எழுந்து வீட்டின் மூலையில் மணல் பரப்பி அதன் மேல் வைக்கப்பட்டிருந்த மண்பானையை திறந்தான் சில்வர் டம்ளரில் தண்ணீர் அள்ளி கையில் வைத்து அழுத்தி அதன் குளிர்ச்சியை உணர்ந்தான்..கன்னத்தில் வைத்து தேய்த்தான் பின் கை விரல்களின் சூட்டால் நீரின் தன்மை மாறக்கண்டு மெல்ல பருகத் தொடங்கினான் நீரின் குளிர்ச்சி உடலின் உள்ளே ஊறிச்செல்வதை அனுபவித்தான். மிச்சம் இருந்த ஓரிரு துளிகளை தரையில் கொட்டினான் சிமென்ட் தரையில் சொட்டிய நீர் துளி இரு வட்ட உருவங்களை உருவாக்கி அவ...