ஆதாமின் மகன் அபு
ஆதாமின் மகன் அபு என்னும் அத்தர் வியாபாரியின் வாழ்நாள்
ஆசை மனைவியோடு ஒரு ஹஜ் பயணம். இனியோரு ஹஜ் பயணத்திற்கு இருப்போமா! என்ற கேள்வியால்
இந்த வருடம் போய்த்தீருவது என முடிவுசெய்கிறார்.அரசின் ஹஜ் கமிட்டியில் இடம்
கிடைக்காது என்ற சந்தேகத்தால்ஒரு தனியார் டிராவல்ஸ் மூலம் செல்ல முயற்சிக்கிறார்.வீட்டில்
இருந்த பசுமாடுகள்.மனைவி கழுத்தில் இருந்த நகைகள்,முற்றத்தில் நிற்கும் பலா மரம் உட்பட அனைத்தும் விற்கப்பட்டு பயண ஏற்பாடு நடைபெறுகிறது
.பயணத்திற்கு
ஒருவரம் முன்பு சந்தைக்கு சென்று தேவையான அனைத்தும் வாங்கி வரும்போது பலாமரம்
முறிக்கப்பட்டு கிடக்கிறது. மாலை பணம் வாங்க செல்லும் போது தான் மரம்
புழுத்துபோயிருப்பது தெரிய வருகிறது மரத்திற்கு பேசிய விலையில் பாதிவிலைக்கு கூட
மரம் தகுதி இல்லாமல் இறுக்கிறது இருந்தும் மர வியாபாரி ஜான்சன் தான் முன்பு
உறுதியளித்த முழுத்தொகையை தர முன்வருகிறார் ஆனால் அபு வாங்க மறுத்துவிடுகிறார்.
.நண்பரான பள்ளி ஆசிரியர் பணம் அளிக்க முன் வரும்போதும்
உடன் பிறக்காதவர் அளிக்கும் பணத்தை ஏற்க நபி அனுமதிக்கவில்லையென்று
மறுக்கிறார்.டிராவல்ஸ் ஏஜன்ட் ஆஸ்ரப் மீதிப்பணம் ஒரு பெரிய விசயமில்லை.தன்
அம்மாவும் அப்பாவும் ஹஜ் போக ஆசைப்பட்டதை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை அதை தங்களை
தந்தையும் தாயுமாக நினைத்துக்கொள்வதாக கூறி அவரை பயணத்திற்கு சம்மதிக்க வைக்க
முயலுகிறார் ஆனால் அபுக்கா நாங்கள் போகவிரும்புவது தங்களுடைய ஹஜ்ஜிற்கு என்றும்
அஸ்ரப்பின் உதவியேற்றுப்போனால் அது தங்களுடைய ஹஜ் பயணமாக இருக்காது!அஸ்ரப்பின்
பெற்றோர்களுக்காக தாங்க்கள் மேற்கொள்ளும் பயணமாக இருக்கும் எனக் கூறி மறுத்துவிடுகிறார்!
தன் மனைவி
நீங்கள் மட்டும் போய்வாருங்கள் என்றதற்கு தான் கண்ட ஹஜ் பயணத்தில் என்னுடன் நீயும்
இருந்தாய் என்கிறார் .வீட்டையும்
சுற்றியிருந்த நிலத்தையும் விற்றுவிட சொல்லும்போது தனக்கு பின் அவளின் (மனைவியின்)
நலன் கருதி அந்த முடிவையும் மறுத்துவிடுகிறார்.அவ்வாறு இறுதியாக அவர்களால் அந்த ஆண்டு ஹஜ் பயணம் போக முடியாமல் போகிறது. புனித ஹஜ்
பெருநாள் காலையில் தங்களின் பயணம் தடை பட்டதற்கு காரணம் என்ன என படுக்கையில்
கண்விழித்தவாறு யோசிக்கிறார் அபு! சாளரத்தை நோக்கிய போது தான் தெரிகிறது எல்லாம் சரியாக நடந்திருக்க வீட்டிற்கு வெளியே முற்றத்தை நிறைத்திருந்த பலா
மரம் வெட்டப்பட்டு அதிகாலை இருளில்
முற்றம் வெறுமையை நிறைத்திருக்கிறது ! தன் மனைவியின் பெயரை விளித்து (ஐசு ) நாம் ஹஜ் பெருநாளுக்கு போகமுடியாமைக்கு காரணம் வெட்டப்பட்ட பலா மரம் தானோ? பாவம் அதுவும் ஒரு உயிர்தானே? என்கிறார்.
அன்று ஹஜ்
பெருநாள் காலையில் எழுந்து முதல் வேளையாக ஒரு
புதிய பலாக்கன்றை முற்றத்தில் நட்டுவைக்கிறார். பின் காலைநேர தொழுகைக்காக பள்ளிக்குச்செல்ல
துவங்கும்போது .இறந்து போன உஸ்தாதின் குரலில்
பள்ளியிலிருந்து (வாங்கு) கேட்கிறது .படம் முடிகிறது கேட்ட அந்த குரல்
யாருடையது! உஸ்தாதுனுடையதா?
அல்ல நபிதான் உஸ்தாதின் குரலில் பள்ளிக்கு வந்திருக்கிறாரோ
என எண்ணத்தோன்றுகிறது தோன்றுகிறது .படம் பார்த்து முடித்ததும் ஏனோ வண்ணதாசனின்
சிறுகதை ஞாபகம் வந்தது. பள்ளியில் குற்றாலத்திற்குச் செல்ல இந்த வருடமும் முடியாத
ஒரு சிறுவன் மழைபெய்யும் வீட்டின் முன் விழும் நீரை கண்டு குற்றால அருவியாய்
ஆர்ப்பறிக்கும் போது தாய் அவன் எங்கே சென்றிருக்கிறான்
என(மகனை) கேட்டதற்கு தந்தை சொல்லும் ஒரே
வார்த்தை………குற்றாலத்திற்கு
ஒவ்வொருவருக்குள்ளும் கொட்டிக்கிடக்கும் ஏராளாமான நிறைவேறா
கனவுகள்.தீ தீண்டிய வடு போல மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் ஒருவன் மரணிக்கும் தருணம் வரை
கூட வரும் .அபுவால் அடுத்த வருடம் ஹஜ்ஜிற்கு செல்ல முடியுமா?.சிறுவன் குற்றாலத்தை
காண்பானா.ஒரு வகையில் நிராசைகளின் கூட்டுத்தொகைதான் இம்மொத்த உலகமோ!
கருத்துகள்
கருத்துரையிடுக