நதிக்கரை இலக்கியகூடுகையின் மூன்றாவது  கூட்டம் இனிதே நிறைவடைந்திருக்கிறது .முழுக்க முழுக்க சிறுகதை அமார்வாக இக்கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.தமிழில் வெவ்வேறு காலகட்டங்களில்  எழுதப்பட்ட தமிழ் சிறுகதை அமைப்பில் புதிய சாத்தியங்களை உருவாக்கிய கதைகளான.
பிரபஞ்ச கானம் ­- மெளனி
ரத்னாபாயின் ஆங்கிலம்  - சுந்தரராமசாமி
காற்று – கு.அழகிரிசாமி
கரடி – ஜெயமோகன்
விபத்து – அசோகமித்ரன்
                      ஆகிய கதைகள் விவாதிக்கப்பட்டது இக்கதைகளைப் பற்றிய எனது எண்ணங்கள்

பிரபஞ்ச கானம்
தமிழ் சிறுகதை எழுத்தில் வாசகனுக்கு உட்சபட்ச சாவாலை அளிக்கக்கூடியது மெளனியுனுடை சிறுகதைகள்.முற்றிலும் அகவயத்தன்மை கொண்டு டைரி குறிப்புகளைப் போல எழுதும் நடை.தமிழ் சிறுகதைகள்  மூலவர் என புதுமைப்பித்தனால் பாரட்டப்பட்டவர். இக்கதையில் எதிர் வீட்டில் வசிக்கும் ஆண் பெண் இருவர். நன்றாகப் பாடும் பெண் ஒரு கட்டத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு பாடமுடியாமல் போகிறது.பாடினால் அவள் உயிர் போய் விடும் எனும் நிலை இருந்தும் கதையில் இறுதியில் அப்பெண் பாடுகிறாள். இறந்தும் போகிறாள்   வெகு குறைவான புறவயமான நிகழ்வுகள் நாயகனின்  அகவய எண்ணங்களே கதையின் பகுதி பக்கங்களை நிறைக்கிறது.நாயகன் நாயகியின் உடல் மொழியைப்பற்றி ஏன் யாருடைய உடல் மொழியைப்பற்றியும் எந்த விவரனைகளும் இல்லை. மெளனியின் கதைகளை  பல முறை படித்து விவாதித்தால்  மட்டுமே முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும் என தோன்றுகிறது!


காற்று;
 தமிழில் குழந்தைகளின் பெண்களின் மன உலகை சிறப்பாக சித்தரித்தவர்களில் முதன்மையானர் கு.அழகிரிசாமி.இவரின் இக்கதை காற்றுக்காக ஏங்கி உயிர் துறக்கும் சிறு குழந்தையைப் பற்றியது.குறைவான உரையாடல்களை கொண்டு முழுக்க ஆசிரியரின் விவரிப்பில் விரியக்கூடியது இக்கதை. சிறு கதைக்கான ஒரு இலக்கணமான திடீர் திருப்பம் இக்கதையில் இறுதியில் குழந்தைக்கு ஏற்படும் மரணம் மூலம் நடக்கிறது. இன்று நகரச்சூழலில் வாழும் பெரும்பாலான குழந்தைகளின் வாழ்க்கையை நினைவு படுத்தும் விதமாக இக்கதையின் கரு அமைந்திருகிறது.

ரத்னாபாயின் ஆங்கிலம்;
 சிறு வயது முதலே அம்மாவால் பேரழகி    என போற்றப்பட்டு வளர்க்கப்படும் ரத்னாபாய்க்கு இளமையில் ஆங்கிலமும் கைகூடி வருகிறது.  மோசமான கணவர்.ஆங்கிலத்தில் உயர் கல்வி படிக்க முடியாமை. பிள்ளைகளின் மோசமான நிலமை என ரத்னாபாயை துரதிஸ்டம் துரத்துகிறது. இருந்தும் தான் படித்த கவிதையை தான் வாங்கிய புதிய சேலையாக  உருவகித்து தன் தோழிக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள் . அவளின் ஆங்கில விவரிப்பில் மனம் மயங்கிய தோழி தனக்கும் தன் தோழிகளுக்கும் அதே போன்ற சேலையை வாங்கித்தருமாறு பதில் கடிதம் எழுதுகிறாள்.  தான் வாங்காத சேலையை வாங்கியதாக கடைப்பையன்களிடம் தான் வாங்கிய   சேலைகளை காட்டுமாறு கூறுகிறாள் பையன்கள் திருதிருவென விழிக்கிறார்கள் இறுதியில் மூன்று சேலை வாங்குவதற்கு ஐம்பது ரூபாய் முன் பணமும்  தோழிக்கு கடிதம் எழுதுகிறாள். அதில் ஒரு வரி “சேலைக்கு பணம் கொடுத்தால் எனக்கு கெட்ட கோபம் வரும்”  கடைசியில் சு ரா அக்கதையை இவ்வாறு முடிக்கிறார் நாளை நகை அடகு வைக்க வங்கிக்கு செல்ல வேண்டும் என்பது கடைசி வரையில் ரத்னாபாய்க்கு தோன்றவேயில்ல. இக்கதை சென்ற நூற்றாண்ட்டில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதை என்றார் சுரேஸ் பிரதிப்.  இக்கதையில் வரும் ஆங்கில கடிதங்களுக்கான பகுதியை  சு ரா நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.கடைசி வரை ரத்னாபாய் தன் உண்மை நிலையை உணராமலிருக்கிறாளோ. தன் ஆங்கிலத்தின் மேல் அவள் கொண்டிருந்த கர்வம் கடைசி வரை உடைபடவே இல்லை அதுவே இக்கதையின் அழகியலை கூட்டுகிறது என நினைக்கிறேன். ஒரு வகையில் இக்கதை ஏதோ ஒரு வகையில்  இலக்கியத்திலே மூழ்கிப்போய் எதார்த்த வாழ்க்கையை கோட்டை விட்ட எழுத்தாளர்களுக்கும். உலகியல் வாழ்க்கைக்காக இலக்கியத்தை விட்டவர்களுக்கும் பொருந்தும் போல தெரிகிறது.

கரடி
கரடி ஒன்றை மழுங்கச்சிரைத்தல் என்ற சித்திரத்தோடு கதை துவங்குகிறது.அதற்கான காரணம் பின்னர் விளக்கப்பட்டாலும் வாசகனை கதைக்குள் இழுத்துச் செல்ல இம்முதல் சித்திரம் போதுமானதாக இருக்கிறது. முழுக்க முழுக்க இயல்புவதாதத் தன்மை கொண்ட படைப்பு என்றொ. Magical realism என்றோ இக்கதையை சொல்லிவிட முடியுமா எனத்தெரியவில்லை.
ஜெயமோகன் சிறுகதைகளில் அதிகப்படியான நகைச்சுவை உணர்வு கொண்டதாகவும்.காட்சிபூர்வமானதாகவும் இக்கதை இருக்கிறது. சர்கஸ்அரங்கத்தில் பார்வையாளர்களைப்போல்.கரடியின் ஒவ்வொரு அசைவும் வாசகனால் கூர்ந்து கவனிக்கப்பட்டு ரசிக்கப்படுகிறது.இக்கதையில் கரடி ஒரு குறியீடு என எடுத்துகொண்டால் ஒரு விலங்கை domesticate animal லாக மாற்றுவது. அல்லது ஒரு மனிதனை முழுமையாக  domesticate செய்வது என்ற அர்த்தத்தில் இக்கதையை புரிந்து கொள்ளலாம்

விபத்து

அசோகமித்ரனின் விபத்து சிறுகதை ஒரு சிறுவனுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் அவன் அடையும் மனமாற்றம் பற்றியது.தன் சகோதரியின் மேல் வன்மமும்,மேட்டிமைத்தன்மையும் கொண்ட சிறுவன் தனக்கு எற்பட்ட விபத்து ஒன்றின் மூலம் சகோதரியின் அன்பை உணர்ந்து கொள்கிறான். அசோகமிதரனின் கதைகளில் சிறந்த ஒன்றாக இக்கதையும் கூறலாம் என்றெ நினைக்கிறேன்

இக்கூடுகையில் சிறுகதையின் தோற்றுவாய் வடிவம் பற்றி சுறேஸ் பிரதிப் பேசினார்
தற்போது சிறுகதையின் வடிவங்கள் மாறி வருவதாகவும். வருங்காலத்தில் குறுநாவல்கள் அளவுக்கு சிறுகதைகள் எழுதப்படலாம் என்று குறிப்பிட்டார்.புதிய நண்பர்களின் வருகை மேலும் உற்சாகப்படுத்துகிறது.  அடுத்த நதிக்கரை சந்திப்பை அவலோடு எதிர்பாற்கிறேன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்வு (சிறுகதை)

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

குரோதத்தின் ஆப்பிள்கள் சிறுகதை (மலையாளம் ) சோனியா செரியன்