தாமரைக்கண்ணன் திருமணம்




நண்பர் தாமரைக்கண்ணண் விஸ்ணுபுரம் இலக்கியகூட்டத்தில் எனக்கு அறிமுகமானவர். ஒட்டவெட்டப்பட்ட தலை மீசையில்லாத கண்ணாடி போட்டமுகம். கொங்கு பகுதிக்கே உள்ள சிவப்பு வெகு  இயல்பாக பழகும் தன்மை என தாமரை கண்ணணுக்கே உறிய சிறப்புகள் எராளம். திருமணத்திற்கு அழைத்தபோது. கண்டிப்பாக போக வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.


செவ்வாய்கிழமை நாகையிலிருந்து கிளம்பி. தஞ்சாவுர். அக்காவின் மகனுடன்  ரயிலில் ஹைதராபாத் போக வேண்டியிருந்தது என்னால் தாமரையின்  திருமணத்தை தவிர்க்க முடியவில்லை. கடந்த இரு வாரங்ககளாக இது பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் எனவே ரயிலில் நாங்கள் இருவரும் போகவிருந்த திட்டத்தை மாற்றி அவனை பேருந்தில் டிக்கட் எடுத்து அனுப்பினேன்.

தஞ்சாவூரிலிருந்து அவனை பேருந்தில்  ஏற்றி அனுப்பி வைத்தவுடன் மனம் பரவசம் கொள்ளத்தொடங்க்கியது. நேராக பஸ்ஸில் திருச்சி அங்க்கிருந்து ஈரோடு பேசஞ்சர். செல்வராணி அக்கா காரில் கூட்டிச்செல்வதாக சொல்லியிருந்தார் கூட சாகுல் ஹமீது அண்ணன் கன்னியாகுமாரியிலிருந்து வந்திருந்தார். குறித்த நேரத்திற்குள் சென்று சேர முடியாததால் அவர்களோடு சேர்ந்து செல்ல இயலவில்லை. திருச்சியிலிருந்து  ரயிலில் ஈரோடு நான்கு மணி நெரம் ரயிலில்  போன வேகம் தெரியவில்லை   கையில் தி .ஜா வின் மோகமுள் புத்தகம் இருந்தது. அங்கிருந்து அந்தியூர் அங்கிருந்து ஆட்டோவில் மண்டபம். திருச்சியிலிருந்து  ஈரோட்டுக்கு 35 ரூபாயில் வந்த எனக்கு அந்தியுரிலிருந்துது ஐந்து கிலோ மீட்டர் தொலைவில உள்ள மண்டபத்திற்கு 120 ரூபாய் கொடுக்க கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருந்தது.

தமரையின் தங்கை வாசலுக்கு வந்து அழைத்துச் சென்றார்.சென்ற மழைப்பயணத்தில் அவரை முதன் முறையாக  சந்தித்திருந்தேன். உள்ளே மண்டபத்தில் போட்டோஎடுத்துக் கொண்டிருந்தார்கள். தாமரையின் முகம் 360 டிகிரி வட்டமாக மலர்ந்திருந்தது. பெரிய செர்வாணி கோட்டு சால்வை என. பழைய இந்திப்படங்களில் வரும் ஹீரோ போலிருந்தார். 

நீங்க அவனுக்கு காலேஜ் பிரண்டா இல்ல வேலை செய்யிற இடத்தில் பிரண்டா என்று கேட்டவர்களுக்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதிலை சொன்னேன்.
இரவில் மாப்பிள்ளை சொந்தபந்தங்கள் நண்பர்கள் என எல்லோரும். மணமகன் அறையிலேயே படுத்துக் கொண்டோம். நான் மாப்பிள்ளை அருகில் படுத்துக் கொன்டேன்.இதற்குள் மணமகண் அறைக்குள்ளே தம்பதிகளுக்கு போட்டோஸூட். தாமரையின் மாமா  இளங்கோவன் நல்ல இலக்கியவாசகர். அவர்களுடைய பையன் ஜெயமோகனின் பனிமனிதன் புத்தகம் படித்திருக்கிறான். விஸ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்கள் புத்தகம் பரிசளிதிருந்தார்கள். அதை பார்த்தவடன் தாமரை மாமா என்ன மாப்ள இப்பயே படிக்க ஆரம்பிச்சிருலாமா என்றார். 

காலையில் 4.30 க்கு   நான் எழுந்தபின்பும்  அருகில் படுத்துக் கிடந்த மாப்பிள்ளை இன்னும் எழுந்திருக்கவில்லை. மெல்ல மணி நாலரை தானே ஆகுது என்றூ சொல்லிவிட்டு திரும்பி படுத்தவனை தாமரை அம்மா மெல்ல வந்து  எழுப்பி தாமரை காதில்
தம்பி மூணூ முடிச்சு நல்லா இருக்கமான போடனும்.என்றவுடன் உற்சாகமாக எழுந்துகொன்டான்
அருகில் இருந்த நான் என்னா தாமரை ட்ரெயினிங் எடுத்துருக்கியா? முடிச்சு போட என்றேன். காலை காலை 6 லிருந்து 7 முகூர்த்தம் அம்மா அப்பா மாமா என ஒவ்வொருவரும் சொல்வதை  தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கொண்டு  செய்துகொண்ட தாமரையை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருந்தேன் நாளை என்னையும் இப்படியெல்லாம் பண்ணச்சொல்வார்களா? அவ்வப்போது என்னைப் பார்த்து புருவத்தை தூக்கி காண்பித்தான். ஏன் என்று தான்தெரியவில்லை. காலையிலேயே சாகுல் ஹமிது, செல்வராணி அக்கா வந்து சேர்ந்தார்கள்.

பெரிய புதிய மண்டபம். கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. பொதுவாக. திருமண வீடு மற்ற விசேசங்ககளுக்கு நண்பர்கள் அழைக்கும் போது கூடுமானவரை தவிர்க்க பார்ப்பேன். . கூட்டமும் வெற்று பேச்சும். ஆடைகளில் அணிந்து வந்து ஒவொருவரும் காட்டும் படாடோபமும் எனக்கு பெரும் அலுப்பூட்டுபவை. தாமரை கல்யாணத்தில் அது குறைவென்பதால் நிம்மதியாக இருந்தது.


தாமரையிடம் விடை பெற்று மூன்று பேரும் காரில் கிளம்பினோம். காரில் ஏறியவுடன். எங்காவது செல்லலாம் என்றார் செல்வராணி அக்கா. நான் பர்கூர் என்றேன். அது பழங்குடிகளான சோளகர்கள் வாழக்கூடிய மலைப்பகுதி. அதற்குள். ஒகனேக்கல் போலாமா என்றார்கள். அந்தியூரிலிருந்து நூறு கிலோமீட்டருக்குள் தான் என்றது கூகுள் மேப். வழியை பின் பற்றி போனபிறகுதான் தெரிந்தது. அது காரை நிறுத்துஇவிட்டு படகில் சென்று மறுபடியும் பேருந்தில் செல்வதற்கான வழியென்று. அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தபோது. நிறையபேர் இவ்வழி தெரியாமல் வந்துவிடுவதாகச் சொன்னார். (நாம் மட்டுமல்ல என்பதில் ஒரு நிம்மதி. பின்னே கொளத்தூர் வழியகாக பென்னகரம் அங்கிருந்து ஒகனேக்கல்).


வண்டியை பார்க் செய்து விட்டு வந்தபோது உள்ளே மீன் கடைகளும் பழைய பரிசல்களை கவிழ்த்துப் போட்டிருந்த குடிசையுமாக இருந்தது. மீன் வாடை மூக்கை துளைத்தது. ஒகனேக்கல் வருபவர்கள் முதலில் மீன் வங்க்கி சமைக்க கொடுத்து விடவேண்டும் பின் பரிசல் பயணம், குளியல் பின் வந்திருந்து மீன் சாப்பாடு. இது ஏதோ ஒரு விதிமுறைபோலிருந்தது. மூவரும்  பரிசலில் ஏறிக்கொண்டோம். ஆரம்பத்தில் நீர் வந்த ஒழுக்கில் பரிசல் சென்றபோது. துடுப்பு போடுவது என்ன பெரிய விசயம் என்று நினைத்த நான் ஓவென்று பெரும் பாறையிலிருந்து கொட்டிய நீரின் நீரோட்டத்தில் பரிசல் எதிர் நீச்சல் போட்ட போது வாயடைத்துப் போனேன். படகை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு ஆர்ப்பரிக்கும்  அருவிநீரில் ஒரு குளியல்.  கூட்டம் அதிகமில்லாததால் நன்றாக குளிக்கமுடிந்தது .

 ஒகனேக்கல் கர்னாடகாவிலிருந்து புறப்படும் காவிரி தமிழகத்திற்குள் தலைவைக்குமிடம்.ஆர்பரித்து தன் பெரும் வருகையை அறிவித்துக்கொண்டு வெள்ளை நாகாமாய் சீற் சீறி நுரைத்து நுரைத்து  கொண்டிருந்த நீரை பார்த்துக் கண்கொட்டாமல் பார்த்துக் கொன்டிருந்தேன். பின் மீண்டும் கரையில் வந்து மீன் சப்பாடு. அல்சர் இருப்பதால் காரம் அதிகமாக சாப்பிடமுடிவதில்லை, கொஞ்சநேரம் வெயில் நடந்தாலே வயிற்றெரிச்சல்  வந்துவிடுகிறது.

ஒகனேக்கல் விரைவில் மோசாமான சூழியல் கேடு நிலையை அடைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுபோன்ற இடத்தில் சூழியல் விழிப்புணர்வு என்பது துளி கூட இல்லை. மது பாட்டில்களும் குப்பைகளும் சிதறிக்கிடங்கின்றன. பரிசல் போக்குவரத்து. மீன் சாப்பாடு என எதுவும்  முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மீன் சாப்பாட்டோடு மதுக்குப்பியை அனேகமாக் எல்ல சாப்பாட்டு மேஜையிலும் பாறைகளின் இடுக்குகளிலும்  காண முடிந்தது. .


சாகுல் அண்ணணிடம் மதுவை தடை செய்தால் போதும் பாதி கூட்டம் இங்கு வருவது குறைந்து விடுமென்றேன். பின் அங்க்கிருந்து நேராக திருச்சி கிட்டத்தட்ட ஐந்து மணிநேர பயணம். பே சாகூல் அண்ணன் பேசிக்கொன்டிருக்கும் போதோ உறங்க்கிவிடுவார். பின் டக்கிகென எழுந்துவிடுவார். வலது சாரி இடது சாரி என்றால் என்ன என்று கேட்டவர் செல்வராணி அக்கா அளித்த விளக்கத்தை பார்த்துவிட்டு மெல்ல சாய நாங்கள் இருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டு வந்தோம். இலக்கியம், சினிமா, பாட்டு எனபேச்சு நீண்டது. திருச்சியிலிருந்த பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் என்னை இறக்கிவிட்டு இருவரும் கிளம்பினார்கள். ஒழுங்கா வேலைக்கு போ…என்பதோடு எங்கள் முடிந்தது உரையாடல்.

  சாகூல் அண்ணனிடம் கட்டி பிடித்து விடைபெற்றுக் கொண்டேன். நாகை பஸ்ஸில படுத்தவன் விழித்தபோது திருவாருர் வந்திருந்தது, அடுத்த விழிப்பின் போது நாகப்பட்டினம். இனிமேல் பேருந்தில் செல்லும் போது கடுமையான உடலுலைப்பு செய்து விட்டு போனால் போதும் பேருந்து அலுப்பு தெரியாது என நினைத்துக் கொன்டேன். கிளம்பும் போது இப்பயணம் இப்படி முடியுமென்று எதிர்பார்க்கவில்லை முழுப்பயணத்திலும் பேருந்து ரயில் கட்டனத்தை தவிர வேறு எதுவும் செலவில்லை. எல்ல செலவையும் செல்வாராணியக்காவும் , சாகுல் அண்ணனும் தான் செய்தார்கள்.

இலக்கியம் ஒருவனுக்கு எதை அளிக்கும்அறிவு, ஞானம், பணம், புகழ் என்பதை விட உலகில் சில நல்ல மனங்களை நமக்கு அடையாளம் காட்டுமென்பதை இது போன்ற தருணங்களில் உணர்ந்து கொள்கிறேன்

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்வு (சிறுகதை)

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

குரோதத்தின் ஆப்பிள்கள் சிறுகதை (மலையாளம் ) சோனியா செரியன்