குற்றமும் பழியும்
நதிக்கரை இலக்கியவட்டம் வாசகசாலை அமைப்பு இணைந்து
நடத்திய எழுத்தாளர் தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவல் பற்றிய கூட்டம் கடந்த ஞயிறு
அன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தேவிபாரதி அவரின் மனைவியோடு நேரில்
கலந்து கொண்டார். தமிழின் சிறுகதை, நாவல் வடிவத்தில் மொழி, கதைகூறு முறை வடிவம் சார்ந்து. புதுமைகளை
முயற்ச்சிப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் தேவிபாரதி இது அவருக்கு கூடி வந்திருக்கிறது என்றுதான்
சொல்ல வேண்டும்.
பொதுவாக விளிம்பு நிலை மக்களின் வாழ்கையைப் பற்றி எழுதும்
போது அறியமலோ அறிந்தோ வந்து ஒட்டிக் கொள்ளும் முற்போக்குத் தனம் இதில் அறவே இல்லை என்பதே இந்நாவலை தனித்தன்மை.
சிறு வயதில் தானக்கு தெரிந்த பெண். வட்டிக்கடைக்காரன்
ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படிகிறாள். அதை நேரில் பார்க்கும்
சிறுவன் அவளுக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியாவிட்டாலும்.
அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து ஒரு அரிவாளை எடுத்து அவனை நோக்கி
ஓங்குகிறான் . கையில் வைத்திருக்கும் அரிவாளை பிடிங்குபவனின்
முன் நிலையில்லாமல் நிற்கும் சிறுவன். தன் மத்திய வயதில் மீண்டும் அவனை
சந்திக்கும்போது. கிட்டத்தட்ட அதே கையாலாத நிலைமையில் இருக்கிறான். தன்னை அவனால்
திரும்ப அறியமுடியாது என்னும் ஒரே பலத்தால் அவனை பழிதீர்க்க நெருங்குகிறான்.
ஒரு கட்டத்தில் அவனைக் கொலை செய்ய கிடைக்கும் எளிதான வாய்ப்பினையும் தவற விடுகிறான். அவனக்கு பதிலாக அவன்
பெண்ணின்மீது வஞ்சம் தீர்த்துக் கொள்கிறான்( அல்லது அவளுடன் வலுக்கட்டாயமாக உறவு
கொள்கிறான்)
அவனை சந்தித்து பழி தீர்ப்பதை பற்றி
சாரதாவுடன்(பாதிக்கப்பட்ட பெண்) பேசுகிறான். அவள் தன் கையால் அவனை பழி தீர்க்க
வேண்டுமென்கிறாள். கருணாகரனின் (வட்டிக்கடைக்காரன்)
மகன் செய்யும் ஒரு கொலையால் விரைவாக அவன் சாம்ரஜ்யம் உச்சத்திலிருந்து பாதளத்தை
நோக்கி விழுகிறது. கருணாகரணின் மரணத்தின் இறுதிக்கணத்தில் அவனை சந்திக்கும் சாரதா.
தான் பழி வாங்க நினைத்தவன் இவன் அல்ல என்று சொல்லிவிட்டு செல்கிறாள்
நாவலில் அசிரியர் மெளனப்படுத்தும் அல்லது சொல்லாமல்
விடும் இடங்கள். நம்மை மேலதிகமான மேலதிகமான வசிப்புக்கும் கேள்விகளை எழுப்பிக்
கொள்ளவும் இழுத்துச் செல்கிறது. உதராணமாக…
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண் பெயர் தவிர
அவளுக்கும் கதை சொல்லிக்குமான உறவு தெளிவாக குறிப்பிடப்படவில்லை. (இதை
வெண்டுமென்றே செய்தாக தன்னுடைய ஏற்புரையில் சொன்னார்.
கதை சொல்லியின் குடும்பம் குறித்து குறிப்பாக அவனுடைய
தாயின் உடல் நிலை, தங்கை வீட்டில் வந்தமர்ந்திருப்பது பற்றி எந்தவொரு பெரிய
விவரணைகளோ, தகவல்களோ இல்லை.
அவன்
சுலோச்சனாவைப் பார்க்க பள்ளிக்கு சென்று திரும்பும் போது அவனைப் பின்தொடர்ந்து
வரும் இளைஞன் நீங்க கருணாகரணா என்று கேட்கும் இடம். உண்மையில் நடந்ததா அல்லது
அல்லது கதைசொல்லியின் நினைவா என்பதைக் குறித்து தெளிவு இல்லை.எனவே இதை
கதைகூறுவதில் உள்ள உத்தி( எதார்த்தவதத்திலிருந்து மாய எதார்த்தவ்வாதத்திற்குச்
சென்று மீண்டும் எதார்த்த வாதத்திற்கு திரும்புதல்) என்று தான் புரிந்து கொள்ள
வேன்டியுள்ளது.
இறுதியில்
கருணாகரணின் வீட்டிற்குச் சென்று அவனின் பழைய புகைப் படத்தை பார்த்து விட்டு. அவன்
அறைக்குள் செல்லும் கருணாகரனிடம். அவள் பேசினாளா. அவர்களுக்குள் நடந்த உரையாடல்
பற்றிய விவரிப்பு ஏதும் இல்லை. வெளியில் வந்தவள் கதைசொல்லியிடம். இது அவன் இல்ல
வேற யாரோ என்று சொல்லும் போது உண்மையில் நமக்கும் ஒரு கணம் அது வேறு யாராகவோ
இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனால் உண்மயில் அவ்வாறு இருந்தால்அவ்விடத்தில்
அவளுக்கு தோன்றும் குற்ற உணர்ச்சியை அங்கு அவள் அடைய வில்லை! என்பதைக் கொண்டே
அக்கருத்தை மறுக்கவும் முடிகிறது.
எனவே உடல் நைந்து படுக்கையில் மலம் கழிக்கும் நிலையில்
கிடக்கும் அவன் அவளைக் வளைத்துப் பிடித்து தன் ஆகிருதியால் அவளை புணர்ந்தவன் அல்ல. இப்போது அவனிடம் இருப்பது
அவன் செய்த பாவங்களின் தண்டனைகான தொகுப்பு மட்டுமே அன்பதை அவள்
உணர்ந்திருப்பதாலேயே. அவள் கதை சொல்லியிடம் அவ்வாறு சொன்னதாக நினைக்கவும்
முடிகிறது. இவ்வாறான மெளனப்படுத்தல்கள் இந்நாவலுக்கான பலம் என்றே சொல்லவேண்டும்
ஒரு பெண் தன்னை பாழியல் வண்புணர்வு
செய்தவனானாளும் தன்னை அறிந்த அல்லது அவளே
அவளை அறிந்து கொண்ட முதல் கணம் அவனாலயே நடந்திருக்கிறது எனவே. அம்முதல்வனிடம்
இருந்த ஒரு ஈர்ப்பாக இருக்காலாம் என்ற அவதானிப்புக்கும் இடம் இருக்கிறது
(அவதானிப்பு சுரேஸ் பிரதிப்)
இவ்வாறு
பல மாறுபட்ட வாசிப்பை வாசிக்கு முடிவதாலும். குற்றத்தையும் பலியையும்
விசாரனைக்குட்டபடுத்தியிருப்பதாலும் நிழிலின் தனிமை தமிழின் சிறந்த நாவல் என
கருதுகிறேன்.
இந்நாவலை வாசித்தபொழுது இக்கதையில் வரும் கதைசொல்லியின்
கதாபாத்திரம் குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கால்னிகோப் கதாபாத்திரத்தை
நினைவுபடுத்த தவறுவதில்லை. ரஸ்கால்னிகோப் செய்யும் கொலையை அவன் அதிக வட்டிக்கு
கொடுத்த வட்டிக்கடைக்கார கிழவியை கொள்கிறான். என்றும் சுருக்கியும் மானுட
குலுத்திற்கு அவனால் சிறு நன்மைக்கு வேண்டி ஒரு தீமையை எதிர்க்கிறான் என்றும்
விரித்தும் வாசிக்காலம்.
தன் கண்ட ஒரு காட்சியில் தான் அரிந்த பெண் ஒருவரூக்கு
நேர்ந்த ஒரு சம்பவத்தை கண்டு அதை செய்தவனை
பழி தீர்க்க முயல்கிறான் என்று சுருக்கியும் மானுட குலத்தின் பெண்களுகான காவலனாக
தன்னை நினைத்துக் கொண்டு. தன் தகுதியை மீறி தன்னால் இயலாத ஒரு காரியத்தை செய்ய
முயற்சிக்கிறான்.என்றும் நிழலின் தனிமை நாவலை விரித்துக் கொள்ளலாம். ( கவனிக்க இரண்டு பேரும்
வட்டித்தொழில் ஈடுபட்டவர்கள்)
தாஸ்தாய்வொஸ்க்கியின் கதபாத்திரங்ககளின். தனித்தன்மை என்பது
தனிமையும், அதனால் அடையும் மனநெருக்கடி, அழுத்தப்பட்டு பீய்ச்சி தெறிக்கும் காமம்.
நிலையில்லாத அலைதல். என்பதை கூறலாம்
உதரணமாக ரஸ்கால்னிகோப், திமித்ரி,
குருசென்கா, நட்டாசிய பீலிப்போவ்னா…
நாவலில் வரும்
கதைசொல்லியின் நிலையும் ஏறக்குறைய அதுவே என்பதில் ஐயம் இல்லை.
ரஸ்கால்னிகோப்பின் அபத்தம் என்பது வட்டிக்கார கிழவியின்
வீட்டில் உள்ள பெண்ணை கொலை செய்வது. அவன் அதை திட்டமிட்ருக்கவில்லை. தற்செயலாக
நடந்தது. அதேபோல் சுலோசனாவை புணர்வது கிட்டத்தட்ட வண்புணர்வுக்குள்ளாக்குவது அவன்
திட்டமிட்டு செய்வதல்ல. கருணாகரனைக் கொல்ல கிடைத்த சந்தர்பத்தை கடைசி நொடியில்
தவறவிட்ட இயலாமையின் வெறியே அவனை அவளை நோக்கி திரும்பச்செய்திருக்கிறது என்பதை
நம்ம்மால் இயல்பாக புரிந்து கொள்ள முடியும்.
ரஸ்கால்னிகோப் இளைஞன், தான் வாழும் கால கட்டத்தில் நடக்கும் அரசியல் தத்துவ
மாற்றங்ககளில் விருப்பமுடைவன். எனவே அவனிடம் இருக்கும் முற்போக்கை நடு வயதைக்
கடந்து விட்ட கதை சொல்லியிடம் நம்மால காண முடியாமைக்கு. லட்சியவாதம் அற்று போகும்
ஒரு காலத்தில் நாம் வாழ்வதும். கதைசொல்லியின் வயதும் தான் காரணம் என்று
தோன்றுகிறது.
இவற்றிற்க்கான ஒப்பீட்டை இந்த அளவில் நிறுத்திக்ன்
கொள்ளலாம். என்று தோன்றுகிறது.
எளிய உதிரிச்
சமூகத்திலிருந்து வரும் கதை சொல்லி. தன் சாதியால் வறுமயால் சிறுமைப்படும் போதெல்லாம்.
சிறுமைப்படுத்துவர்களை வெல்லத் துடிக்கிறான். அவன் தினமும் முருக்கு விக்கும் திரையரங்க்கில்
உள்ள பெண் ஒருவள் தினமும் அவனை மட்டும் தலையில் கொட்டுகிறாள். முதல் நாள் பள்ளியில் வேலைக்கு வந்ததும் தலைமையாசிரியர்கள்
உட்பட சக ஆசிரியர்கள் அவன் மேல் பார்த்த பார்வை. சுலோசனாவின் மாமியார் அவன் சாதியை
குறிப்பிட்டு பேசும் இடம் இவ்விடங்களில்
அவன் என வாய்ப்பு கிட்டும் இடங்களில் அவன் அவர்களுக்கு நேரடியாக எதிர்வினையாற்றுகிறான்.
முடியாத பட்சத்தில் மனதிற்குள்…
தனக்கு தெரிந்த அல்லது
பழகிய பெண். (கதை சொல்லியால் இவ்வுறவு தெளிவாக எடுத்துச் சொல்லப்படவில்லை) ஒருவேளை
சிறு வயதில் பாலியல் வன்முறைக்குள்ளாவதை கண்டு அவனை பலி தீர்க்க துடிப்பவன். கணவன் கண்முன் மற்றொருத்தியுடன் புணர்வதும்.
சுலோசனாவை கைவிட்டு எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இருப்பதை
பார்க்கும் போது. நாயகன் எல்லா பெண்களையும் ஒரே போல நினைக்கிறான என்பதை
கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியுள்ளது.
பதிமூன்று வயது
சிறுவனாக கத்தியை தூக்கிக் கொண்டு கருணாகரனின் முன் நிற்கும் போது
நிறைய சினிமாப்
பாடம் பாப்பியா?
என்று சொல்லி
அவனிடம் இருந்த கத்தியை பிடிங்கி வீசும் கருணாகரன் என்ற ஆளுமையின் மீது தான் கொண்ட
இயலமையும் வெறுப்பும் தான் அவனை பழிவாங்கச் செய்கிறதா. அல்லது அவன் சாரதாவுக்காக
பழி வாங்குகிறானா என்பது கேள்விக்குள்ளாக்கப்பட
வேண்டும்.
பதின்மூன்று வயது சிறுவனான போது தன்னை பொருட்படுத்தாத
கருணாகரனுக்கு. நாற்பது வயதில் அவனை
பழிதீர்ப்பதாக எழுதும் மொட்டைக்
கடிதத்திற்கு எந்த எதிர்வினையும் இல்லாமல் போவது அவனை மேலும் சீண்டியிருக்க
வேண்டும். அந்த அகச்சீண்டலே கருணாகரனை நோக்கி கதைசொல்லியின்
பழியை உக்கிரம் கொள்ளச் செய்கிறதா?
கதை சொல்லியின் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்.
நிச்சயம் அவனைப் பார்த்ததை சாரதாவிடம் சொல்லியிருக்க மாட்டேன். எனெனில் அவள் மறந்திருந்த ஒரு கொடுங்கனவை
மீண்டும் அவள் முன் சொல்வதின் மூலம் கதை சொல்லி என்ன அடைய முற்படுகிறான். அவளின்
இயல்பான வாழ்வு இதனால் பாதிக்கப்படும் என்பதையும் கதை சொல்லி ஏன் உணரவில்லை ஏனென்றால் தன்னைப்
பொருட்படுத்தாத கருணாகரனை பழி தீர்க்க தன்னுடன் அவன் மீண்டும் சாரதாவை சேர்த்துக் கொள்கிறான் என்று நினைப்பதற்கு
நாவலில் இடம் இருக்கிறது.
கதை சொல்லியின் செயல்களை நியாயப் படுத்த நமக்கு
இருக்கும் வாய்ப்பு என்பது. இயல்பான மனிதனுக்கு கிடைக்கும் எதுவும் அவனுக்கு கிடைக்கவில்லை
என்பதே. அவன் தங்கை வாழவெட்டியாய் வீட்டில் வந்தமர்ந்திருக்கிறாள். அவள் அன்னைக்கு
உடல் நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டிருக்கிறாள். நாற்பதைக் கடக்கும் அவன்
இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சமுகத்தில் அவன் ஜாதியின் காரணத்தால்
தொடர்ந்து முள்குத்து கொண்டு கொண்டே இருப்பவன். என்பதுதான்
ரஸ்கோல்னிகோவ் பழி செய்து அதிலிருந்து தப்பிக்க முயற்ச்சி
செய்து தன் மூளையால தப்பி இறுதியில் சோனியாவின் தியாகத்தின் முன் தன் சிறுமை கருதி
குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைபவன். கதைசொல்லி குற்றத்தை பருவடிவில் செய்யாமல்
அதனை கருவடிவில் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருப்பவன். நேரடியாகா தனியகச் செய்ய
முடியாதலால் அவன் மற்றொராலின் உதவியை நாடுகிறான். இறுதில் அவன் கரு வடிவில்
நிகழ்த்தி விட்ட கொலை பருவடிவில் நிகழ்த்தப்படமலே போகிறது. பழிவாங்கத் துடிக்கும் எண்ணத்திற்கும்
செயலுக்கும் உள்ள தூரமே. இக்கதை என்று இந்நாவலை நான் புரிந்துகொள்கிறேன்.




கருத்துகள்
கருத்துரையிடுக