இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நதிக்கரையோரம்

படம்
சில ஆண்டுகளுக்கு பின் காவிரி ஆற்றில் வெள்ளம் வந்திருக்கிறது. இவ்வருடம் பெய்த பருவ மழையின் கிருபையால் எந்த விதமான ஆர்பாட்டமும் போராட்டமும், தற்கொலையும், இல்லாமல் காவிரி அன்னை நெஞ்சம் நிறைந்து     முலைகனிந்து தன் பிள்ளைகளுக்கு அமூதூட்டியிருக்கிறாள் காவிரி    தென்னகத்தின் கங்கை, கங்கைச் சமவெளி நாகரீகத்திற்கு ஒப்பீடானது காவிரி சமவெளி நாகரீகம். குடகிலிருந்து பூம்பூகார் வரை விரிந்து கிடக்கும் காவிரியின் ஆற்றூப்படுகை தான் தென்னிந்தியாவின்   கலை,இலக்கியம், பண்பாடும் உருவாக காரணமான இடம் ஆகவே காவிரிக்கரையின்      அழகை காண ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தோம்   நண்பர் பாரியிடம் சொன்னபோது போலாமே என்றார். உடனடி திட்டம் நிறைவேற்றப்பட்டது. முதற்கட்டமாக   ஈரோட்டிலிருந்து ஒகனேக்கல் வரை பின் திரும்பி   திருச்சி முக்கொம்பு   வரை காவிரி கரையோரமாக போவது என்று முடிவு செய்தோம். நாகையிலிருந்து ஈரோடு கிளம்பினேன்.   ஈரோடு ரயில் நிலையத்தின் இறங்கியதும் .அன்று காலைதான் கம்போடியா பயணம் சென்று வந்த கிருஸ்ணனுடன் பாரியும் நண்பர்களும் பேசி...