இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காப்காவின் நாய்குட்டி நாவல் வாசிப்பனுபவம்

படம்
  தஞ்சை இலக்கிய கூடல் சார்பாக நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் நாகரத்னம் கிருஸ்ணாவின்  பேசுவதற்கு எடுத்துக் கொண்டார்கள் எதார்த்த வாத நாவலின் சாயலில் அமைந்துள்ள பின் நவீனத்துவ நாவல் என்று இதை கூறலாம். பின் நவினத்துவ நாவல்களின் பண்புக்கூறான carnival தன்மை இந்நாவலில் இருக்கிறது.  நிலபிரபுத்துவ சமூகம் மறைந்து தொழில் மைய சமூகம் உருவாகும் காலகட்டத்தில்தான் ஒரு இனக்குழுவாக இருந்த மனிதன் தன்னை தனிமனிதனாக உணருகிறான். ஆகவே இலக்கியத்திலும் அதுவரை இருந்த   ஒட்டு மொத்த சமுகத்தை எழுதும் எழுத்து முறை மாறி தனி மனிதனின் புற அக உலக நெருக்கடிகளை, கொந்தளிப்புகளை பேசக்கூடிய படைப்புகள் உருவாகின.     தாஸ்தாய்வொஸ்கியின் நிலவரைக்குறிப்புகள் இந்த வகையில் முன்னோடியான படைப்பு. என்றாலும்   காப்கா இந்த வகை இலக்கியத்தின் ஒரு உச்சம் என்பது விமர்சகர்களின் கருத்து. தமிழில் இவ்வகை எழுத்தின் முன்னோடிகளாக நம்முன் இருப்பவர்கள் அசோகமித்ரன். சுந்தராமசாமி. ஜி.நாகராஜன் போன்றோர். சுந்தரராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள் தமிழில் எழுதப்பட்ட முதல் NON LINEAR நாவல் எனச்சொல்லலாம். ...

குற்றமும் பழியும்

படம்
நதிக்கரை இலக்கியவட்டம் வாசகசாலை அமைப்பு இணைந்து நடத்திய எழுத்தாளர் தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவல் பற்றிய கூட்டம் கடந்த ஞயிறு அன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேவிபாரதி அவரின் மனைவியோடு நேரில் கலந்து கொண்டார். தமிழின் சிறுகதை, நாவல் வடிவத்தில் மொழி, கதைகூறு முறை   வடிவம் சார்ந்து. புதுமைகளை முயற்ச்சிப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்  தேவிபாரதி  இது அவருக்கு       கூடி வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக விளிம்பு நிலை மக்களின் வாழ்கையைப் பற்றி எழுதும் போது அறியமலோ அறிந்தோ வந்து ஒட்டிக் கொள்ளும் முற்போக்குத் தனம்   இதில் அறவே இல்லை என்பதே இந்நாவலை தனித்தன்மை. சிறு வயதில் தானக்கு தெரிந்த பெண். வட்டிக்கடைக்காரன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படிகிறாள். அதை நேரில் பார்க்கும் சிறுவன் அவளுக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ளமுடியாவிட்டாலும். அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து ஒரு அரிவாளை எடுத்து அவனை நோக்கி ஓங்குகிறான் .   கையில் வைத்திருக்கும் அரி...

சீர்மை நாவல் ஒரு பதிவு

படம்
நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாதக்  கூட்டம் இன்று திருவாரூர் மாவட மைய நூலகத்தில் நடைபெற்றது. இம்முறை இளம் எழுத்தாளாராகிய அரவிந்தனின் சீர்மை நாவல் பேசுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இச்சிறுநாவல் கென் வில்பர் என்ற அறிஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு வகையான ( Biograpahical fiction). தன் வாழ்வின் முப்பது வயது வரை மற்றவர்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் கென் வில்பருக்கு. திடீரென மனதில் ஒரு மெல்லிய துக்கம் பரவுகிறது. மெல்ல அத்துக்கம் தேடலாகி மாறி அவரை அழைக்கழிக்கிறது. எதேச்சையாக தன் புத்தகவெளியீட்டில் சந்திக்கும் ஒருவரின் தூண்டுதல்  மூலம் உலகில் சமகாலத்தில் நிகழ்ந்து வரும்  ஒட்டுமொத்த அறிவுத் துறையையும். ஒன்றாக இணைக்க முடியுமா?  என்ற மாபெரும் முயற்சியில் ஈடுபடத்தொடங்குகிறார். இதற்கிடையில் அவருக்கு நண்பர்கள் ஏற்பாட்டின் மூலம் த்ரேயா என்ற பெண்ணுடன்  திருமணமாகிறது. மகிழ்ச்சியான அவர்களின் திருமண வாழ்க்கையில்  பெரும் அதிர்சசியாய் சிறிது நாட்களுக்குள்ளாகவே த்ரேயாவிற்கு புற்று நோய் இரு...