காப்காவின் நாய்குட்டி நாவல் வாசிப்பனுபவம்
தஞ்சை இலக்கிய கூடல் சார்பாக நடந்த கூட்டத்தில்
எழுத்தாளர் நாகரத்னம் கிருஸ்ணாவின் பேசுவதற்கு
எடுத்துக் கொண்டார்கள்
எதார்த்த வாத நாவலின் சாயலில் அமைந்துள்ள பின்
நவீனத்துவ நாவல் என்று இதை கூறலாம். பின் நவினத்துவ நாவல்களின் பண்புக்கூறான
carnival தன்மை இந்நாவலில் இருக்கிறது. நிலபிரபுத்துவ
சமூகம் மறைந்து தொழில் மைய சமூகம் உருவாகும் காலகட்டத்தில்தான் ஒரு இனக்குழுவாக
இருந்த மனிதன் தன்னை தனிமனிதனாக உணருகிறான். ஆகவே இலக்கியத்திலும் அதுவரை இருந்த ஒட்டு மொத்த சமுகத்தை எழுதும் எழுத்து முறை மாறி
தனி மனிதனின் புற அக உலக நெருக்கடிகளை, கொந்தளிப்புகளை பேசக்கூடிய படைப்புகள்
உருவாகின.
தாஸ்தாய்வொஸ்கியின் நிலவரைக்குறிப்புகள் இந்த
வகையில் முன்னோடியான படைப்பு. என்றாலும் காப்கா இந்த வகை இலக்கியத்தின் ஒரு உச்சம்
என்பது விமர்சகர்களின் கருத்து. தமிழில் இவ்வகை எழுத்தின் முன்னோடிகளாக நம்முன்
இருப்பவர்கள் அசோகமித்ரன். சுந்தராமசாமி. ஜி.நாகராஜன் போன்றோர். சுந்தரராமசாமியின்
ஜே.ஜே சில குறிப்புகள் தமிழில் எழுதப்பட்ட முதல் NON LINEAR நாவல் எனச்சொல்லலாம்.
இக்கதையில்
வரும் இரண்டு ஆண்கள் வாகீசன் மற்றும் சாமி இருவருமே எழுத்தாளரின் இரு மனங்ககள்
தான் . வாகீசன் எதார்த்தவாதி தன்னை வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை பிணைத்துக்
கொள்பவன் தனது அன்றாடத்தை சிக்கலில்லாமல் எதிர்கொள்ள நினைப்பவன். சாமி தன்னை
வஞ்சித்தவர்களிடம் இருந்து விலகி தனியே கால் போன போக்கில் போகிறார் கன்யாகுமாரியில்
ரயிலில் சந்திக்கும் ஒருவருடன் ரிசிகேஸ் பயணிக்கிரார். அங்க்கிருந்து பிரஹா.வாகிசனும்
சாமியும் பிராஹாவில் ஒரு ஆற்றில் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் இருவரும் ஒருவர்
மற்றொருவருடன் பேசிக்கொள்வதில்லை. பிரஹா காப்கா பிறந்த இடம்.
வாழ்வதற்கு
போதுமான பிடி கிடைகாத இளமனம் என்று
வாகிசனையும் வழ்வின் பிடி அறுந்துபோன
முதுமையின் மனம் என சாமியையும் சொல்லாம். ஒருவர் எதார்த்த வாழ்க்கையில்
சந்தர்பவாதியாக மாறிக்கொள்கிறார் மற்றொருவர் ஆன்மீகம் நோக்கி திரும்பி தனக்கான
வாழ்வை கண்டடைகிறார்இருவரும் காப்காவின் பிரந்த ஊரில் அவர் வீட்டின்
அருகில் இருக்கும் ஒரு நதியில் சந்தித்துக் கொள்கின்றனர். என்பது இம்முரண்பாட்டைச்
சுட்டவே ஆசிரியர் இருவரையும் ஒரு புள்ளியில் நிறுத்துகிறாரா?
இரண்டு
வகையான நவீனத்துவ மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் அதனை அவர்கள் எதிகொள்ளும்
வாழ்க்கை என இந்நாவலை சுருக்கிக் புரிந்து கொள்கிறேன்.
கதையில்
நித்திலாவிற்கு பிறந்த குழந்தை யாருடையது என்பதை ஆசிரியர் மர்மமாக விட்டுச்
செல்கிறார். அது மேத்யூஸ் அல்லது வாகிசனுடைய குழந்தையாக இருக்கவே வாய்ப்பு நாவலில்
வாகீசன் எந்த இடத்திலும் தனக்கொரு குழந்தை இருப்பதோ அதைப்பற்றிய நினைவுகளோ அவன்
மனதில் இல்லை. குழந்தை மேத்யூசுனுடையதாக இருந்தால் அதனை அவளது அக்கா அனுமதித்தாலா அல்லது அவளும்
நித்திலாவை தன் கணவன் மணம் முடிக்க உதவிசெய்தாளா?
நாவலில் நித்திலாவின் அக்கா மாமா இருவருக்கும்
சம்பாசனைகள் முழுவதும் நித்திலா வீட்டில் இருக்கும்போது
தான் நடை பெறுகிறது அது ஏன் அவளை தனது கணவனை திருமணம் செய்து வைக்க அவளின் அக்காவும் மேத்யூசும் சேர்ந்து செய்யும் நாடகமாக
இருக்கக் கூடது? அப்படியென்றால் அவளின் அக்கா கதாபாத்திரத்தின் குணம் அங்கு மாறுகிறது. அந்நிய
மண்ணில் குழந்தையில்லாமள் இருப்பவள் தனக்கு மாற்றாக வேறொருத்தி வருவதை விரும்பாமல்
தன் நலன் கருதி அவர்கள் இருவருக்குமான
உறவை அக்கா அனுமதிதிருக்கலாம்
குழந்தை
வாகிசனுடையதாக இருந்தால். நாவல் இறுதி
பகுதியில் அத்ரியான ஒரு நாயாக மாறி
வாகிசனை இம்சிக்கிறாள். இதற்கு காரணம் நித்திலவோடு உறவு கொண்டுவிட்டு. குழந்தையும்
கொடுத்துவிட்டு அவளை திருணம் செய்யாமல்
போன குற்ற உணர்ச்சி அவனை நாய் உருவத்தில் இம்சிக்கிறதா என்பது ஆசிரியர் வாசகனின் ஊகத்துக்கு விட்டு விடுகிறார்
மேலும்
கதையில் ஒரு நாய்குட்டி ஒன்று தொடர்ந்து வருகிறது. முதலில் அத்ரியானா
நாய்குட்டியாக மாறுவது. பாலா எழுதும் சிறுகதையில் அண்டை வீட்டுப் பெண் வளர்க்கும்
நாய்குட்டி. சாமியை விடாமல் பின் தொடர்ந்து வரும் நாய்குட்டி . இருதியில் அத்ரியானாவுக்கும்
வாகீசனுக்கும் நடக்கும் நாய்கள் பற்றிய சம்பாசனைகள் என நாய்கள் ஒரு குறியீடாக
நாவல் முழுவதும் வந்தவண்ணம்முள்ளன.
காப்கா தனது படைப்புக்களில் தொடர்ந்து ஒரு
உயிரினத்தை அல்லது கதாபத்திரத்தை
குறியீடாகச் சொல்லி அதனை மையாமாக உருவகப்படுத்தி கதைசொல்வதை பார்க்கலாம் (
கரபான் பூச்சி, - உருமாறம். பார் ஊஞ்சல் விளையாட்டுக் கலைஞன், பட்டினிக் கலைஞன்
சிறுக்தைகள். ) ஆசிரியரும் அவ்வாறு
நாய்குட்டியியை ஒரு குறியீடாக உருவகித்திருக்காலம். தனி மனிதனினை துரத்தும்
அகச்சிக்கலின் உருவகம் அந்த நாய் குட்டி என்று நான் புரிந்த்துகொண்டிருக்கிறேன் .
அசோக்குமார்
இதனை இடம்பெயர்ந்தவர்களின் இன்னல்களை பேசும் நாவல் என்றார். அந்த கருத்தில் எனக்கு
உடன்பாடு ஏற்படவில்லை. இன்றைய உலகமயமாக்ச் சூழலில் இடம் பெயர்வு என்பது
அவசியாமானதாகவும் எளிதானதாகவும் இருக்கிறது. மேலும் அவர்கள் பிழைக்க வழியில்லாமல்
புலம் பெயரவில்லை தன் மேலான தேவை வசதி வாய்ப்புகளுக்காவே இடம் பெயர்கின்றனர். (நித்திலா
தவிர)
இந்நாவல்
வாசிப்பனுபவம் மற்ற நவல்களிலிருந்து வேறுபடுவது நாவலின் வாசிப்பு முறை ஒரு முக்கிய
காரணம். எதார்த்தவாத இயல்புவாத நாவல்களை பத்தியாகவோ
ஒவ்வொரு அத்யாயமாகவோ கூட நிறுத்தி வாசிக்க முடியும் ஆனால் பின் நவினத்துவ நாவல்கள்
பெரும்பாலும் ஒரே மூச்சில் படிக்க வேண்டியவை. நேரமின்மையால் அத்யாயம் அத்யாயமாக
படித்தபோது நாவலில் தேய்வழக்குகள், தேவையில்லாத விவரிப்புகள் இருப்பது போல்
தோன்றியது, ஆனால் நவலின் பின் பகுதியை ஒரே மூச்சில் படித்த போது நாவலின் வாசிப்பு
முறை பிடிபட்டது. இதற்கு முன் ZERO DEGREE
ஜே ஜே சிலகுறிப்புகள், ஒளிர் நிழல் போன்ற நாவல்களை வாசித்த போது இது போன்ற வாசிப்பு குழப்பம்
அடைந்திருக்கிறேன்.
ஒரு
வகையில் இந்நாவலுக்காக தமிழகத்தில் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகத்தான் இருக்கும்
என நினைக்கிறேன்.
மொத்தம்
ஆறு பேர் வந்திருந்தார்கள் அவர்களில் நன்கு பேர் நாவலை முழுமையாக வாசித்திருந்தார்கள்
தஞ்சை
கூடல் தீவிர நவின இலக்கிய வாசகர்கள் மட்டும் கொண்டதல்ல. பேரசிரியர்கள்
முற்போக்காளர்கள், என பலதரப்பட்டவர்களும் கூடலுக்கு வருவதை பார்த்திருக்கிறேன். எனவே
அது போன்ற கூட்டங்களில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகிறது.
நேற்று நான் பேசிக்கொண்டிருக்கும்போது அசோக்குமார் ஒருவர் கிளம்புவதாக இருந்ததால்
பொன்னாடை போர்த்த போட்டோ எடுக்க என்று அலைந்தார் இருந்த மூன்று பேரின் பார்வைகளும்
அந்த பக்கம் திரும்பவே நான் ஏதோ சுவற்றை நோக்கி பேசிக்கொண்டிருப்பதைப் போல்
இருந்தது. சிறப்பு அழைப்பாளர் பேசிக்கொண்டிருக்கும் போதே புத்தகத்தை எடுத்து
பார்க்கவும் செல்போனில் செய்தி அனுப்ப என்றிருந்தார். தீவிரம் இல்லாத எந்த கூட்டத்துக்கும் செல்ல
நான் விரும்புவதில்லை பொதுவாக வாசக சாலை, முற்போக்கு இலக்கிய கூட்டங்கள்
எனக்கு இது போன்ற அலுப்பை தவறாது தருவதுண்டு. முதன் முறையாக தஞ்சை கூடல் தந்திருக்கிறது.
![]() |
நாகரத்னம் கிருஷ்னா |
கருத்துகள்
கருத்துரையிடுக