குரோதத்தின் ஆப்பிள்கள் சிறுகதை (மலையாளம் ) சோனியா செரியன்
எப்ரல் மாதம்....இமயத்தின் சரிவுகளில்
பனி உருகி செடிகள் பூ பூக்கத் துவங்கும் காலம். குளிர்காலத் துவக்கத்தில் தாழ்வாரங்கள் தேடிப்போன பறவைகள்
பல மலைகளைக் கடந்து மலை உசிக்கு திரும்ப தொடங்கியிருக்கிறது.
மழைச்சரிவில் கட்டப்பட்டிருக்கிற ராணுவ மருத்துவமனையின் வளாகம் முழுவதும் பீச், பிளம், ஆப்ரிகோட் மரங்களால் நிரம்பியிருக்கிறது. எதோ ஒரு காலத்தில் யாரோ சிலர் நட்டு வைத்து வளர்த்தியாவை...சென்ட்ரல் செக்சன் பல் மருத்துவமனையின் முன்னாள் இருக்கும்
பிளம் மரம் அடி முதல் நுனி வரை பூத்து குலுங்குகிறது. மயக்கும் நறுமணம். தேனீக்கள், பட்டாம் பூச்சிகளின் கலவரம்..
திங்கள் கிழமை கூட்டமான ஒரு (ஓ பி டி)
முடித்து விட்டு நானும், முருகனும், திருவேதியும் வாசலில் இருந்த பிளம் மரத்தின் பூங்கொத்து ஒன்றைப் பிடித்து பிய்த்து மேஜை மேல் வைத்து அதனை செதில் செதிலாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். ரெட்கிறாஸ்
சின்னமிட்டிருன்த பழைய பூச்சட்டி ஒன்று தேய்த்து கழுவி மினுக்கி தண்ணீர் நிறைத்து மேஜை மேல் வைக்கப்பட்டிருந்தது...
வழக்கமில்லாமால் மதிய நேரம் ரவுண்ட்ஸ் வந்த ஹாஸ்பிடல் கமாண்டிங் அதிகாரி மஹபத்ரா சார் கண்ணில் பட்டு விட்டோம்!
ஒரிசாக்காரர் பரம சாது!
எத்தனை பழங்கலாக வேண்டிய பூக்களைப் பறித்துவிட்டீர்கள் என்ற அவருடைய கேள்விக்கு காலையில் நடந்த டீ பார்ட்டியில் ஒரு பாதாம் மரக்காட்டையே தின்று தீர்த்து விட்டிர்களே என்ற குறும்பான மறுகேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர் விழிப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கும் போதுதான்
ஆபரேசன் தியேட்டரிலிருந்து அழைப்பு வந்தது..
மறுபுறம் மேஜர் அனூப் மலையாளி
ஒன்னு இங்க வரைக்கும் வரமுடியுமா?
அவருடைய அழைப்பில் தெரிந்த அவசரத்தால் மூவரும் உடனே கிளம்பினோம். மஹாபத்ரா சாரும் கூட வந்தார்..
அங்கு சென்றபோது ஆபரேசன் தியேட்டருக்கு முந்தைய அறையில் ரத்த வெள்ளத்தில் குளித்த ஒருவர் உடல் சுருண்டு படுத்துக் கிடந்தார். ரத்தம் தொயந்த கத்தி ஒன்று உருவி எடுத்து துணியில் சுற்றி மாற்றி வைக்கப்பட்டிருந்தது.
யாக் ஆடுகளின் ரோமம் , எண்ணெய் , வேறு ஏதேதோ புதிய வாடைகள் , ஆபாரேசன் தியேட்டர் மருந்து வாடையைவிட தூக்கி வீசுகிறது. கீழே கிடைந்தவரின் தாடையில் இருந்த ஆழமான காயத்திற்கு ஏர் பேக் கொடுத்து வைத்து நர்ஸ் அருகில் இருந்தார்கள்..
எப்படியொரு வெட்டு!
ஒரே ஒரு வெட்டுதான் மாண்டிப்பிள் ( கீழ்தாடை எலும்பு ) நேராக முறிந்திருக்கிறது .தலையை குறிப்பார்த்து வெட்டிய வெட்டு. கொஞ்சம் விலகி தாடை எலும்பில் பட்டிருக்கிறது.
தாடையில் படவில்லையென்றால் இப்போது தலை துண்டாக விழுந்திருக்கும்.
அநூப் சொன்னார்.
சகோதரர்களுக்கு இடையே வந்த சண்டை!
பொதுவாக இங்கு இதுபோன்ற கேஸ்கள் வருவதில்லை மொம்ப பழங்குடிகள் பொதுவாகவே சாதுவானவர்கள். நீளமான ஒரு வுருக்கியை இடுப்பில் சொருகிக் கொண்டுதான் எப்போதும் திரிவார்கள் என்றாலும் வாளை இடையிலிருந்து அவர்கள் எடுப்பதேயில்லை. அப்படி எடுத்தாலும் அது காட்டு முயலையோ செடிக்கலையோ வெட்டுவதற்காத்தான் இருக்கும்.
மூத்த சகோதரனுக்கு குழந்தை பிறந்ததற்காக நடைபெற்ற விருந்து! சகோதரர்கள் இருவரும் அபூங் உள்ளே தள்ளியிருந்தார்கள். ( மலைப் பகுதியில் நடத்திம் நெல் மறு சாகுபடியின் போது காய்ச்சி எடுக்கும் வீர்யமுள்ள மது _ ரைஸ் பீர்) இவர்களுடைய வீடுகளில் பெரிய மர பீப்பாய்கள் நிறைய அபூங் இருக்கும்.மூக்கிற்கு பழக்கமில்லாத அந்த மூன்றாவது வாடை ரைஸ் பீர்தான் என்பது புரிந்தது.
மருத்துவமனை வார்டு உதவி பணியாள் அன்சு நின்றிருந்தால் இந்த மலைப் பிரதேசத்தைச் சார்ந்தவள். எங்களின் பிரதான மொழிபெயர்ப்பாளர். அவளுக்கு அடுத்து இரு சகோதரர்களின் அம்மா நின்றிருக்கிறாள்! முனகலோ அழுகையோ ஒன்றுமில்லை!
மரக்கட்டையில் செதுக்கி நூலில் கோர்த்து குஞ்சலம் வைத்து தைக்கப்பட்ட 108 மணிகள் கொண்ட ஜெபமாலை ஒன்று அவள் கை விரல்களுக்கிடையில் வேகமாக சுற்றிக் கொண்டிருக்கிறது.
வாளுக்கும் கழுத்துக்குிடையே ராட்சகனாக இருந்த தாதையெழும்பு பரிதாபமாக பிளந்து கிடக்கிறது. மாண்டிப்பில் முழுவதும் பிளர்ந்து நாக்கு வரை கத்தி வந்திருக்கிறது. உண்மையில் இது பிளாஸ்டிக் சர்ஜனுடையதும் மாக்சில்லோ பேசியல் சார்ஜனுடையதும் ஆனா வேலை. சில அத்யாவசிய சிகிக்சைகள் செய்துவிட்டு கீழே இருக்கும்
தேஜ்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி விடலாமென முடிவு செய்தோம். அன்சு மூலமாக அதனை சகோதரர்களின் அம்மாவிடம் தெரிவித்தோம்.
"தேஜபூர் வரை வாகனத்தில் கொண்டு செல்வதற்கு எங்களிடம் பணமில்லை .இருந்த ஒரே வருமான யாக் ஆட்டை விற்றுத் தான் பெரியவனின் மனைவியின் பிரசவச் செலவு பார்த்தோம். பிரசவவும் சீசெரியனாகப் போய்விட்டதுஉங்களால் முடிந்தால் பாருங்கள் இல்லையேல் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் நாட்டு மருந்து வைத்துக் கொள்கிறோம்" அம்மாவின் மூணுமுனுப்பை அன்சு எங்களிடம் விளக்கினாள்.
அவள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். ஒடுங்கிய மலைப்பாதை வழியாக கீழே இறங்கி அசாமிலிருக்கும் தேஜ்பூர் செல்லவேண்டுமென்றால் ஒரு நாள் முழுவதுமாக தேவைப்பட்டும். 4*4 வண்டியில் தான் கொண்டு செல்ல முடியும். மலை உச்சியில் ஆடுகளை மேய்த்து வாழும் நாடோடி மக்கள் இவர்கள். பனியுருகிய காலங்களில் பள்ளத்தாக்கிலிருன்து பார்த்தால் பச்சை காகித்தாள்கள் போல அவர்களுடைய மேய்ச்சல் வெளி தெரியும்.அதில் கருத்த மச்சங்களைப் போல் யாக் ஆடுகள்..
மிகவும் ஆபத்தான காயம் ஒன்றும் செய்யாமல் விட்டால் பழுப்பேறி மரணம் நிச்சயம். நானும் அநூப்பும் ஒருவைரையொருவர் கவலையோடு பார்த்துக் கொண்டோம். சிறிது நேரம் கழுந்து "கொஞ்சம் ட்ரை பண்ணுவோமா என அநூப் கேட்டபோது" நானும் உடனே தலையாட்டினேன் .
மயக்கவியல் நிபுணர் கர்னல் பானர்ஜி மிகவும் அனுபவம் வாயந்தவர். மிக குறைவான வசதிகள் உள்ள இந்த மருத்துவமனையில் இது போன்ற ஒரு அறுவைச் சிகிச்சையை நடத்துவதில் உள்ள குழப்பங்களையும் ஆபத்துக்களையும் குறித்து அனுபவமில்லாத இரண்டு இளம் மருத்துவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்க முயன்றார். இருவரும் சற்று சோர்வடைந்தாலும் ஒன்றும் பேசாமல் எங்களிடமிருன்து வரும் பதிலை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கும் அன்த அன்னையைப் பார்க்கும் போது எதையும் எதிர்கொள்வோம் என்றொரு துணிச்சல். இறுதியில் மயக்கவியல் நிபுணரும், மஹாபத்ராசாரும் எங்களது பிடிவாதத்திற்கு சம்மதித்தார்கள்.
பற்களின் உடைந்த நரம்புகள் அத்தனையும் எழும்பின் காயத்திலிருந்து எடுத்து மாற்றி காயத்தை பிக்ஸ் செய்து கிழிந்த நாக்கும் வாயுமெல்லாம் சேர்த்து தைத்து சதைகளையும் முகத்தின் தொல்களையும் அதிக கவனம் எடுத்து தைத்து அறுவைச் சிகிச்சையை முடித்து வெளியேற நான்கு மணிநேரம் ஆகியது
ஆபரேசன் தியேட்டரை விட்டு வெளிவந்த போது அந்தி இருள் துவஙிவிட்டிருன்தது.
வாசலில் ஆப்ரிக்கோட் மரத்திற்கு கீழே
இரண்டு அருணாச்சால் போலீஸ்காரர்களுக்கு நடுவில் நிற்கும் வெட்டிய மூத்த சகோதரனை அன்சு காட்டினாள். அவன் பெயர் தாசி வெட்டப்பட்ட ஆள் பிரேமா ....
பிரேமா வெட்டிப் போட்டாலும் பற்றி வளருகிற நல்ல மழைநாட்டு உடல்! வாலிப பருவம். சில ஆண்டிப்பாயாட்டிக் மருந்துகளும் மருத்துவ மனையின் சீரான கண்காணிப்பாலும் வேகமாக அவனது காயம் ஆறியது. அதன் பிறகுதான் மனதிலிருந்த பதட்டம் நீங்கி நானும் அநூப்பும் நிம்மதி அடைந்தோம். பிரேமா ஒரு மாத காலம் மருத்துவமனையில் இருந்தான் . பின்னர் மலையேறியவன் இரண்டு வாரம் கழிந்து வரச் சொன்ன செக் அப்பிற்கு கூட மலையிரங்கவில்லை.
வழக்கமான ஒரு நாள். தூ ர த்திலிருன்து யாரோ பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள்
என்ற செய்தி கேட்டு அறையிலிருந்து இறங்கிச் சென்றேன். முன்பு பழக்கமில்லாத ஒரு பழங்குடி சமூத்தைச் சேர்ந்த ஆள். நூல் வேலைப்பாடுடைய நீண்ட ஜூப்பா மங்கிய சிவப்பு நிரம். இடுப்பில் வெள்ளி நிறத்தில் மின்னுகிற உரையில் சொருகி வைக்கப் பட்டிருக்கும் வுருக்கி . யாக் ஆடுகளின் ரோமம் வைத்து தைக்கப்பட்ட தொப்பி. இளம் பிரம்பு குச்சிகளை வைத்து உருவாக்கிய அழகிய குடை ஒன்று வாசலில் இருன்தது ...ஒன்றும் பேசாமல் சிரிக்காமல் முன்னே நிற்கிறார். நான் அவரது கண்களை உற்றுப் பார்த்தேன் அது மெல்ல மூடியது. இங்கு வந்து இவ்வளவு நாள் ஆகியும் அவர்களது முக பாஷயை புரிந்து கொள்ள முடியவில்லை.
எவ்வளவு வேகம் முடியுமோ அவ்வளவு வேகத்தில் திரும்பிச் சென்றுவிடவேண்டும் என்பது போல் இருந்தது அவரது பாவம். சிறிது னேரம் மெளனமாக இருந்தவரை பாஷை தெரியாமல் எப்படி பேசுவது என நா முழித்துக் கொண்டிருக்கும் போது என்னைக் கடந்து சென்ற முருகன் அருகே வந்து காதில் கிசுகிசுத்தார்...
மேடம் ஆள் யாருன்னு தெரியுதா
நம்ம காயேன் ஆபேல் கேஸ்!
யாரு பிரேமாவா முகத்தில் காயம் ஒண்ணுமில்லையே அதுக்குள்ள தழும்பு மறைஞ்சிடுச்சா? என சொல்லிக்கொண்டு நான் அவனையே ஆர்வமாக பார்க்க அவன் இல்ல மேடம். அவன் அண்ணன் வெட்டினவன்.... தாசி
எனது நெஞ்சு பனிக்கட்டி விழுந்தது போல் சில்லென்றது .. இவன் எதுக்கு வந்துருக்கான். கூடைல என்ன பிரேமாவோட தலையா. ..மிகுந்த பதட்டத்தோடு கூடையைப் பார்க்க ஏதோ புதையல் ஒன்றை ஆர்வமாக திறப்பது போல் மருத்துவ மனையில் இருக்கும் எல்லாரும் ஆர்வமாக கூடையைச் சுற்றி குழுமினார்கள்.
முருகன் அவருக்கு தெரிந்த அவனுடைய பாசையில் கூடையை திறக்கச் சொன்னான் . தாசி காட்டு வள்ளிக் கொடிகள் கொண்டு சுற்றப்பட்ட பிரம்புக் கூடையை அவிழ்த்தான் . இனிப்பும் புளிப்பும் கலன்த புது வாசனை ஒன்று என்களைச் சுற்றி பரவத் துவங்கியது உள்ளே பன் மரத்தின் ஊசி இலைக்கழுக்கிடையே ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் அடுக்கியிருந்த இளம் பச்சை நிறமுள்ள ஆப்பிள்கள்!
மரத்திலிருன்தே பழுக்கவைத்து பக்குவமாக எடுத்து வைக்கப்பட்டது. அவை இறங்கி வந்த மலைச் சரிவுகள் போலவே பளப்பளப்பும் கலங்காமில்லாததுமாக இருந்தது.
மருத்துவ மனையில் இருக்கும் எல்லாருக்கும் கொடுப்பதற்காக கூடை நிறைய கொண்டு வந்திருந்தார். அவரின் முகத்தை நோக்கி என் இருகரம் கூப்பி நன்றி சொன்னேன் . அந்த சிவந்த முகத்தில் எந்த பாவமாற்றமுமில்லை. மெல்ல தன் குடையை எடுத்துக் கொண்டு நடந்து சென்று மறைந்தார்.
அடுத்தமாதம் பின் அதற்கடுத்த மாதம் என அவ்வருட ஆப்பில் சீசன் முடியும் வரை ஆப்பிள் பழங்கள் கொண்டுவந்து தந்தார் தாசி..ஒவ்வொரு முறை தாசி வரும்போதும் இம்முறை ஆப்பில் பழங்கள் கொண்டுவந்தது பிரேமாவா எனப் பார்ப்பேன் ..ஆனால் பிரேமா இறுதிவரை வரவில்லை தாசி மட்டும் வந்து ஆப்பில் பழங்களை தந்து கொண்டிருந்தார்...அடுத்த ஆப்பில் சீஈசன் வருவதற்குள் எனக்கும் பணி மாறுதல் ஆகிவிட்டது...
போர்ஹேஸின் லெஜன்ட் என்றொரு குட்டிக் கதை இருக்கிறது..
ஆபேலும் காயேனும் மீண்டும் ஒருமுறை பாலைவனத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்...
இருவரும் நல்ல உயரமானவர்கள்ளவா!தூரத்திலிருந்தே ஒருவரையொருவர் அடையாளம் கண்டுக்கொள்கிறார்கள்.நெருங்கி வந்து இருவரும் மண்ணில் அமர்ந்தார்கள். தீ மூட்டி அப்பம் சுட்டு பங்கிட்டார்கள்.நாளின் இறுதி நாழிகையில் சோர்ந்து ஓன்றும் பேச இயலாமல் அவர்கள் அமர்ந்திருக்கும் போது ஆகாயத்தின் எல்லைக் கோட்டில் ஒற்றை நட்சத்திரம் ஒன்று மின்னியது. நட்சத்திரத்தின் வெளிச்சத்தில் காயேன் ஆபேல் நெற்றியில் இருந்த தழும்பைப் பார்த்தான் . அவன் கையில் இருந்த அப்பம் நழுவியது..
காயேன்_ என் தவறை நீ மன்னித்து விட்டாயா?
ஆபேல்_ நீ என்னைக் கொன்றாயா? அல்லது நான் உன்னைக் கொன்றேனா எனக்கு நினைவில்லை! என்னவானாலும் நாம் இப்போது முன்பு போலல்லவா இருக்கிறோம்.!
காயேன்_ நீ என்னை மன்னித்திருப்பாய்
காரணம் மறத்தல் என்றால் பொறுத்தல் என்றுதானே பொருள்! நானும் இனி அதை மறக்கிறேன்.
ஆபேல்_ ஆம் அது சரிதான் . ஆபேல் நிதானமாகச் சொன்னான் குற்ற உணர்ச்சி முடியும்போது அனுதாபம் பாக்கியிருக்கும்..
அனுதாபத்தின் புளி மதுர ஆப்பிள்களுமாக மலையிறங்கிக் கொண்டிருக்கிறான் தாசி..
பிரேமா...!அதை எப்போதோ மறந்து போய்விட்டிருப்பான்...
......,.........................
சூப்பா_ இமய மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் அணிகிற ரோமம் வைத்து தைத்த நீளமான சட்டை
வுருக்கி_ இமயமலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் பயன்படுத்தும் பிரத்யேக வடிவமைப்புடைய கத்தி..
யாக்_ மலைப்பு பகுதியில் வளருகிற ரோமங்கள் நிறைந்த ஒரு வகையான ஆட்டினம்.
மிதுன்_ ஒரு வகையான காட்டு காளை மாடுஅருணாச்சல பிரதேச மக்களின் சமயச் சடங்குகளில் இவ்விலங்கிற்கு முக்கிய பங்கு உள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக