தேர்வு (சிறுகதை)
அன்று கடைசி தேர்வு இனி அரியர்
வைத்தவர்கள் தான் தனியே வந்து தேர்வெழுதவேண்டும் .மற்றபடி இறுதியாண்டின்
இறுதித்தேர்வு முடிந்துவிட்டது. வழக்கமாக வெளிவந்தவுடன் .கேள்வித்தாளை நுண்ணாய்வு
செய்யும் வேணி கூட அன்று கண்ணாடியை கையில் கழட்டி அவளில் நீண்ட கண்களை குட்டையான
டர்க்கி கர்ச்சிப்பால் ஒத்திக்கொண்டு சுவற்றில் சாய்ந்திருந்தாள். ஒவ்வொருவரும்
தங்களுக்கு வேண்டியவரை தேடிக்கொண்டிருந்தார்கள் .இவனை அரித்துக்கொண்டிருந்த
கேள்விக்கு இன்று ஒரு முடிவு தெரிந்தாகவேண்டும் இனி அவளைப் பார்ப்பது என்பது அரிடதினும்
அரிதான காரியம் இன்றே ,என்ன சொல்கிறாய்
என்று கேட்டுவிட வேண்டும் அவள் சம்மதித்தால்
அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தீர்மானமாக
இன்று முடிவு செய்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டான்
அவன் .நண்பர்கள் பெண்களிடம் நம்பர் ,அட்ரஸ்,எப்ப போன்
பண்ணலாம் என்ற விபரங்களை வாங்கிக் கொண்டு பேக்கில் இருந்த பாட்டில்கள் டங் டங்க்என
ஆடஆதை இருக்கி பிடித்து அணைத்துகொண்டு வெளியில் சென்றனர். சிலர் வெளியேர மறுத்து
மூன்று வருடம் பேசித்தீராததை மூன்று நிமிடங்களில் பேசிவிட முடியும் என்று
பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் கண்களில் கண்ணீர் ததும்பியது. வார்த்தைகள்
அருவி போல கொட்டிக்கொண்டிருந்தது.
வரந்தாவின் கோடியில் தீபன் மட்டும் மருவி
நின்றான் . இவன் நிற்பைப் பார்த்து வழக்கமாக கேலி செய்யும் அருண்
கூட
அன்று எதும் சொல்லாமல் வெளியில் சென்றுவிட்டான் நடப்பவை எல்லாம் அன்று இயல்புக்கு
மாறானவையாகவே தீபனுக்கு தோன்றியது.
அசிரியர்கள் அறையில் இருந்து வெளிவரும் ராதாவை எவ்வித
தயக்கமும் இல்லாமல் வெரித்து பார்த்தான் தீபன் வழக்கமாக இவனை பார்த்க்தவுடன் அவள்
செய்யும் அந்த செயற்கையான புன்னகை.பின் அவள் பார்க்கும் என்னாவா….என்ற பார்வை வழக்கமாக இந்த இரண்டில் நிறைந்துவிடும்
தீபன் இன்று தயங்ககாமல் சற்று கூடுதாலாகவே அவளைப் பார்த்தான்.. இவனிடம் எந்த
மாற்றத்தையும் உண்டாக்க முடியாதவளாய் அவள் அடைந்த அதிருப்தி அவள் முகத்தில் தெரிந்தது.
பின் மெல்ல தோழி ஒரு அசட்டு விவகாரத்தைச்
சொல்லி சிரித்தபோது அவளும் வழுக்கட்டாயமாக சிரித்தாள் .கையில் வீசிக்கொண்டு வந்த
நோட்டு புத்தகங்களை தீபனின் அருகில்
வந்ததும் மார்பில் அணைத்துக்கொண்டாள் .தீபன் இன்று இரண்டில் ஒன்று பார்த்துவிடும்
முடிவில் இருந்தான்….
ஆமா ஏன்றால் அடுத்த
எப்ப மீட்பண்ணலாம் இல்லை ன்றாள் அப்ப இவ்லோ நாள் பேசித்திரிந்ததற்க்கெல்லாம் என்ன
அர்த்தம்………...வழியை மறைத்து எதற்கோ தயாராக
நிற்பவனிடம் இடப்பக்கமிருந்த தோழியை நகர்த்திவிட்டு அவன் அருகில் வந்தவள்
“வெளியே வெய்ட்பண்றேன்” என்று ஒற்றைச்சொல் சொல்லிவிட்டு நகர்ந்தாள் .அவனின் உடலின்
ஏறியிருந்த மொத்த உணர்ச்சியும் ஒரு நொடியில்
உச்சத்திலிருந்து கீழே வந்தது…பின் சற்று இழுத்து மூச்சுவிட்டு அந்த பச்சை நிற தூணில்
சாய்ந்து விரலை பற்றும் போது சுண்டுவிரலின்
முனை சுரீரென்று வலித்தது .ஐந்து நிமிட
காத்திருப்பில் நகத்தை பிய்த்து புன்ணாக்கியிருந்தான்………..
வாசலுக்கு வெளியில் அவள் காத்திருப்பதாய் சொன்ன புங்கை மரத்தின் அருகில் அவள் போகிறளா என
பார்த்துக் கொண்டே நின்றான் அவள் மார்பில் அணைத்திருந்த புத்தகம் மீண்டும் கைக்கு
வந்திருந்தது. அவளுடன் தோழிகள் கூட்டம் சேர்ந்திருந்தது. புங்கமரத்தின் அருகில்
சென்றவள் நடக்கும் போதே ஒருகணம் அம்மரத்தை பார்த்தவள் பின் நிற்காமல் நடந்தாள்
..தீபனுக்கு மீண்டும் காய்ச்சல் நூறுடிகிரிக்கு வந்தது அவள் பின்னால் திரும்பி
திரும்பி பார்த்தவாறு சென்றாள் அவள் முகத்தில் தெரிந்த பதட்டம் மெல்ல குறைந்து
வந்தது. ஹஸ்டலுக்கு போகும் இடது பக்க பாதைக்குள் திரும்பும் போது மீண்டும் ஒருமுறை
திரும்பிபார்த்தவள் பின்பு விறுவிறுவென நடக்க துவங்கினாள் அவள் ஏமாற்றிவிட்டுச்
சென்றது. அவனுக்காக அவள்காத்திருக்க வில்லை அவனோடு பேசுவதை தவிர்க்கவே வெளியே
காத்திருப்பதாய் கூறிச்சென்றிருக்கிறாள் என்பது அவனுக்கு உறுதியாயிற்று .அவளின் கழுத்தை நெரிக்கவேண்டும்
என நினைத்தவன். தன்னை நிதானித்து அவள் முகத்தை மனதில் நினைக்கவே அருவருத்தான் . பின் சட்டென்று தற்க்கொலை செய்யவேண்டும்
அவளை பழிவாங்க வேண்டும் என நினைத்து வரந்தா நோக்கி வேகமாக வந்தான் கீழ புதிய நினைவு
மண்டபம் கட்டுவற்காக கற்கள் கிடந்தன அதை நினைத்துக்கொண்டு குதிப்பதற்கு விரைந்தவன்
பேப்பர் கட்டுகள் தூக்கீக் கொண்டுவந்த ரவி
சார் மேல் மோதிக்கொண்டான். சட்டென
அவனுக்கு அவள் சமீபகாலமாய் கேண்டீன் பக்கத்தில்
நிற்கும் இடம் ஞாபகம் வந்தது ..டேய்……….. என கத்தியவர் அவனை திரும்பி
பார்ப்பதற்குள் வரண்டாவை தாண்டி ஒடஆரம்பித்தான் சட்டென அவனுக்க.
.பரிட்சை
முடிந்த பின்னர் வெளியில் பிதுங்கி சென்று கொண்டிருந்த யாரும் அவன் ஒட்டத்தை கவனிக்க
வில்லை அவனுக்கு என்றும் இல்லாதபடியாய் முச்சுவாங்கியது வயிறு எரிந்ததில் லேசான
பசிமயக்கம் கூட வந்தது .கேண்டினுக்குச்
செல்லும் பாதையை நோக்கி ஓட ஆரம்பித்தான் அவளின் குட்டையான முடி பின் தெரிய அவள் நிர்மலா மற்றும் அவளைச்
சூழ்ந்திருந்த தோழிகளோடு பேசிக்கொண்டிருந்தாள்.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தீபன் அருகில் செல்ல நிர்மலா ராதாவிடம் ஏய் வர்ராண்டி ஓ
ஆளு….என்றவுடன் ராதா உட்பட எல்லோரும் உரக்க சிரித்தனர் .அவன் காலையில் வரும்
வழியில் பார்த்த சாணக்குவியலில் நெளியும் புழுவைப் போல உணர்ந்தான்.அவன் ஏதும்
பேசமால் ராதாவின் அருகில் வந்து நின்றான் .அவள் பின்னால் புட்டத்தை
உரசிக்கொண்டிருந்த புங்க மர இலைக்கொத்தை கிள்ளி கைகளால் அலைந்தான் அவர்கள் இப்போது
அவனை கவனியாதவாறு பேச்சை தொடர்ந்தனர் .ராதா அவனை பொருட்படுத்தவே இல்லை .அங்கு
நிற்க நிற்க தீபனுக்கு கூச்சமாகவும் அருவருப்பாகவும்
இருந்தது.
அவர்கள பேச்சை முடிப்பதாகத் தெரியவில்லை தீபன் பொறுமை
இழந்துகொண்டிருந்தான் .அங்கு இருக்கும் எல்லோருக்கும் அவன் ராதாவோடு பேச
வந்திருக்கிறான் எனத் தெரிந்தும் அவனை யாரும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தனர்.
யேய் மத்யானம் கோயிலுக்கு போனும்டி மறந்துறாதே …..
ராதாதான்…. நிர்மலாவிடம் சொன்னாள்,
ம்ம் என்று ஒரு நமட்டுச்சிரிப்பு சிரித்துவிட்டு தலை ஆட்டினாள் நிர்மலா..
ஒரு வேளை நம்மிடம் சொல்கிறாளா,,
நம்மைத்தான் கோயிலுக்கு வரச்சொல்கிறாளா?
தீபனுக்கு ஒன்றும் புரியவில்லை பின் ராதா கையில்
வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை மீண்டும் மார்பில் அணைத்துக்கொண்டு நடக்கத்துவங்கினாள்..
தீபன் சாற்று சத்தமாகவே கூப்பிட்டான் ராதா,,,,,,,,,,,,,
அவள் என்ன என்பதைப் போல் திரும்பி பார்த்தாள்
நான் கேட்டது என்ன ஆச்சு எனக்கு பைத்தியம் பிடிக்குது..
என்ன நீ லவ் பண்றயா இல்லயா?
தயவு செஞ்சு சொல்லிடு பீளீஸ் …..
என்னால தெரிஞ்சுக்காம நிம்மதியா இருக்க முடியாது
ராதா அவனை சற்று முறைப்பது போல் பார்த்தாள்..
அதான் எல்லாம் டைரில எழுதியிருக்கனே ………..
அப்போது தான் அவள் டைரி எழுதி கொடுத்தது ஞாபகம் வந்தது
அத நான் இன்னும் படிக்ல
ஏன்?
ஏன்னூ தெரியல படிக்க பிடிக்ல
சரி ராத இனி ஒன்ன பாக்க முடியுமான்னு தெரியல..
நீ என்ன நினைக்ற பீளீஸ் எதுவா இருந்தாலும் ஒகே ..
மெல்ல ஒருகணம் அவளைப்பார்த்தவள் பின் ஏதோ
தீர்மானித்தவளாய்
நான் என்ன ஜாதின்னு தெரியுமா…………
தீபனுக்கு மனம் பதபதைத்தது……..
தெரியாது என்றான் சற்று வீராப்பாக …………..
இங்க பாரு தீபன் பிராக்டிகலா யோசிச்சு பாக்கனும்
நாம ரெண்டு பேரும் வேற வேற கேஸ்ட்
அது மட்டுமில்ல நா எங்க வீட்ல மூத்த பொண்ணு
எனக்கு கீழே ரெண்டு தம்பிங்க இருகாங்க என்னால எல்லாம்
திடிர்ணு
எல்லாம் எதும் பண்ண முடியாது ..வீட்ல பாக்குற
பையனைத்தான் கல்யாணம் பண்ணீக்க போறேன்.
அலைன்ஸ் பாத்துட்றுக்காங்க …
நீ தேவ இல்லாம எதும் பிராப்ளம் பண்ணிடாதே பீளீஸ் …இதான்
இந்த பசங்க கிட்ட இருக்ற ஒரே பிராப்ளம். பேசாம இருந்தா அடமண்ட் திமீரான
பொண்ணூம்பிங்க….பேசுனா உடனே லவ்…………என்ன பண்றது சொல்லுங்க …(இதுவரை ஒருமையில் அழைத்து வந்தவள் இப்போது அவனை
பன்மையில் அழைக்கத்துவங்கியதை கவனித்தான்…
தீபனுக்கு அவ்விடத்தில் இருக்க பிடிக்கவில்லை அவள்
ஏதும் செய்ய வில்லை தவறு எல்லம் என்மேல் தான் என்பது போல் பேசுகிறாள்.
எவ்வளவு எளிதாக அவளால் பேசமுடிகிறது,. எனக்குத்தான்
ஏதும் பேச முடியவில்லை..யோசித்ததெல்லாம் மறந்து போய்விடுகிறது
தீபன் மெல்ல காம்பவுண்ட் பக்கம் திரும்பி வெளியில்
நடக்கத்துவங்க்கினான் நான்கடி நடந்ததும். அவள் குரல் கேட்டது
தீபன்….
தீபன் கீழே குனிந்தவன் நிமிரவில்லை, திரும்பியும்
பார்க்கவுமில்லை அப்படியே நின்றான்..
மறுபடியும் தீபன் சாரிடா புரிஞ்சுக்கடா ….என்றாள்
‘
தீபனுக்கு அப்படியே அவளை கட்டி பிடித்துக் அணைத்துக்
கொண்டு முத்தமிடவேண்டூமென தோன்றியது.. அவன் மனம் நிறைந்திருந்தது , ஏனோ மகிழ்ச்சியில்
மனம் துள்ளியது. தீபனுக்கு ஏதோ ஒன்றை வென்று விட்டதைப் போன்ற மகிழ்ச்சி அவளை
நோக்கி புன்னகைக்க அவளும் பதிலுக்கு புன்னகைத்துவிட்டு மெல்ல நடந்தாள்..
வெளியில் காம்பவுண்ட் சுவருக்கு பின்னால் நண்பர்கள்
கத்திக்கொண்டிருந்தார்கள் ஏய் போதும்டா ரொமான்ஸு டைம் ஆச்சு வாடா..
அருகில் இருந்த கருவேல முள் மரத்திற்கு கீழ்
நண்பர்களுடன் சென்ற போது அங்கு மற்றொரு கும்பல் குடித்துக் கொண்டிருந்தது.
நண்பர்கள் பகுதி பேர் இன்றோடு சென்று விடுவார்கள் அரியர் எழுத வருவர்கள் மட்டும்
மீண்டும் சந்தித்துக் கொள்ளலாம் ஆனால் இனி வகுப்பறை கொண்டாட்டம் ,ஆசிரியர்கள்
மாணவர்கள், ஏதும் இல்லை ,தேர்வு
மட்டும்தான்….
தீபனுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. அவனுக்கு ஊற்றீக்கொடுத்த கிளாஸை அவன் மணிக்கு கொடுத்துவிட்டான். தீபன் சற்று
முன்பு நடந்த சம்பவங்களை யோசித்தான்.வரண்டாவில் இருந்து குதிக்கப் போனது அவளிடம்
சென்று பேசியது..என ஒவ்வொன்றையும் நினைத்துப்பார்த்தான் அவனுக்கு மனம் மூழுதும்
ராதாவின் நினைப்பாகவே இருந்தது , சே அவலை இதுவரை நாம் புரிந்து கொள்ளவே இல்லை
அவள் தன்னிடம்
மட்டுமல்ல வேறு எல்லாரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பழகினாளா நாம் தான் அவளை
தப்பாக புரிந்து கொண்டு அவள் பின்னால் திரிந்தோமா….
அவளை அவனுக்கு ஒரு முறை பார்க்க வேண்டூம் போல தோன்றியது
நண்பர்கள் குடித்துவிடு மண்ணில் பிறண்டு அழத்தொடங்கினார்கள்
தீபனுக்கு என்னவோ போல் இருந்தது. அவன் மெல்ல அவர்களை
விட்டு நடக்கத்துவங்கினான்
ராதவை இன்னும் ஒருமுறை பார்த்துவிடவேண்டு தன்னால் அவள்
கஸ்டப்பட்டிருந்தால் ஸாரி சொல்ல வேண்டும் அவள் திருமணம் செய்யும்போது தன்னிடம்
தெரிவிக்கவேண்டும் எனக்கூற வேண்டூம்
எங்கிருப்பாள் விடுதியை விட்டு கிளம்பியிருப்பாளா…
யார் வந்து அவளை அழைத்துச் செல்வது ….அவளே கூட சென்றிருப்பாள்
சட்டென அவனுக்கு அவள்
நிர்மலாவிடம் அவள் சொன்னது ஞாபகம் வந்தது
ஒரு வேலை கோயிலுக்கு போயிருபாள்
அவன் நடையை துரிதமாக்கினான். மெல்ல அவ்விடுதியை ஒட்டி
இருந்த அந்த புதிதாய் கட்டப்பட்ட கோயிலுக்குள் போனாள் கோயிலின் வாசலிலேயே அவள்
செருப்பு கிடந்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தான்
கோயிலில் நல்ல கூட்டம் எல்லம் கல்லூரி இளைஞர்கள் தான்
தங்களுடையை தோழர் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்
அவன் மெல்ல தன் கண்களை சுழல விட்டு ராதாவைத்தேடினான்
ராதாவின் தோழிகள் யாரையாவது பார்த்தாள் அவர்களிடம் கூட கேட்கலாம் என்று ராதாவோ
அவளுடைய தோழிளோ கண்ணில் படுகிறார்களா என உற்றுப் பார்த்தான் பின் மெல்ல அருகில்
இருந்த கல்சுவரில் தளர்ந்து அமர்ந்த போது ராதாவைன் குரல் கேட்டது மெல்ல எட்டி
சுவரின் மறுபக்கம் பார்த்தான் ராதாவின் மடியில் ரவி சார் உட்கார்ந்திருந்தார்
இருவரும் ஒருவரையொருவர் இருக்கி தழுவி கொஞ்சிக்கொண்டிருந்தனர் .எட்டி தள்ளி
நிர்மலா நின்றிருந்தாள் .இவனைப் பார்த்தவுடன் லேசான பதட்டத்துடன் புன்னகைத்தாள்……………
…
கருத்துகள்
கருத்துரையிடுக