சம்ஸ்காரா
மார்த்தவ (தூய) பிராமணர்கள் கூடி வாழும்
துர்வாசபுர அக்ரகாரத்தில் நாரணப்பா ஒழுக்கங்கெட்ட பிராமணனாக வாழ்கிறான்.மாமிசம்
உண்ணுகிறான்,தாழ்ந்த சாதி பெண்ணாண சந்திரியுடன் உடலுறவு கொள்ளுவதோடு மட்டுமல்லாமல்
அவளை அக்ராகாரத்திலே தங்க வைக்கிறான் .குளத்தில் மீன் பிடிக்கிறான். எந்த பிராமணனும்
அவனை எதிர்த்து கேட்க முடிவதில்லை கேட்டால் முசல்மானாக (இஸ்லாமியனாக)
மாறிவிடுவதாகச் மிரட்டுகிறான்.
தன் சொத்தையெல்லாம் பறித்து கொண்டு ஏமாற்றிய
கருடாச்சாரியாவுக்கு எதிராக திரண்ட நாராணப்பாவின் கோபமே மொத்த பிராமணியத்திற்கும்
எதிரானாதாக திரும்புகிறது என்று ஊகிக்கமுடிகிறது.. பிராமணர்களின் பிள்ளைகளை
பட்டாளத்திற்கு அனுப்புகிறான். குடியும் கூத்தும் பெண்ணும் என அவ்வாரகார
மக்களுக்கு சிம்மசொப்பனமாக நடக்கும் அவன் கொஞ்சம் பயப்படுவது மறியாதை கொடுப்பது
பிரேமாச்சாரியாருக்கு மட்டுமே.
காசிக்கு சென்று வேதம் படித்து வந்தவர். தன் நோயுற்ற மனைவியை பராமரிப்பதும். முறையான
விரதம், சந்தியாவந்தனம் வேதம். இதிகாசங்களை விளக்குவது ஆகியன மட்டுமே தன் வாழ்வியல் கடமையாக கொண்டவர்.தன் மனைவியை தவிர வேறு பெண்ணை
நாடாதவர். நாராணப்பா, பிரேமாச்சாரியா இருவரும் இரு துருவங்கள். பிராமணியத்தை
உடைப்பேன் எண்று நாரணப்பாவும். அதை தன் உயிரின் பொருட்டு காப்பேன் என
பிரேமாச்சாரியாரும் சாவல் விட்டுக்கொள்கிறார்கள் .ஆனால் ஆடிப்படையில் இருவரும்
ஒருவர் மற்றொருவரை புரிந்து கொண்டவராகவும் பற்றோடும் இருப்பது முரண்
நாராணப்பா இறந்து போகிறான் அவனுக்கு
குடும்பமாக இருப்பது சந்திரி (தாழ்ந்த சாதிப்பெண்) .நாரணப்பா சந்திரியோடு
வாழ்ந்ததால் அவன் பிரமணணா இல்லையா என்றும் அவன் பிணத்தை யார் எடுப்பது என்று
குழப்பம் ஏற்படுகிறது.
முதலில் மறுத்த பிராமணார்கள் சந்திரி தன் நகையை
பிணம் எடுப்பவர்களுக்கு ஈமச்சடங்கு செலவாக
கொடுத்ததும் . நாரணப்பா பிரமணன் தான் என்று சொல்லி ஆளாளுக்கு அவன் பிணத்தை அடக்கம்
செய்ய போட்டி போடுகிறார்கள். சவத்தை யார்
அடக்கம் செய்வது என்ற முடிவெடுக்கும்
பொறுப்பில் பீரேமாச்சார்யா இருக்கிறார். அவரோ முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார்!
தன் கற்ற வேதங்களில் சொல்லப்பட்டதை அறிய முற்படுகிறார்.
வேதங்களால் அறிய முடியாதது உண்டு என்பதை முதன்
முதலாக அறிந்து அதிர்ந்து போகிறார்
பிரேமாச்சார்யா.எனவே வேதங்களால் முடியாததை தெய்வத்திடம் கேட்கிறார்( அருள்வாக்கு)
தெய்வமோ பதில் சொல்ல மறுக்கிறது
மனச்சஞ்சலத்தோடு திரும்பி வரும் பீரேமாச்சார்யா
தனியே வரும் சந்திரிகாவுடன் கூடுகிறார்.
இறுதியில் தன் பிராமணத்தன்மை மாசுபட்டதை உணர்கிறார் .மறுநாள் எல்லார் முன்னாலும்
தனக்கும் சந்திரிகாவிற்கும் நடந்ததை அவளை வந்து சொல்ல சொல்கிறாள் அவளோ இரவோடு
இரவாக யாருக்கும் தெரியாமல் தன் கணவனின்
பிணத்தை எரித்து விட்டு தன் சொந்த ஊரு க்கு போகிறாள்.
காலையில் அவள் பிணத்தை எரித்தது தெரியாமல்
.பிணத்தை யார் எப்படி எடுப்பது என்று விவாதம் நடக்கிறது .பீரேமாச்சாரியா தனக்கும்
சந்திரிக்கும் நடந்த உறவை சபை முன் சொல்ல நினைத்து கடைசி கணத்தில் அவ்வெண்ணத்தை
கைவிட்டுவிடுகிறார்.. பிரேமாச்சாரியாரால்
முடிவெடுக்க முடியாததால் பிராமணர்கள் மற்றொரு சாமியாரிடம் செல்கிறார்கள். குற்ற
உணர்ச்சியில் தவித்துக்கொண்டிருக்கும் பிரேமாச்சாரியாருக்கு அடுத்த இடியாக அவர்
மனை இறந்து போகிறாள் அவளை தகனம் செய்து விட்டு தன் கால் போன போக்கிலேயே நடந்து
போகிறார்.
தன்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடது
என்று பயப்படுகிறார். வழிப்போக்கன் புட்டாவோடு பேசிக்கொண்டு ஒரு ஊருக்குச்சென்று ஒரு
திருவிழாவில் கலந்து கொள்கிறாற் .புட்டா அவரை ஒரு விலைமாதுவிடம் அழைத்துச்
செல்கிறான்.அங்கு நாரணப்பா வந்திருப்பதாக சொல்கிறான். தன் அடையாளம் துறந்த பிரேமாச்சாரியா தான்
பார்க்கும் ஒவ்வொரிடமும் ஒவ்வொரு விதாமாகச் தன்னைப்பற்றிச் சொல்கிறார் .தன்னை
பார்த்து யாரும் அறிந்து கொண்டு விடுவார்களோ என்ற பயம் பிரேமாச்சாரியாவை துரத்திக்கொண்டே
இருக்கிறது.
இறுதியில் கோயிலின் உள்ளே உணவருந்தும் போது அவரை
கண்டு விட்ட ஒருவன் அவரை வேறு இடத்தில் அமர அழைத்தபோது தன் எச்சில் கைகளால் தலை
தெரிக்க ஓடுகிறார் பீரேமாச்சாரியா. வழிப்போக்கனாகி நண்பனாகிப் போன புட்டா
கடைசியில் அவரை ஒரு வண்டியில் துர்வாசபுரத்துக்கு அனுப்பி வைக்கிறான் .துர்வாச
புரத்திற்கு நான்கு மணிநேர பயணம் அப்பயணத்தில் தன் அடுத்த வாழ்விற்காக பிரேமாச்சார்யா
காத்திருக்கிறார் என்பதோடு நாவல் நிறைவடைகிறது
சம்ஸ்காரா நாவல் எதனால் முக்கியத்துவம்
பெருகிறது.பிரமாணிய அமைப்பின் பிழைகளைச் சொல்லியதாலா. அதன் அழுகிய நாறும்பக்கத்தை
எடுத்துக்காட்டியதாலா..அதன் இந்திய பண்பாட்டு
கலாசார விழுமியங்களை மறுபரிசீலனை செய்வதாலா.தனிமனித ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்துவதாலா.
இவற்றையெல்லாம் விட தனிமனிதன் ஒருவனின் தேடலை முன் வைப்பதால் தான் இந்நாவல் முக்கியத்துவம் வாய்ந்தது என நினைக்கிறேன்.
அவ்வகையில் இந்நாவலில் வரும் பிரேமாச்சார்யா என்ற கதாபாத்திரம் .ஹெர்மன்
ஹெஸ்ஸேயின் சித்தார்த்தனுக்கு ஒப்பானவன்.
சித்தார்த்தன் தன் இல்லறம் துறந்து துறவரம்
மேற்கொள்கையில் பிரேமாச்சார்யா துரவறம்
துறந்து இல்லறத்திற்கு வருகிறார்
இருவரும் எதிர்மறையான வகையில் தங்கள் பாதையை கண்டடைகின்றனர். நதிக்கறையில்
மீனவபெண்ணுடன் கூடும் சித்தார்த்தனைப் போல பீரேமாச்சர்யா சந்திரியிடம் கூடி தனது
பாதையை தேர்ந்தெடுக்கிறார். சித்தார்த்தனுக்கு அது இயல்பாக கூடும்போது
.பிரேமாச்சார்யாருக்கு தற்செயலாக நடக்கிறது.
பிரேமச்சார்யா நாரணப்பாவை வெல்வதை தன் வாழ்நாள் சவாலாக கொள்கிறார்
.பிரேமாச்சாரியாரின் நண்பன் ஒருவன்
காசியில் அவரோடு வேதம் படிக்க வந்தவன்
கஞ்சாவில் கணிகையில் தன்னை கரைத்துக் கொள்கிறான். அவனை வென்றடக்கி தான்
கற்ற வேதத்தின் மூலம் தன்னை நிறுபித்துக்கொள்ள நினைக்கிறார் ., நாரணப்பாவை
வெல்வதின் ,மூலம் தன் நண்பனை வென்று தன் பாதையே சரி என நிருபித்துக்கொள்ளவே
முயலுகிறார். நாரணப்பாவின் மேல் அவனுக்கு ஏற்படும் சிறு அன்பிற்கு அவன் நண்பனே
காரணம்.
நாரணப்பாவும் பிரேமாச்சாரியாரும்
நவீனமனிதனின் இரு துருவங்கள். பிராமணியத்தின் கீழ்மையை உணர்ந்த நாராணப்பா அதை விட்டு விலகி தன்னால் முடிந்த அளவிற்கு
வெறி கொண்டு தாக்குகிறான். பிரேமாச்சாரியார்
அதற்குள் இருந்துகொண்டே அதன்
கீழ்மைகளை அகற்ற முயர்ச்சிக்கிறார்கள். இருவரும் செய்வதும் ஒன்றுதான் என்பதை
ஒருவரையொருவர் அறிந்திருக்கிறார்கள்.
பீரேமாச்சாரியார் எனும் வேதம் படித்த
பிரமாணரின் வாழ்வொழுக்கம் அல்லது வாழ்வின்
அர்த்தம் குறித்த தேடலே இந்நாவல் என நான்
அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்
கருத்துகள்
கருத்துரையிடுக