புலிநகக்கொன்றை நாவல் ஒரு பதிவு




புலிநகக்கொன்றை நாவல் ஒரு பதிவு




திருநெல்வேலியில் வாழும் வடகலை  ஒரு ஐயங்கர் குடும்பத்தின் நான்கு தலைமுறை வராலாறோடு தமிழகத்தின் குறிப்பாக திருநெல்வேலி தூத்துக்குடியின் வராலாற்றையும் சொல்லும் நாவல் புலிநகக்கொன்றை,

ஐங்குறுநூறில் வரும் அம்மூவனார் பாடல் 142 லிருந்து இந்நாவலுக்கான தலைப்பை எடுத்திருக்கிறார் பி அனந்தகிருஸ்ணன் எனும் பி ஏ கிருஸ்ணன். கிட்டத்தட்ட ஒரு வரலாற்று நாவல் தான். பொதுவாக வரலாற்று நாவல்களில் காணப்படும் பிரம்மாண்டம் இந்நாவலில் இல்லை. கதையிணூடே ஊடுபாவும் சம்பவங்கள் அனைத்தும் கதாபாத்திரங்களிலிருந்து தனியே சொல்லப்படமால். கதாபாத்திரங்களுக்கு வரலாற்றுச் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்பை கொண்டு கதை நீங்குவது சிறப்பான  உத்தி….


காதாபாத்திரங்களில் பெரும்பாலானாவர்கள் இலட்சியவாத கொள்கைகொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஒருவகையில் அப்படிப்பட்டவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து முக்கிய கதாபாத்திரங்களாக மாற்றினாரா என்று தெரியவில்லை. இது ஒருவகையில் நாவலின் இயல்புத்தன்மையை பாதிக்கிறது.

 உண்டியல் வீட்டில்  வாழும் அனைவருக்கும் ஒவ்வொரு தலைமுறையிலும் எதாவது ஒருத்தர் துர்மரணம் அடைகிறார்கள். ஓரு பெரிய ஆன்மீக தத்துவவிவாதத்தை ஏற்படுத்த வேண்டிய இந்த புள்ளி வெறும் வாக்கியமாககடந்து போகிறது. கதையில் வரும் மார்க்சிய விவாதங்ககளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் சிறிதளவு இதற்கு கொடுத்திருந்தால் கதை மிகப்பெரிய தரிசனத்தை அடைந்திருக்கும்

ஆண்பெண் மெல்லுணர்வுகளை பாலியலை சொல்லும் காட்சிகளில் சித்தரிப்புகள் போகிற போக்கில் சொல்லப்படுவது போல் இருந்தாலும் . வாசித்து முடிக்கும்போது கனத்த மெளனத்தை உருவாக்கிவிடுகிறது. கண்ணன் நம்பியின் பால்யம் . ஆண்டாள் தன் இளம் கணவுடன் கொள்ளும் காமம் ஆகியவை ,மிக நேரடியாக எழுதப்பட்டுள்ளது அதுவே வாசகனுக்கு மிகுந்த ஆதிர்ச்சியளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

இக்கதையில் வரும் நம்பி ரோசா என்ற இலட்சிய தம்பதிகளின் வாழ்வு மிகமுக்கியமானது. நம்பி தன்னை விட மூத்தவளான ரோசாவை திருணம் செய்துகொள்கிறான். இருவரும் தீவிரமான இடதுசாரிகொள்கையுடையவர்கள் ஆனால். நம்பி போலிஸ் கையில் மாட்டி உயிரிழக்கும்போது வாழ்ந்துவிட துடிக்கிறான். தன் இலட்சியம் அவனுக்கு உயிரை விடும் துணிவை கொடுக்கவில்லை, கடைசி வரையில் அஞ்சி நடுங்கியே நம்பி உயிர் துறக்கிறான். இவ்விடத்தில் வழக்கமான கம்யூனிசவாதிகளுடைய . தியாக இலட்சிய மரணம்  உடைபட்டுப் போகிறது. நம்பி தன் வாழ்நாளில் முழுதும் குழப்பத்தில்தான் இருக்கிறான் அவனுடைய பாதையில் மார்க்சீயமும் ஆன்மீகமும் வந்து குறுக்கிடுகிறது, அவனுடைய தாத்தா நம்மாழ்வாருடன் ஜோசி மடத்தில்
அவன் மேற்கொள்ளும் ஆன்மீக சம்பாசனை மிக முக்கியமானது. அதுவே அவனது மரணத்தருவா
யில் அவனை குழம்பவைக்கிறதோ?

இளம் வயது விதவையான ஆண்டாள் ,ஒருவனோடு அறையில் ஒன்றாக படுத்துகிடப்பதும், பொன்னா அதைப் பார்த்தபின்பு ஆண்டாள் குற்றவுணர்ச்சி கொள்ளாமல் தன் தாயை நோக்கி கொள்ளும் வன்மமும் அதை பொன்னா புரிந்து கொள்ளும் இடம் தான் என்னைப்பொருத்தவரையில் இந்நாவல் அடைந்த உச்சம், பி. ஏகிருஸ்ணன் தன் சமூகத்தின் மீதுவைத்த மிக முக்கிய விமர்சனம் இது. ஒருவகையில் அந்த இடத்தில் பி ஏ கிருஸ்ணன் எனக்கு  யூ ஆர் ஆனந்த மூர்த்தியின் சம்ஸ்கார நாவலை ஞாபகபடுத்துகிறார்.

எனது இரண்டு தலைமுறைக்கு முந்தைய தலைமுறையான கண்ணன் ,நம்பி ரோஸா அகியோருக்கு இருக்கும் இலட்சிய வாதம் இன்று எனக்கு திகைப்பூட்டுகிறது. படிப்பின்போதே அவர்களுக்கு சமுகம் பற்றிய பார்வையும் அதை அவர்கள் தங்ககளுடன் விவாதித்து கொண்டு மேம்படுத்திக் கொண்ட விதத்தையும் இன்று என்னால் ஒரு ஏக்கத்துடன் தான் வாசிக்க முடிகிறது. தொன்னூறுக்கு முன்பிருந்த கடைசி இலட்சிய வாதத்தின் முகங்கள் நம்பியும், ரோஸாவும், அவர்கள் சோவியத்தின் வீழ்ச்சியை எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதை யோசித்துப் பார்க்கிறேன்.

கண்ணன் உமா காதலை என்னைப்போன்ற இளம் வாசகனுக்கு நாவலில்  இருக்கும் இளைப்பாறும் பகுதி. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாவும் கண்ணனும் முத்து தழுவிக்கொள்வதை சொல்லவா வேண்டும். பாரவாயில்லை கண்ணன் நம்பியைப் போல அல்ல பிழைக்க தெரிந்த பிள்ளை இலட்சியவாத சுழலில் உழண்டாலும் உமா என்னும் நீச்சல் தெரிந்த பரிசல் காரி அவனை மீட்டு விட்டாள். அவனும் மத்திய அரசு வேலை கிடைத்து தன் குடும்பத்தை பற்றி ஒரு நாவல் எழுதிவிட்டான்.

ரோஸாவிடம் கண்ணன் திருமணம் செய்துகொள்ள கேட்பதும் அவள் அவனை மறுப்பதும் .அனைவரும் எதிர்பார்த்தது தான் .
ரோசாவிற்கு உள்ளூர கண்ணனை திருமனம் செய்ய ஆசை தான் ஆனால் தான் மெற்கொண்டுள்ள இலட்சிய பயணம் குறித்த சமூகபிரக்ஞ்சையாளே  நம்பியின் பெயரைச் சொல்லி அவள் ஒதுங்குகிறாள். ஒருவேலை பி ஏ கிருஸ்னன் இதன் தொடர்ச்சியை எழுதுவாரென்றால்  உமா முடியாதென்றால் கண்டிபாக ரோஸாவுக்கும் கண்ணனுக்கும் டும் டும் டும். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கையை சமூகம் பார்க்கும் பார்வை அவர்களுக்குள் ஓடும் எண்ணங்கள் இவை இரண்டை மையப்படுத்தி பி ஏ கிருஸ்ணன் தன் மூன்றாவது நாவலை எழுதலாம்.

கண்ணன் நாவலின் பகுதியில் நம்பியின் வீட்டிற்கு போகும் போதே எனக்கு (மைல்டா ஒரு டவுட் வந்தது) தோன்றியது. கண்ணன் தனக்கான இலட்சிய பெண்ணாக உருவகித்தது ரோசாவைத்தான்.  கண்ணன் ரோசா திருமணம் நடக்குமா இல்லை கடைசியில் கைவிட்டு போய் விடுமா பி ஏ கிருஸ்ணன் தான் சொல்ல வேண்டும்

நாவலில் வருபவர்கள் எல்லாம் இலட்சியவாதிகளாக இருப்பதால் மரபிலக்கியமும், மார்க்சியமும், ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்கலும் “சகட்டு மேனிக்கு வர்ரது.” என்னைப்போன்ற ஒரு அறைகுரை இளம் வாசகனுக்கு ஒருவித ஒவ்வாமையும்,தாழ்வுணர்சியும் வருகிறது, ( நாம என்னிக்கு இதயெல்லாம் படிக்க போறோம்)

நாவலின் ஒரே மாதிரியான மொழிநடையில் இருந்திருந்தால் இன்னும் கூர்மையான ஆக்கமாக மாறியிருக்கும் என்பது என் எண்ணம், மரபிலக்கியம் ஆங்கில இலக்கியத்திலிருந்து எடுத்தாண்டிருக்கும் வரிகளோடு என்னால் நாவலின் கதையோட்டத்தை தொடர்பு படுத்திக் கொள்ள முடியவில்லை.
அது நடந்தைருந்தால் முழுமைய்யான மார்க்சிய பிரியாணியோடு கலந்த ஐயங்கார் ஆத்து சாப்பாட்டை இன்னும் கொஞ்சம் நன்றாக ருசித்திருப்பேன்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை புதிய சிலுவை

தேர்வு (சிறுகதை)

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்