புத்துயிர்ப்பு நாவல் வாசிப்பு அனுபவம்


லியோடால்ஸ்டாயின் புத்துயுர்ப்பு நாவல் படித்து முடித்திருக்கிறேன். ஒரு மொழி பெயர்ப்பு நாவலைப் படிப்பது போன்ற அனுபவமே இல்லாமல் எளிமையாய் இருந்தது. சில ரஸ்ய நாவல்களைப் படித்ததிற்குள் ,பீட்டர்பர்ஸ்கும், மாஸ்கோவும், சைபிரியாவும் ,கும்பகோணம்,மதுரை போன்ற பழக்கமான ஊராகிவிட்டிருக்கிறது.
நெஹ்லுதவ் (தமிழ் மொழி பெயர்ப்பின்படி ) ரஸ்யாவின் அறியப்படும் மிகப்பெரிய பிரபுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் .இளமையில் தன் அத்தை வீட்டில் வேலை செய்யும் பெண்ணான கத்யூசாவோடு உடலுறவு கொள்கிறான் .பின் தான் செய்த தவறை உணர்ந்து அவளுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்கிறான். கத்யூசா கர்ப்பமடைகிறாள் அவர் அத்தையின் குடும்பத்திடமிருந்து துரத்தப்படுகிறாள்.

பின் அவள் தஞ்சம் அடையும் ஒவ்வோரு இடத்திலும் ஆண்கள் அவளை துன்புறுத்துகிறார்கள் இறுதியில் விலைமகள் விடுதியில் வாடிக்கையாளர் ஒருவரை கொலைசெய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறார்கள் அங்கு நீதிபதிகளுக்கு கீழ் இருக்கும் சான்றாயர்களில் ஒருவராக நெஹ்லூதவ் இருக்கிறார் கத்யூசாவால் நெஹ்லுதவை ஆரம்பத்தில் அடையாளம் காணமுடிவதில்லை ஆனால் நெஹ்லுதவ் கத்யூசாவை அடையாளம் கண்டு கொள்கிறான் அவளின் இந்நிலைக்கு தான் தான் காரணம் என குற்றவுணர்வு கொள்கிறான் நெஹ்லுதவ்.அவளுக்கு  முடிந்த வரையில் அவளுக்கு உதவிபுரிய  முயல்கிறான்.

 இதற்கிடையில் சான்றாயர்களின்  கவனக்குறைவான தீர்ப்பால் கத்யூசாவிற்கு சைபீரிய கடுங்காவல் தண்டனை அளிக்கப்படுகிறது. அத்தீர்ப்பில் இருந்து கத்யூசாவை மீட்கப்போராடுகிறார் நெஹ்லுதவ் இறுதியில் கத்யூசாவோடு நெஹ்லுதவும் சைபீரியா செல்லுகிறார்.

தான் செய்வது தவறுக்காக கத்யூசாவை திருமணம் செய்து கொள்ள முயலுகிறான் நெஹ்லூதவ். ஆனால் கத்யூசா அவன்  தியாகத்தை மறுத்து சைபீரியாவில் தன்னோடு பழகிய அரசியல் கைதியான சிம்சனை  திருமணம் செய்து கொள்கிறாள் இறுதியில்  சிறைக்கதிகளுக்காக கொடுக்கப்பப்பட்ட ஒரு புதிய ஏற்பாட்டின் பிரதியின் அத்யாயங்களை கத்யூசா படிப்பதில் முடிகிறது நாவல்.

நான் படிக்கும் டால்ஸ்டாயின் மூன்றாவது நாவல் இது இதுவரை படித்துள்ளது அன்னாகரினா, போரும் அமைதியும் (படித்துக்கொண்டிருக்கிறேன்) ,.இம்மூன்று நாவல்களிலும் என்னால் காண முடிவது ரஸ்ய தேசியவாத்தின் மீது டால்ஸ்டாய்க்கு இருக்கும் பற்று தனக்கான ஆன்மீக ஞான தரிசனத்தை டால்ஸ்டாய் ரஸ்யதேசியவாதத்தின் வழியாகவே அடைந்திருப்பார் எண்று தோன்றுகிறது. குறிப்பாக நிலச்சீர்திருத்தம்,அடிமை முறை, நீதிமுறை, போர் , அகியன குறித்து இம்மூன்று நாவல்களிலும் விரிவாக ஆராய்கிறார்.


நெஹ்லுதவின் முழுமையான மனத்தவிப்பே இந்நாவல். அறியா வயதில் செய்த தவறை தன் வாழ்வின் இறுதியில் சரிசெய்ய போராடுகிறார். கத்யூசாவிற்காக தன் சுக துக்கங்ளை துறந்து அவளிக்கு தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார். கத்யூசாவின் வழியே அவள் எளிய மக்களின் அவலங்களை  காண்கிறார் அவர்களுக்காக உதவிபுரிகிறார். தனக்கான பாதை எது என தடுமாறும் நெஹ்லுதவை நாவல் முழுதும் கணமுடிகிறது குறிப்பாக   கத்யூசாவிற்காக சைபீரியாவிற்குச் செல்லும் நெஹ்லுதவ் அங்கு உயரதிகாரி வீட்டில் நடைபெற்ற விருந்தை நினைத்து மீண்டும் தன் பழைய வாழ்விற்கு திரும்ப என்னுகிறான் ஆரம்பத்தில் நெஹ்லுதவை உதாசீனம் செய்யும் கத்யூசா பின் அவரின் வருகைக்காக ஏங்குகிறாள்.

 நெஹ்லுதவை காதலிக்கும் கத்யூசா அவரோடு திருமணம் செய்து வாழ மறுக்கிறார். இறுதியில் நெஹ்லுதவின் தியாகம் தோற்கடிக்கப்பட்டு கத்யூசாவின் தியாகம் வெல்லப்படுகிறது. அல்லது கத்யூசா உண்மையில் சிம்சனை காதலிக்கிறளா? தன்னை மிகவும் புரிந்து கொண்டவர் அவர் தான் என்ப்தை உணர்கிறாளா? அல்லது சிம்மன்சனை மனம் புரிவதன் மூலம் நெஹ்லுத்வின் மேல் அல்லது அவளை ஏமாற்றிய அத்த்னை ஆண்களிடம் தான் கொண்டுள்ள வன்மத்தை தீர்த்துக் கொள்கிறாளா? இந்த மூன்று கேள்விகள் இந்நாவல் முடிவில் ஏற்படுகிறது.    

ஜெயிலில் அடைக்கப்பட்ட கத்யூசா ஆண்கள் எல்லோரும் உடலிச்சைக்காக ஏங்குபவர்கள். தன்னால் எல்லா ஆண்களையும் வளைத்து போட்டுவிடமுடியும் என்று நம்புகிறாள் எனவே நெஹ்லுதவ் தன்னை  அழைத்த போதும் கூட கத்யூசா அவனோடு செல்லவில்லை.  எங்கே அவனோடு சென்றாள்  தன்மீது தான் கொண்டிருக்கும் நம்பிகை அல்லது பாவனை அழிந்து விடும் என்பாதால் தான் அவனோடு செல்லமறுக்கிறாள் கத்யூசா எனத்தோன்றுகிறது . ஆரம்பத்தில் காமத்திலும் குடியிலும் திளைக்கும் கத்யூசா இறுதியில் எல்லாவறையும் விட்டுவிட்டு சிறையில் அரசியல் கைதிகளுக்கு உதவி செய்கிறாள் தன்னை அவர்களிடம் ஒப்படைக்கிறாள். தன் காமத்தை கடந்தவளாக ஆன்மீக வாழ்க்கை நோக்கிபயணிக்கிறாள்  கத்யூசா.


இளம் வயதில் தூயவானய் இருக்கும் நெஹ்லுதவ் ராணுவப்பணிக்கு பின் முரடானாகவும் தன் பழய நற்சிந்தனைகளுக்கு எதிராகவும் இருக்கிறான். சிறைக்கூடத்தில் தண்டனைப் பெற்று பின் வெளிவரும் ஒரு கைதி ஒருபோதும் மனம் திருந்தி நல்லவனாக மாறுவதில்லை இவ்விரண்டையும் விரிவாகவே இந்நாவலில் ஆராய்கிறார் டால்ஸ்டாய் .இதானல் தான் என்னவோ காந்திக்கு இந்நாவல் வெளிச்சம் அளித்ததோ!

 ஒருவகையில் அன்னாவின் உயிரோடு இருந்திருந்தால்(அன்னாகரீனினா)  கத்யூசாவாக மாறியிருப்பாளா? அன்னாவின் மற்றொமொருவடிவம் தான்  கத்யூசாவா?  தன் சபலத்தால் சிக்குண்டு போனவள் அன்னா தன் கணவனிடம் பின் தன் காதலனிடமும் தனக்கான இறுதியை அவளால் அடைய முடியாமல் மரணமடைகிறாள். ஆனால் கத்யூசா சிம்சனை திருமணம் செய்து கொண்டு முழுமையடைகிறாள்.   அன்னாவும் கத்யூசாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை புதிய சிலுவை

தேர்வு (சிறுகதை)

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்