நதிக்கரை இலக்கிய வட்டம் ஜீலை மாத கூட்டம்


நதிக்கரை இலக்கிய வட்டத்தின் இம்மாத கூட்டம் கடந்த ஞாயிறு அன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இகூட்டத்தில் புதிய எழுத்தாளர்களான விசால்ராஜா(முடிவின்மையின் விளிம்பில்) அனோஜன் பாலகிருஸ்ணன் (சாய்வு) நவின் (யாக்கை) ஆகியோரின் சிறுகதைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
இக்கதைகள் குறித்து நடந்த விவாதங்களை இங்கு தொகுத்து கூற முயல்கிறேன்.

அனோஜன் பாலகிருஸ்ணன் (சாய்வு)

தமிழில் incest sex  பற்றி பேசும் கதை மிகக்குறைவு அதனால் இக்கரு எடுத்து கதை எழுதியதாலே அனோஜனை பாராட்டலாம்

       கதை இலண்டனில் நடக்கிறது இலங்கை ஆனுக்கும் சீன பென்னுக்கும் இடையில்

        தமிழ் சிறுகதைகள் பேசும் களத்தை உலக அளவில் எடுத்து சென்றதில் இலங்க்கை எழுத்தாளர்களுக்கு பெரிய பங்கு உண்டு இக்கைதை மூலம் அனோஜனும் அவ்வரிசையில் இணைகிறார்

       கதாநாயகன் மிக கெளரவமான கண்ணியமானவானாக இருக்கும் அதே தருணத்தில் நாயகி புகைக்க கஞ்சா கேட்டவுடன் ஒரு சாதாரண தமிழ்  இலங்கை தமிழ் பையனாக மாறுகிறான்

      கதையின் துவக்கத்தில் இருக்கும் அதிகப்படியான வர்ணனைகள் காட்சி சித்தரிப்புகள் பின்பு குறைந்து விடுகிறது இது கதையை வாசிப்பதற்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது

      இரண்டுபேருக்கும் இடையிலான நட்பு கஞ்சாபுகைப்பதின் மூலமே துவங்குகிறது நல்ல துவக்கம்


       தன் சகோதரனிடம் தான் உறவு கொண்டதாக அவனிடம் சொல்வதுஒரு வேலை கற்ப்பனையாகக் கூட இருக்கலாம்.தன்  மேல் அவன் காதல் கொள்ள அவள் மேற்கொண்ட நாடகமாகவும் இருக்கலாம்..

      பெரும்பாலன கதைகள் முன்னிலை .படர்க்கையில் தான் அதிகம் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் இக்கதை தன்னிலையில் சொல்லப்பட்டுள்ளது

        அவளுக்காக  அலைந்து திரிந்து அவன் கஞ்சாவை வாங்கி வந்து அவளிடம் நீட்டியபோதும் அவள் அதனை சாதரணமாக எடுத்துக்கொள்கிறாள்

       இவ்விரண்டுபேருக்கும் இடையில் நடக்கும் அகப்போராட்டமே இக்கதை என கூறலாம்.

       விசால் ராஜா (முடிவின்மையின் விளிம்பில்)
       கவித்துவமான வர்ணணைகள் கதை முழுதும் நீள்கிறது. ஒரு வகையில் எஸ் ராமகிருஸ்ணன் எழுத்தை ஞாபகப்படுத்துகிறது.

       காதலை முடிந்த அளவிற்கு desire இல்லாமல் சொன்னதால் இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது

       தமிழில் எழுதப்பட்ட விரிவான காட்சி சித்தரிப்பு கொண்ட கதை.

        கதை ஒரு இயல்புவாத அல்லது எதார்த்தவாத கதைக்களத்திலிருந்து மாய எதார்த்தத்தை நோக்கி நகர்கிறது

       வாசித்து முடித்தவுடன் இக்கதை சிறுகதைக்கான வடிவத்தை நிறைவு செய்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வகையில் தேவதைக்கதை fairy tale  போலுள்ளது . உண்மையில் ஒரு தேவதைக்கதைக்கான முயற்சி இக்கதை என்றால் இது மிகச்சிறந்த ATTEMPT.
       நவீன் யாக்கை

      கதையின் துவக்கம் மிகப்பழமையானது. தமிழில் நிறைய கதைகளின் தொடக்கம் போலவே இருந்தது. ஆனால் ஒவ்வொரு அத்யாயத்தின் முடிவிலும் தொடர்ந்து வரும் SUSPENSE  கதைக்கு வாசிப்பு சுவராசியத்தை கொடுக்கிறது

       தமிழில் நவீன சிறுகதைகளில் வணிக கதைகள் போல வாசிப்பு சுவாரசியத்தை கொடுக்கும் கதைகள் மிகக்குறைவு இக்கதைக்கு அது PLUSPOINT

       அவனிடம் சொல்லும் போது தந்தையின் மூச்சுக்காற்று தன் மேல் பட்டது என்று கூறூகிறாள். ஒருவேளை தந்தை மகளுடன் உறவு கொண்டிருக்கிறார் என்பற்கான குறியீடு தானோ அச்சொல் அப்படியானல் கதையின் முடிவை நமக்கு புதிய கோணத்தில் விரித்துக் கொள்ள முடிகிறது.

      நிகழ்வுகள்

        கூட்டத்திற்கு மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தோம் .  ஒருவர் எழுத்தாளர். நான்கு பேர் தீவிரமான இலக்கிய வாசகர்கள் அனைவரும் முப்பது வயதிற்குள் இருப்பவர்கள். கதைகளைப் பற்றிய ஒவ்வொருவருடைய  கோணமும் வேறு வேறாக இருந்தது. விவாதம் நீர்த்து போகதவாறு சுரேஸ்பிரதிப் அருமையாக நெறியாள்கை செய்தார். குட்டி ஜெயமோகன்!!
                                                                                                                                                                       

    நடைபெற்ற நதிக்கரை இலக்கிய கூட்டங்களிலிலேயே  செறிவான விவாதம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தான். அதிகப்படியான நபர்கள் இல்லாததால் அனைவருக்கும் போதிய அளவில் பேச நேரம் இருந்தது.அடுத்த கூட்டம் நடைபெறுவதற்கான பணிகள் கூட்டம் முடிவடைந்தவுடனே தொடங்கிவிட்டது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை புதிய சிலுவை

தேர்வு (சிறுகதை)

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்