அஞ்சலை நாவல் ஒரு பதிவு
கண்மணி
குணசேகரனின் அஞ்சலை நாவலை இரண்டாவது முறையாக படித்து முடித்தேன். பொதுவாக
இயல்புவாத படைப்புகள் பெரும்பாலும் வாசிப்பு
சுவாரசியம் குறைவானதாகவும் கதைகூறலே
பிரதானமாக இருக்கும். ஆனால் அஞ்சலையை ஒவ்வொரு பக்கத்தையும் விருவிறுப்பாகவும்
கண்ணீரும் கம்பலையுமாக படித்துமுடித்தேன்
தமிழில்
நவீன இலக்கியத்தில் ஒரு பெண் கதா பாத்திரம் எப்படி இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்ப்படுத்தியது என்பதை நினைத்து
பார்க்கும் போது ஆச்சரியமாய்! இருக்கிறது. என்னளவில் நான் படித்த தமிழ்நாவல்களில்
மிகச்சிறந்த பெண் கதா பாத்திரம் கொண்ட நாவல் என்றால் அஞ்சலை தான்.
“புகைய
ஆரம்பிப்பதற்கு முன்பே அணைத்துவிடாலாம் என்று தான் பாக்கியம் நினைத்தாள்.” என்ற வரியில் நாவல் துவங்குகிறது ஆம் எல்லா அம்மாக்களும் தங்கள் பெண் பிள்ளைகளைப்பற்றி
அப்படித்தானே நினைக்கிறாள்!
அஞ்சலையும்
ஆண்டை மவனையும் பற்றிய பேச்சு புகைய ஆரம்பித்ததும்.அஞ்சலைக்கு தீவிரமாக பெண்
தேடுகிறாள் தாய் பாக்கியம். பாக்கியத்தின் தம்பி (அஞ்சலையில் நடு அக்காளை
கட்டியவன்) அஞ்சலையை இரண்டாம்தாரமாக கட்டிக்கொள்ள கேட்கிறான் முதலில் ஒத்துக்கொண்ட
அஞ்சலை பின் தன் நடு அக்காளின் வாழ்க்கையையும் கெஞ்சலையும் நினைத்து மாட்டேன் என்கிறாள்….. .அதை மனதில் வைத்துக்கொண்டு அவன் அஞ்சலைக்கு பெண்
பார்க்கும் போது ஒரு மாப்பிளையைக் காட்டி பின் ஏமாற்றி மற்றொருவனுடன் திருமணம் முடித்து
வைக்கிறான்.அஞ்சலை அதற்குள் முதலில் பார்த்த மாப்பிளையை தன் கணவானாக மனதில்
வரிக்கிறாள்…………
அஞ்சலையால்
நடந்து முடிந்த ஏமாற்றுத் திருமணத்தை
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் மனதில் வரித்திருந்தவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததை
நினைத்து அதிர்ச்சியடைகிறாள்!
.
கணேசன்
(மண்ணாங்கட்டி அஞ்சலையின் கணவன்) சோப்லாங்கி
உடல் வலிமையோ பார்க்க அழகோ இல்லாதவன். அஞ்சலை எப்படியும் மனம் மாறுவாள் என்று
நம்புகிறான்.. ஆனால் அஞ்சலையின் மனமும்
உடலும் அவனுடன் இணைய மறுத்து. அவன் அண்ணனையே மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறது
ஓரிடத்தில் அவள் தான் விரும்பியவனை வழி மறித்து. தனக்கு தன் வாழ்வுக்கு வழி சொல்லுமாறு கேட்கிறாள்! அவன் மெளனமாக அவளை
கடந்து போகிறான்.
அஞ்சலையால்
அவள் முதலில் வாக்கப்பட்ட மணக்கொல்லயில் அவளுக்கு ஒரே ஆறுதல் வள்ளிதான் வீட்டில்
முடங்கி கிடக்கும் அஞ்சலையை அவளே தண்ணீ தூக்கவும்,வேலைக்கு முந்திரி காட்டுக்கும்
அழைத்துச் செல்கிறாள் .அவளும் வேறு ஊருக்கு திருமணமாகிபோக அஞ்சலைக்கூ ஊரில் இருந்த ஒரு
பிடிப்பும் போக பிடிக்காதவோனோடு பிடிப்பில்லாமல் இருக்கிறாள். ஒரு கட்டத்தில் “மண்ணாங்கட்டி
கணேசன் உணக்கு பிடிச்சிருந்தா இரு இல்லன்னா கிளம்பி போ” என்றவுடன் வீராப்பாக
கிளம்பிய அஞ்சலை போக வேறு இடமின்றி கார்குடல் போவதற்காக வண்டி ஏற விருத்தாசலம்
வருகிறாள். அங்கு தன் மூத்த அக்காவை காண்கிறாள். அஞ்சலலையில் கதையை கண்ணீரோடு
கேட்கும் மூத்தவள் அஞ்சலை தன் வசமாக்கி அவன் கொழுந்தனுக்கு திருமணம்
செய்துவைக்கிறாள். கணேசனாலும் அவன் அண்ணனாலும் அணைக்க முடியாமல் போன அஞ்சலையை
பற்றியெரிந் காமத்தைமூத்தவளின் கொழுந்தன் மூலம் அணைகிறது. அக்காளையும் அஞ்சலையின் இரண்டாம் கணவனையும்
தெய்வாமாக பார்க்கிறாள் அஞ்சலை….
அஞ்சலை கர்ப்பமாகிறாள்!! நாள்பட நாள்பட
அஞ்சலையின் மூத்தவளுக்கும் கொழுந்தனுக்கும் இருக்கும் உறவு இருப்பது கண்டும் பாரமுகாமாய் இருக்கிறாள். ஒரு
நள்ளிரவில் அஞ்சலை தோட்டத்திற்கு பக்கம் எச்சில் துப்ப போன போது மூத்தவளும்
அஞ்சலையின் கணவணும் ஒன்றாய் கட்டிலில்
கிடப்பதை பார்த்து அவள் மனம் வெடிக்கிறது. அஞ்சலைக்கு அப்போதான் வந்து
மாட்டிக்கொண்ட புதை குழியை நினைத்து உணர்ந்துகொள்கிறாள். இனி கார்குடலுக்கோ மணக்கொல்லைக்கோ செல்ல
வழியில்லை இங்கேதான் இருந்தாக வேண்டும்! ஆனால் அஞ்சலையின் கணவனின் புறக்கணிப்பை
அவள் அக்காகாரியின் தொல்லையும் அவளால்
தாங்க முடியாமல் தவிக்கிறாள்.
இவர்களை
கட்டுப்படுத்த வயிற்றில் இறுக்கும் சிசு வரவேண்டும். ஆம்புளபிள்ள வந்து அவங்க
அப்பனையும் சின்னம்மாவையும் உதைப்பான். என்று கனவு காண்கிறாள். அஞ்சலைக்கு அடுத்த இடியாக பெண்குழந்தை
பிறக்கிறது. இதற்கிடையில் அவளூடைய அக்ககாரியும்
கொழுந்தன் மூலம் கர்ப்பமடைகிறாள் அஞ்சலைக்கு தன்னையும் தன் சிசுவின் மீது இருவரும்
காட்டும் பாரமுகமும் அவளை தீரதுக்கத்தில்
ஆழ்த்துகிறது. இடையில் அஞ்சலைக்கும் அக்காவிற்கும் வாய் முத்தி கை தடிக்க அஞ்சலை
தொளாரில்(இரண்ட்டாம் கணவனிடமிருந்து) இருந்து விரட்டப்படுகிறாள்.
முதல்
கணவனுக்கு மணப்பெணாகச் சென்றவள் இரண்டாவது கணவனின் குழந்தையை தூக்கீயவாறு தாய்
வீடு திரும்புகிறாள். அஞ்சலைக்கு தன்னால் துவக்கப்பட்டதுதானே இப்பிரச்சனை திரும்ப இங்கே
நம்மிடமே திரும்பி வந்திருக்கிறது என பாக்கியமும் அஞ்சலையை ஏற்றுக் கொள்கிறாள்.
ஊர்
மக்களின் பேச்சும் ஆண்களின் சீண்டலுக்கும்
இடையில் தன் மகள் நிலாவை வைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறாள் அஞ்சலை…
பின்னர் திருமணமானமாகிப் போன வள்ளியை ஓரிடத்தில் சந்தித்து
அவள் மூலம் மணக்கொல்லையில்
கணேசனை அஞ்சலை விட்டுச் சென்ற பிறகு இரண்டாம் திருமணம் செய்து வைத்ததையும்
அதை அவன் ஏற்றுக் கொள்ளாமல் அஞ்சலையை நினைத்து அவளை விரட்டி விட்டதையும் அறிகிறாள்
.
கார்குடலில்
இருந்து வசை கேட்க முடியாமல் தன்
குழந்தையை பாக்கியத்திடம் (அஞ்சலையின் அம்மா) விட்டுவிட்டு மீண்டும் முதல் கணவனிடமே திரும்புகிறாள் அஞ்சலை. கணேசன் அஞ்சலையை ஏற்றுக்கொள்கிறான்….அஞ்சலைக்கு
மீண்டும் கணேசன் மூலம் இரண்டு பெண்
குழந்தைகள் பிறக்கிறது. மூன்றாவதாக ஒரு ஆண்குழந்தைக்கு கணேசன் முயல்கையில் அஞ்சலை அவனுக்கு தெரியாமல் டவுனுக்கு போய் குடும்ப
கட்டுப்பாடு செய்துகொண்டு வருகிறாள்.
அஞ்சலைக்கு
கார்குடல் விட்டு விட்டு வந்த நிலாபுள்ளையை( வெண்ணிலா) அடிக்கடி நினைத்து ஏங்குகிறாள்.. அவளுடைய வாழ்க்கையும்
தன்னுடைய வாழ்க்கை போல ஆகிவிடுமோ என நினைத்து பயப்படுகிறாள்! எப்படியாவது தன் மகளை
தம்பிக்கு மனம் முடித்துவிடவேண்டும்.அது ஒன்றே அவளை காப்பாற்றும் ஒரெ வழி!! என
நம்புகிறாள்.
வெண்ணிலாவை
அஞ்சலையின் தம்பி டவுனில் பள்ளீக்கூடம் படிக்க வைக்கிறான். அவனும் ITI படித்து
விருத்தாசலத்தில் வேலைக்கு சேர்கிறாண்
வெண்ணிலா
வயதுக்கு வந்துவிட்டாள்… அஞ்சலையால் இனியும் பொருத்துக்கொள்ள முடியாது தம்பி அஞ்சலையை கட்டிக்கொள்வான் என நினைத்து
தம்பியிடம் நிலாவை கட்டிக்கொள்ள கேட்கிறாள். இத்தனை நாள் ஒன்றும் சொல்லாமல்
இருந்தவன் தற்போது நிலா தான் துக்கி வளர்த்த பிள்ளை அவளை தன்னால் கட்ட முடியாது!
தனக்கு தங்கச்சி போன்றவள் என்கிறான் அஞ்சலையின் மேல் விழுகிறது அடுத்த இடி
அஞ்சலைக்கு
அவன் தம்பி நிலாவை கட்டமறுப்பதற்கான
காரணம் தெரிய வருகிறது. மூத்தாவள் (தொளார்க்காரி)
தம்பிக்கு தன் மவளை முடிக்க பேசியிருக்கிறாள். அஞ்சலை இதை அறிந்து தன் வாழ்வை
கெடுத்தவள் தன் மகள் வாழ்வையும் கெடுக்க வந்ததை நினைத்து மனம் குமுறுகிறாள்.
இது
வரை தனக்காக யாரிடமும் மண்டியிடாத அஞ்சலை தன் மகளுக்காக தம்பியிடம் யாசிக்கிறாள்.
“ என்னா எப்பா இதுலாம்? வாணம் சாமீ. காசு பணத்த
பாக்காதா சாமீ. புள்ள கொணத்த பாருப்பா. ஏம் புள்ளைய கட்டிக்கப்பா. நீ தூக்கி வளத்த
புள்ள. தூக்கி கெடசாத சாமீ. நெலாவா கட்டிக்கப்பா”
குரல்
உடந்து கண்ணீல் நீர் நிறைந்து அஞ்சலை யாசிப்பதை வாசிக்கும் போது கண்கள் நிறைந்து
மனதிலிருந்து கிளம்பிய துக்கம் தொண்ண்டையை
கவ்வி பிடிக்கிறது…….
இறுதியில்
நிலாவை அழைத்துக் கொண்டு திரும்ப மணக்கொல்லைக்கு வருகிறாள். நிலா என்றாலே எரிந்து
விழும் கணேசன் வீட்டிற்கே வரமறுக்கிறான் .இதற்கிடையில் தன் “ஓப்படியாவுடன்”
நடக்கும் சொத்து தகராறில் அஞ்சலை வென்று விட்டதை நினைத்து ஓப்படியாவின் பிள்ளைகள் வஞ்சம் வைத்து அஞ்சலையை அடிக்கிறார்கள் அஞ்சலை
கதறுகிறாள்.
வேகமாக
வரும் கணேசன் அஞ்சலையை ஏசுகிறான் “ இப்ப என்னாடி ஒன்ன இல்லாதத சொல்லிட்டானுவோ. நீ
தேவுடியாதான்டி. போன எடத்துள பிள்ள பெத்துகிட்டு, அதையும் இங்க இட்டாந்து
வச்சிருக்கல்ல? தேவிடியாளுக்கு என்னடி
ரோசம்? தேவிடியாளத்தான் நான் இழுத்து வச்சுருக்கேன்.இல்லன்னா வாய அடக்கி
வைச்சிருப்ப. அன்னக்கி அடங்காத குத்தந்தான், இப்பிடி நிக்கிற, ஒனக்கு என்னாடி
ரோசம் மானம். பீ தொடைச்ச கல்லாட்டம் கெடக்க வேண்டிதான”?
நான்கு
பேர்களுக்கு மத்தியில் தெருவில் வைத்து இவ்வாறு கணேசன் பேசியதை நினைத்து
துடிதுடித்து போகிறாள் அஞ்சலை.
அஞ்சலை
தூக்கு போட்டுக்கொண்டு சாக ஓடுகிறாள்.
நாஞ் சாவப்போறேன். என்ன வுட்டுடுங்க …..இந்த
சிரிப்பா சிரிச்ச கறிய வச்சுகிட்டு எதுக்கு கிடக்கனும்? அஞ்சலை கிழக்கே
முந்திரிக்காட்டு பக்கம் சேலையோடு ஓடுகிறாள்.
நிலா அவளை பின் தொடர்கிறாள்….
“நாடுமாறி
நீ எண்டி சாவுற நாந்தாண்டி சாவணும் , எனக்கு யாருடி இருக்கா என்ன யாரு வச்சு
காப்பத்துறது….ஆநாதைய நிக்கிறதுக்கு நாந்தாண்டி …சாவணும். நீ பண்ணதுக்கு நாந்தாண்டி
சாவணும். எனக்கு கொடும பண்ணிட்டு நீயேண்டி சாவற? என்னக்கொன்னுட்டு செத்துப் போடி”
.நிலாவின்
பேச்சால் வாயடைத்து போகிறாள் அஞ்சலை .
மெல்ல
நிலாவின் கயை பிடித்துக் கொண்டு அடியெடுத்து வைக்கிறாள் .அவ்வடி அவள் தன் இரண்டாம்
வாழ்வில் எடுத்து வைக்கும் முதல் ஆடி அவ்வடி சொல்வது ஒன்றே ஒன்றுதான்.ஆம் வாழ்வு
இன்னும் எஞ்சியிறுக்கிறது……………….
இந்நாவலில்
அஞ்ச்லைக்கு எங்குமே பிறழ் உறவு இல்லை இரண்டு ஆண்களையும் அஞ்சலை மனபூர்வமாக
திருமணம் செய்கிறாள் இருவராலும் ஏமாற்றப்படுகிறாள். ஆனால் சமூகம் அஞ்சலையைத் தான்
ஒழுக்கங்கெட்டவளாக பார்க்கிறது.
மனம்
ஜெயகாந்தனின் கங்காவோடு (சிலநேரங்களில் சில மனிதர்கள், அக்னி பிரவேசம், கங்கை
எங்கே போகிறாள், ஆகியவற்றுள் வரும் கங்கா) அஞ்சலையை ஒப்பிட்டுக்கொண்டது. இதை சொன்னபோது நண்பர்
சுரேஸ் பிரதிப் சொன்னார். கங்கா படித்த நடுத்தர வர்கத்து பெண். அவளுக்கு தான்
சார்ந்த சமூகத்திற்கு எதிராக இருப்பதற்கு அவளுடையை படிப்பும் பொருளாதாரமும்
இருக்கிறது. ஆனால் அஞ்சலை ஏதுமற்றவள் “உருண்டைச் சோறுக்கு ஆசைப்பட்டு படிப்பை
விட்டவள்.”
பெண்களையும்
ஆநிரைகளையும் பாதுகாப்பது, கவர்ந்து செல்வது பற்றி ரிக் வேதத்திலே வருகிறது.
பெண்களை ஒரு சொத்தாக கருதுவது, தன் எதிரியை அழிக்க தனக்கான வீரமகனை
பெற்றுத்தரத்தானே பெண்!…. அப்பெரிய
ஆணாதிக்க மரபின் தொடர்ச்சியை தான் அஞ்சலையும் எதிர்கொள்ளுகிறாள்.
விளிம்பு
நிலையில் உள்ள மக்களில் ஒருவளான அஞ்சலை. எதிர்கொள்ளூம் பிரச்சனைகள் பெரும்பாலான
விளிம்புநிலை சமுகங்களில் உள்ள பெண்களுக்கு பொதுவானது. அஞ்சலை நம் கண் முன் வாழ்ந்தவள், வாழ்பவள், வாழப்போகிறவள்,
காலமில்ல
தன்மை கொண்டை கதாபாத்திரம் அஞ்சலை என்பதே இந்நாவலின் தனிச்சிறப்பு என நினைக்கிறேன்.
அஞ்சலை உணர்ச்சிகரமான ஒரு கதை என்பது எல்லோருக்கும்
தெரிந்திருக்கும். அஞ்சலை ஏன் நம்மை பாதிக்கிறாள்
என்று கேட்டால் அவள் ஒரு தனி பெண் இல்லை என்பதே என் பதில். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கே உரிய ஆழ்படிமங்கள் (archetype) உண்டு. அஞ்சலையின் கதையை படிக்கும்போது என் மனம் உடனடியாக அவளை நல்லத்தங்காளுடனோ கண்ணகியோடோ முடிச்சிட்டுக் கொள்கிறது. பல நூற்றாண்டுகளாக கன்னித் தெய்வமாகவும், தாயாகவும், ஏமாற்றப்பட்ட பேதையாகவும்
இருக்கிற பெண்கள் எல்லோரும் அஞ்சலையின் மேல் ஏறிக் கொள்கிறார்கள். நம் சமூகச் சட்டகங்களின் இரும்பு கம்பிகளை அங்கு பார்க்கிறோம்.
அஞ்சலையின் முடிவு இன்னும் காவியத் துயர் கொண்டது. மீண்டும் அது அவள் மகளை பற்றிக் கொள்கிறது. எப்படி அஞ்சலைக்கு முன்னால் ஒரு பெரிய காலம், படிமங்களின் வழியே வந்து சேர்ந்ததோ அதேப் போல் அஞ்சலைக்கு பின்னால் இன்னொரு முடிவற்ற காலத்தை நான் கற்பனை செய்துகொள்கிறேன்.
அருமை. இதுபோல் நல்ல புத்தகங்களை இங்கே அறிமுகம் செய்யலாம்..
பதிலளிநீக்குபணி சிறக்க வாழ்த்துகள்
thanksbro definitely i continue this activity
நீக்கு