சிறுகதை புதிய சிலுவை
மலையின் உச்சியில் ஏறி நின்றிருந்தது.ஆடுகள் காலை மேய்ச்சலை முடித்திவிட்டு
ஈட்டி மரத்தின் உச்சி நிழல் விழும் மந்திப் பாறையின் அடியில் பதுங்க துவங்கியிருந்தன.
ஆள் நடமாட்டமில்லாதாலால் மண் ரோட்டிலிருந்து மலைக்கு ஏறும் பாதை கோறைப்புற்களால் மூடியிருந்தது.அமண
மலையிலிருந்து கிழக்கு நோக்கி வீசிய காற்றில் ஈட்டி மரமும் மஞ்சனெத்தியும் கோரைப்புற்களும்
அவன் வருகைக்கு இசைவு தெரிவித்து உடலை சிலுப்பின.கைத்தடியால் கோரைபுற்களை விலக்கி விட்டுகொண்டுமலையேறத்துவங்கினான்.
ஓணானும்,அரணைகளும் புதிய உயிரின் வருகையைக் கண்டு தங்கள் வழக்கமான இடத்தை
விட்டு ஓடத்துவங்கின. மலைமேல் கைபிடிபாறையை புற்கள் மூடியிருந்தன. மேலே செல்வதற்கு இடப்பட்டிருக்கும் வழிகாட்டி அம்புக்குறியை
தேடத்துவங்கினான்.பாறையின் இடது பக்க மூலையில் நீல வண்ணம் பாறையுடன் கலந்து மேல்நோக்கி
இடப்பட்டிருந்த அம்புக்குறியை பார்த்த போதுதான் கொஞ்சம் ஆசுவாசப்பாட்டான்.
பின் முதுகில் ஏறி நின்றிருந்த வெயில்
கழுத்து நரம்புகளின் வழியே அவன் உச்சந்தலையில்
ஏறியது! நா வறண்டு தொண்டையை பற்றிப்பிடித்துக் கொண்டபோதுதான் . தண்ணீர் போத்தலை வாகனத்திலே
வைத்து விட்டதை உணர்ந்தான். எடுக்க வேண்டுமென்றால்
ஏறிவந்த தூரம் இறங்க வேண்டும் என நினைத்த போது அவனுக்கு மலைப்பாக இருந்தது .மேலே தண்ணிப்பாறை
சூரிய ஒளி பட்டு லேசாக மின்னியது… எச்சிலை வெளியே இழுத்து உதட்டில் மெழுகி விட்டு மேலேறத்துவங்கினான்.
பன்றியை
குதம் வழியாய் யானை ஒன்று புணர்வது போல் தண்ணிப்பாறையின் அடிமுகப்பு இருந்ததை உணர்ந்தான்.
கிழே கற்களால் கூட்டப்பட்ட அடுப்பும் கருவேல மர விரகுகளும் கிடந்தன…முன்பு நீர் வழிந்தோடிய இடத்தில் பாசிகள் படிந்து
உலர்ந்து பிளந்திருந்தன.பாறையின் பொந்துக்குள் இருந்து நீர் ஒரு சிறு கன்னியைப்போல்
கீழ்நோக்கி வழிந்து கொண்டிருந்தது.பள்ளத்தில் இருந்த நீரில் அறைத்தவளைகள் துள்ளிக்கொண்டிருந்தன அதை விலக்கி நீரை அள்ளிய போதும், ஒரு அரைத்தவளை கருத்த மச்சத்தைபோல் கையில்
ஒட்டிக்கொண்டது
வயிறு நிரம்ம்ப குடித்துவிட்டு அருகில் இருந்த
பாறையில் உடலை கிடத்தினான்.பாறையின் குளிர்ச்சி அவன் உடலுக்குள் இறங்கி கண்ணை கிறங்கச்செய்தது
…………………………………………….
அமண மலையின் அடிபாகத்தில் இருந்து எழுந்த
நரியின் ஊளை செவிகளில் அறைந்து அவனை எழுப்பியபோது அமணமலையில் ஒற்றைக்கழுகு
ஒன்று தாழ்வாக வட்டமிட்டுக்கொண்டிருந்தது .விழித்து பாறைக்கும் கண்ணத்திற்கும்
இடையில் பசைபோல் ஒட்டி ஒழுகிக் கொண்டிருந்த எச்சிலை ஒரு கணம் பார்த்து திகைத்து
விட்டு பின் துடைத்துக்கொண்டான்.கானல் நீரின் அலைகள் மறைந்து தெளிந்திருந்த முன் மாலை
வெளிச்சத்தில் கிராமத்தின் வீடுகள் அட்டைபெட்டிபோலவும் ஊருக்கு வரும் சாலை மன்னூளிப்பாம்பைப்போலவும்
நெளிந்து கொண்டிருந்தது.ஊர்விரிந்திருந்தது முன்பு குடிசையாய் தெரிந்த வீடுகளில் எல்லாம்
தற்போது வெள்ளைக்கட்டிடமாக மாறியிருந்தது ஊர் மந்தையும் ஆலமரமும் முழுதாக
தெரியாமல் கட்டிடங்களால் மூடி அறை குரைகளாக தெரிந்தன..
ஊர்ஓரத்தில் இருந்த தொட்டிநாயக்கன் கிணறு நீரில்லாமல்
வற்றி இருந்ததை நினைத்துக் கொண்டான். கிழவன் சொன்ன கதை மெல்ல நினைவு வந்தது ஒரு தை
மாதத்தின் நிறை பெளர்ணமி நாளில் தான் ஒச்சாயி இவ்வூருக்கு புது பெண்ணாக சின்னபாண்டித்தேவருக்கு
வாக்கப்பட்டாள். மதிப்பனூரின் பெரியத்தேவர் வம்சத்து பெண் என்பதால் ஊரே சித்திரத் திருவிழா
போல அல்லோகலப்பட்டதாம். இருநூறு காளை வண்டியில் பெரியத்தேவர் அனுப்பிய சீதனம் சின்னப்பாண்டியின்
இரண்டு காரை வீடுகளிலும்.வைக்க முடியாமல் வீட்டுத்திண்ணையிலும் மாட்டுகொட்டத்திலும்
கூட வைக்கப்பட்டது. அத்தனை பண்ட பாத்திரங்களையும். சலித்து தேடி புதுப்பெண் தண்ணி எடுத்துக்
கொண்டு வரவேண்டிய புதிய பித்தளை குடத்தை எடுத்துக் கொண்டு தொட்டியாங்கிணறு
நோக்கி நடந்தாள்.புதுத்தண்ணி எடுத்து வர வீட்டுத்திண்ணை விட்டு வீதியில்
இறங்கியபோது விளைந்து நெல்லின்
உமியை ஒத்த அவளின் முகம் வெட்கத்தால் நாணி கன்னங்கள் பருத்திருந்தன.சீலைக்காரி கட்டியிருந்த
பச்சை பட்டுடுத்து சேலையின் தலைப்பை இடுப்பில் சொருகி.உள்ளங்காலில் பெளர்ணமி நிலவைப்போல்
சிவந்திருந்த மருதானியும் செருப்பில்லாத கால்களுமாய் அவள் வீதியில் நடந்த போது மந்தையிலும்
உட்கார்ந்திருந்த பாதையில் நடந்து போய்கொண்டிருந்த இளவட்டங்கள்
.வியத்து போய் அசையாமல் ஏக்கத்தோடு அவளை ஒரு கணம் பார்த்து பின் வழி விட்டு நிற்க பெருசுகள்
தோள் துண்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டு
வேட்டியை இறக்கிவிட்டுக்கொண்டு தலை மேல் கை
தூக்கி கும்பிட்டார்கள். அவள் நடந்து போகும்போது ஊர் சில நிமிடம் அசைவற்று யாரோ ஊரையே
கட்டிபோட்டது போல் இருந்ததாம்.
வரி வாங்க வந்த அந்த வெள்ளையன் ஏன் அந்நேரம்
வந்தான் என்று தெரியவில்லை. ஊர் சிலையாக நின்ற நேரத்தில் அவள் தொட்டியாங் கிணற்றில்
நிறைகுடத்தில் நீர் எடுத்து திரும்பும் போது குதிரையில் வந்த அவன் ஒச்சாயின் புதுக்கோலத்தைப்
பார்த்து ஒரு கணம் திகைத்து பின் அருகில் வந்து அவள் பெயர் கேட்டதாகவும்
அவள் புரியாமல் மருவி நிற்க….. வெட்கத்தால் கை நடுங்க வழுக்கிய தண்ணிகுடத்தை
இடுப்பில் சேர்த்து இழுத்த போது வெள்ளைக்காரன் அவள் இடுப்பை
பார்த்து லேசாக கண்சிமிட்டினான்.
சிலையாய் நின்றிருந்த ஊரெல்லாம் ஒரு
கணம் அவளைப் பார்த்து சிரிக்க மெளனித்து நின்றவள் நிறைகுட நீரை அவன் முகத்தில்
தூக்கி வீச குதிரை மருண்டு அவன் கீழே விழுந்தவனின் நெஞ்சில்
ஏறி அங்ககாரமாய் மிதித்தவள் பித்தளைக் குடத்தின் மடக்கி விடாத கூர் முனைகளைக் கொண்டு அவன்
கழுத்தை அறுத்தாள். முகத்தில் ரத்தம் தெரித்தவளாய் நிமிர்ந்து பார்த்தவள்.நேரக பெரிய
வீட்டின் நடுவில் நின்றிருந்த சின்னபாண்டியைப் பார்த்தபோது அவன் இருண்ட போயிருந்த முகம் மெல்ல
கீழே குனிந்தது….
ஒரு கணம் அவன் முகத்தை தீயால் சுடுவதைப்போல்
வெறித்துப் பார்த்தவள் ஆங்காராமாய் தொட்டி நாயக்கன் கிணற்றை நோக்கி ஓடினாள்….நீரின்
அடர் நீலத்தை ஒத்து கட்டப்பட்டிருந்த கிணற்றின் மேல்சுவரில் அதன் வழுவழுப்பான படிக்கட்டுகளில்
ஏறி மழுங்கிய வெட்டருவாள் போல் கூர்மையான அதன் தலைப்பகுதியில்
தன் தலையை ஆங்காரமாய் முட்டி பிளந்தாள்.தேங்காய் சிதறல்களைப் போல் தலையை ஆங்காரமாய்
முட்டி உடைத்தவள் தலையில் சூடியிருந்த அரளிப்பூவை அறுத்து எறிந்தாள். உடலின் ஓரு
பக்கச் சதை பிய்ந்து ரத்தம் தோய்ந்து தரையில் துள்ளுவது போல.செவ்வரளி
கிணற்றுக் கல்லில் பட்டு துள்ளியது . இறுபுறமும் கைநீட்டி ஆங்காரமாய் கிணற்றுக்குள்
குதித்தாள். . கழுகின் இறக்கை போல தலை முடி அவளின் இருபுறமும் விரிந்தது. தன் நீண்ட
கருமுடிகள் குளம் முழுவதும் நிறைந்திருக்க அவள் தேகத்தில் இருந்து வழிந்த ரத்தத்தால் கிணறு
செங்காவியால் நிறைந்திருந்தது. வம்சத்த விடமாட்டென்டா……வம்சத்த வேரறுப்பேன்.. இக்குரலின்
பின் ஒரு ஆங்கார அழுகுரல் கிணற்றின் சுவற்றில் பட்டு எதிரொலித்து பின் வான்
நோக்கி எழும்பியது…..
…………………………
சின்னப்பாண்டி திண்ணையில் அமர்ந்தவர்
கண் விழித்த போது பித்து பிடித்தது போல் அறற்றினார். பெரியத்தேவருக்கு இழவு சொல்லிவிட்டபோது
மீசையை ஒரு பக்கம் நீவி விட்டுக்கொண்டு முந்தியை மூடி அறற்றிகொண்டிருந்த
மனைவியை தன் அகண்ட மார்பில் அணைத்துக் கொண்டாராம்
பின் ஊர் பொது மக்கள் தொட்டப்பநாயக்கணூர் கோடங்கியிடம் குறி கேட்கப் போனபோது அவர்
அருள் வந்து வந்தவள் சீலைக்காரி தாண்டா வந்தவ… .ஊர் தழைக்க குலம் தழைக்க வந்தவளை கொன்று
விட்ட ஊரை அவள் இனி சும்மா விடப்போவதில்லை என்றும் பழி கேட்பாள் என்றான்….. .ஊருக்கு
மேற்கில் அமணமலைக்கு எதிராக இருக்கும் கிழக்கு மலையில் அவளுக்கு கோயில் கட்டு சின்னப்பாண்டி
வம்சம் ஒவ்வொன்னும் வருஸம் தவராம அவளுக்கு பலி கொடுக்க வேண்டும் என்றான்
…….……………………………………………
நாகமலைப் புதுக்கோட்டையில் சித்தப்பா
வீட்டில் இருந்த பழய
கருப்பு போட்டோவில் சின்னப்பாண்டி
பாட்டனின் முகத்தை மெல்ல ஜான் நினைவு கூர்ந்தான். பின் தாத்தா சொன்ன ஒச்சாயி
முகத்தை நினைத்த போது அவனுக்குள் கிலியும் ஒரு துளி காமமும் வந்தது சட்டென அவனுக்கு
மூத்திரம் முட்டியது ஒச்சாயின் சிலைக்கு பின் புர மாக பாறையில் படுத்திருந்தவன் மெல்ல
பாறையின் இடதுபுறம் புற்களுக்கு இடையில்
இருந்த பிளவில் சிறுநீர் கழிக்க சென்றபோது தான் மலையின் உச்சியில் ஊனப்பட்ட சிலுவையைப்பார்த்தான்.புதிய
சிலுவை பின்னால் இருந்த மந்திபாறையின் மேல் வரயப்பட்ட கோடுபோல் இருந்தது.கைத்தடியை
எடுத்துகொண்டு கோறையை விலக்கிக் கொண்டு மீண்டும் மேல் ஏறத்தொடங்க்கினான்.நெருங்கி
வர வர புதிய சிலுவை வளர்ந்து கொண்டே சென்றது .நான்கு புரமும் செம்மன் பரப்பி அடியில்
காங்ரீட் கலவயினால் சிலுவை ஊனப்பட்டிந்தது.புதிதாக கொழுத்திவக்கப்பட்டிருந்த மெழுகுதிரிகள்
எரிந்தும் எரியாமலும் தரையில் நிரந்து கிடந்தன……
அப்போதுதான் அவனால் பார்க்க முடிந்தது அமண
மழைக்கு கீழே இருந்த உடைந்து பிளக்கப்பட்டு புதிய பாதை சிலுவயை நோக்கி மேலேறி வந்து
கொண்டிருந்தது பாறையை ஒட்டியிருந்த வேப்ப மரம் வாடித் தளர்ந்து மஞ்சள் நிறத்தின்
இறுதியில் இருந்தது.தீடிரென வானம் இருட்டத்தொடங்கியது வானத்தை மேகங்கள்
கருந்திரைச்சீலை இட்டு மூடத்துவங்கின.ஆடுகள் மேய்ச்சலை முடித்து விட்டு புதிய பாதை
வழியாக தாவி இறங்கத்தொடங்கியிருந்தன.
ஆடுகளின் மே….மே…..கனைப்புக்களின் இடையில் ஒரு புதிய குரல் அமண மலையின் மீது பட்டு. ஜான் அச்சத்தத்தை செவி கூர்ந்து கேட்டான் எதிரொலித்தது ஒரு பென்ணின் அழுகுரல்…மழை சட சடக்கத்துவங்க்கியது மேழே கரு மேகத்தை பார்த்துக்கொண்டிருந்த அவனின் நெற்றிப்பொட்டில் பட்டு தெரித்து மூக்கின் கூம்பின் முனையில் வந்து நின்ற அப்பெரு மழையின் முதல் துளியை நாகத்தைப்போல் அவனின் நாக்கு விளுகென்று நீட்டி ஏந்திக்கொண்டது. நீரின் உப்புச்சுவை வியர்வையா! அல்ல கண்ணீர்!! உப்பின் கரிப்பு! …….முன்பு கேட்ட ஓசை இப்போது வளர்ந்து காதுகளை அடைத்தது
ஆடுகளின் மே….மே…..கனைப்புக்களின் இடையில் ஒரு புதிய குரல் அமண மலையின் மீது பட்டு. ஜான் அச்சத்தத்தை செவி கூர்ந்து கேட்டான் எதிரொலித்தது ஒரு பென்ணின் அழுகுரல்…மழை சட சடக்கத்துவங்க்கியது மேழே கரு மேகத்தை பார்த்துக்கொண்டிருந்த அவனின் நெற்றிப்பொட்டில் பட்டு தெரித்து மூக்கின் கூம்பின் முனையில் வந்து நின்ற அப்பெரு மழையின் முதல் துளியை நாகத்தைப்போல் அவனின் நாக்கு விளுகென்று நீட்டி ஏந்திக்கொண்டது. நீரின் உப்புச்சுவை வியர்வையா! அல்ல கண்ணீர்!! உப்பின் கரிப்பு! …….முன்பு கேட்ட ஓசை இப்போது வளர்ந்து காதுகளை அடைத்தது
மெல்லிய அரற்றலுடன் தொடங்கிய அழுகை.விம்மல்,கேவலாகி
பேரோலமிடத்தொடங்ககியது! அவனுக்கு பின்னால் நின்று அவள் பேரோலமிடதொடங்கினாள்.அவனது
காதுகள் விடைத்து.கண்கள் எரியத்துவங்கியிருந்தது, புதைகுழிக்குள் சிக்கியது போல் கால்கள்
பின்னுலுக்கத்துவங்கியது. ஒருகணம் மருண்ட குதிரையைப்போல் எல்லாவற்றையும் உதறித்தள்ளி
விட்டு தலை தெறிக்க கீழெ ஓடத்துவங்கினான். கோரைபுற்கள் குரு வாட்களைப்போல் அவன் காலை
கிழித்து ரத்தம் பனிக்கத் துவங்கியது. மழை கொட்டத்துங்கியது. புதிய பாதையின் வழியாக
கீழ் இரங்கி ஓடி திரும்பிப்பார்க்காமல் காரை கிளப்பினான்.இடியும் மின்னலும் அவளை உக்கிறம்
கொள்ளவைத்தன வண்டியின் ஜன்னல் வழி பார்த்தான்.மலையில் மழையில் ஒச்சாயி சன்னதம்
கொண்ட காளி போல உக்கிரம் கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள்
கருத்துகள்
கருத்துரையிடுக