காப்காவின் நாய்குட்டி நாவல் வாசிப்பனுபவம்

தஞ்சை இலக்கிய கூடல் சார்பாக நடந்த கூட்டத்தில் எழுத்தாளர் நாகரத்னம் கிருஸ்ணாவின் பேசுவதற்கு எடுத்துக் கொண்டார்கள் எதார்த்த வாத நாவலின் சாயலில் அமைந்துள்ள பின் நவீனத்துவ நாவல் என்று இதை கூறலாம். பின் நவினத்துவ நாவல்களின் பண்புக்கூறான carnival தன்மை இந்நாவலில் இருக்கிறது. நிலபிரபுத்துவ சமூகம் மறைந்து தொழில் மைய சமூகம் உருவாகும் காலகட்டத்தில்தான் ஒரு இனக்குழுவாக இருந்த மனிதன் தன்னை தனிமனிதனாக உணருகிறான். ஆகவே இலக்கியத்திலும் அதுவரை இருந்த ஒட்டு மொத்த சமுகத்தை எழுதும் எழுத்து முறை மாறி தனி மனிதனின் புற அக உலக நெருக்கடிகளை, கொந்தளிப்புகளை பேசக்கூடிய படைப்புகள் உருவாகின. தாஸ்தாய்வொஸ்கியின் நிலவரைக்குறிப்புகள் இந்த வகையில் முன்னோடியான படைப்பு. என்றாலும் காப்கா இந்த வகை இலக்கியத்தின் ஒரு உச்சம் என்பது விமர்சகர்களின் கருத்து. தமிழில் இவ்வகை எழுத்தின் முன்னோடிகளாக நம்முன் இருப்பவர்கள் அசோகமித்ரன். சுந்தராமசாமி. ஜி.நாகராஜன் போன்றோர். சுந்தரராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள் தமிழில் எழுதப்பட்ட முதல் NON LINEAR நாவல் எனச்சொல்லலாம். ...