கலாம் வீடு
ராமேஸ்வரம்
ரயில் நிலையத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிவாசல் தெருவில்
அமர்ந்திருக்கிறது.அக்னிப்பரவையை
விண்ணில் சிறகடித்து பறக்க விட்ட கலாம்
என்னும் மாமனிதனின் இல்லம்.மொத்தம் மூன்று தளங்களை கொண்ட கட்டிடம் முதல் தளத்தில்
கலாமின் அண்ணன் ஜெயினுல்லாபுதின் தன் குடும்பத்தோடு வசிகிறார் இரண்டாம் தளத்தில்
கலாம் பயன் படுத்திய பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.அவர் பெற்ற
விருதுகள்,புகைப்படங்கள், பயன்படுத்திய பொருட்கள்,போர் விமானத்தில் பயன்படுத்திய
பிரத்யேக ஆடை.மற்றும் அவர் தன் உயிரினும் மேலாக நேசித்த அவருடைய புத்தகங்கள்.முதலில்
அவருடய புத்தகங்களை பார்த்த போது அவை விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்கள் தான் என
நினத்தேன் அங்கிருந்தவர்களிடம் கேட்டபின்புதான் அவையேல்லாம் அவர் படித்த
புத்தகங்கள் என்பது தெரியவந்தது அறிவியல்,சமயம்,இலக்கியம்,வரலாறு,தத்துவம்,பொருளாதாரம்
என அனைத்து தரப்பு புத்தகங்களும் நமக்கு அங்கே காணக்கிடைக்கும்,(கலாம் எழுதிய
புத்தகங்கள் மட்டும் விலைக்கு கிடைக்கின்றன).அந்த புத்தகங்களை பார்த்த போதுதான்
தோண்றியது கலாம் தன் வாழ்நாள் முழுவதும் வாசித்துகொண்டெ தன்னை
புதுபித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.அவர்
எங்கு சென்றாலும் பையில் இரண்டு புத்தகங்கள் இருக்குமாம்!. கலாம் கூறிய
பொன்மொழிகள் நிறைய இருந்தாலும் அவர் சொல்லாமல் போன ஒரு மொழி..எந்த ஓரு
நிபந்தனையும் இல்லாமல் இந்த உலகை நாம் நேசித்தால் இந்த உலகும் எந்த நிபந்தனையும்
இல்லாமல் நம்மை நேசிக்கும் கலாம் இரந்த
பொழுது ஐந்து வயது சிறுமி தன் கையில் மெழுகுவர்த்திச் சுடர் கண்களில் வழியும் நீர்பெருக்கோடு அந்த
மாமனிதனுக்கு அஞ்சலி செலுத்தினாள்.அவள் கலாமிடம் என்ன எதிர்பாத்திருப்பாள் அவரின்
ஆசிகளைத்தவிர..
என்
வாழ்க்கையே என் செய்தி..என்றார் காந்தி..தன் வாழ்நாள் முழுவதும் அறத்தையும்
அகிம்சையும் தன் ஊன்றுகோலாய் கொண்டு நடந்தவர்.அவரை மிகவும் நேசித்த கலாம் தன்
வாழ்க்கை மூலம் இந்த உலகிற்கு சொன்ன செய்தியும்
அதுவாகதான்
இருக்கும் கலாமின் வாழ்க்கையே அவரின்
செய்தி
கலாம் ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் உயர்
நிலைப்பள்ளிக்கு படிக்கச்செல்லுகையில்.கலாமிடம் அவர் தந்தை கூறுகிறார் ”கலாம் உன் உடலுக்கு இந்த தீவு
இடமளித்திருக்கலாம் உன் ஆன்மாவிற்கு அல்ல எதிர்காலம் என்ற வீடு தான் உன் ஆன்மாவின்
வசிப்பிடம் கடவுள் உனக்கு அருள்
புரிவாராக” ஆம் இன்று கலாமின் பூதஉடல் அவர் வளர்ந்த ராமேஸ்வரம் மண்ணில்
புதைக்கப்பட்டிருந்தாலும் அவரின் ஆன்மா ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் வாழ்கிறது.
இந்தியாவிலும் உலகிலும் என்ணற்ற விஞ்ஞானிகள் சாதனை
புரிந்தாலும் கலாம் அளவு யாரும் புகழ் அடயவில்லை.காரணம் கலாமிடம் தன் கடமையை
தாண்டி இருந்த மனிதநேயம்.எதிரிகளை தாக்கி அழிக்க
செய்யும் அக்னி,பிரித்வி, போன்ற ஏவுகனைகளை தயாரித்த அவரால் ஒரு புல்லின்
நுனியில் இருக்கும் பனித்துளியை நேசித்து கவிதை எழுத முடியும். கேட்போரை சிலிர்க்க
வைக்கும் அளவிற்கு வீணை மீட்ட முடியும். இந்த எல்லாம் இறகுகளும் சேர்ந்ததுதான்
கலாம் என்னும் பறவை.கலாமின் தந்தை கலாம் ஒரு கலெக்டர்(மாவட்ட ஆட்சியர்) ஆகவேண்டும்
என ஆசைப்பட்டார்.கலாம் தான் ஒரு பைலட்(விமான ஓட்டி) அகவேண்டும் என ஆசைப்பட்டார்
ஆனால் காலம் அவருக்கு வேறு எழுதித்திருந்தது.ராமேஸ்வரத்தில் வீடு வீடாய் பேப்பர்
போட்ட அந்த சிறுவன் ஒரு போதும் நினத்து பார்த்திருக்கமாட்டான் தன் சாதனைகலும் ஒரு
நாள் ஒரு நாள் இந்த பேப்பரில் வரும் என்று..
கருத்துகள்
கருத்துரையிடுக