கொற்றவையும் மங்கலதேவியும்
இன்று கொற்றவை முதல்
வாசிப்பை முடித்திருக்கிறேன். மூன்று நாட்களாக பித்து பிடித்தது போல் இருந்தது.
கொற்றவை எனக்குள் சன்னதம் கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள்…முதல் நூறு பக்கங்களை
வாசிக்க மட்டும் பத்து நாட்களாகியிருக்கின்றன. மரபிலக்கியங்கள் சம்பந்தமாக
நான்வாசித்த நான் முதல் நாவல் இரண்டாவது
நூல்
கொற்றவை. முதல் இரண்டு
அத்யாயங்களை நண்பன் ஒருவனிடம் வாசிக்க கொடுத்தேன்.முதல் நான்கு வரிகளை படித்து
விட்டு தலை சுற்றுகிறது என்றான்.வாசித்து முடித்ததும் கொஞ்சம் தலைகணம் கூட வந்திருக்கிறது. தமிழில்
இலக்கிய வாசகனுக்கு வாசிக்க சவால் அளிக்கும் படைப்புகளில் முதன்மையானது
கொற்றவைதான்.இவ்வாசிப்பு எனக்கு வெண்முரசை வாசிக்க முடியும் என்ற நம்பிக்கையை
அளிக்கிறது.நாவலின் முன்பு ஐம்பது பக்கங்களும் பின் இருபது பக்கங்களும் இந்நூல்
கடல்கோளும் முந்தைய அதற்கு பிந்தைய
கடற்கரையும். போல் இருக்கிறது. சமீபத்தில்
கண்ணகி கோயிலுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்பு இரண்டாவது முறையாக சென்று வந்தேன்.எழு
மலைகளின் சிகரத்தில் உச்சியில் பெரியாற்றின்
கரையில் தான் எரித்த மதுரையின் வெம்மை கண்டு மனம் குளிர்ந்து அமர்ந்திருக்கிறாள் கொற்றவை. தற்போது யாரும் போய் விட முடியாத அந்த
கடும் வனத்திற்குள் சேரனின் எல்லையில் அமர்ந்து பாண்டிநாட்டை பார்த்தவாறு
அமர்ந்திருக்கிறாள் அம்மங்கலதேவி. காட்டு விலங்குகளின் பாதத்தடங்க்களும்.யானைச்சானங்களும்
உடலுக்குள் அச்சத்தை கிடத்துகின்றன.
ஜீப்பிலோ நடந்து சென்றாலோ .பயணம் நம்மை கிலிபிடிக்க வைக்கிறது.கொற்றவை நாவல்
அப்பயணத்தின் முழு பரவசத்தை கொடுத்திருக்கிறது.புழக்கப்படாத குளத்தில் தேங்கிய பாசி போல் அடர் பச்சை மரங்கள் ஒழுங்கின்றி பிணைந்து கிடக்கின்ற. அவ்வடர்
வனத்தினுள்கருங்கல்லாய் உறைந்திருக்கிறாள் கண்ணகி.இளங்கோவடிகள் கண்ணகி ஆகிய இரு
பெயர்களும் ஒருவர் தான் என்ற செய்தி புதிய திறப்பை அளித்துள்ளது.முழு
சிலப்பதிகாரத்தியும் விரைவில் வாசிக்க வேண்டும். ஜெயமோகனின் ஒவ்வொரு
புத்தகத்தையும் வாசிக்கும் போது அவர் எழுத்தின் மீதான ஈர்ப்பு அதிரித்துக்கொண்டெ செல்கிறது.
18.05 18
கருத்துகள்
கருத்துரையிடுக