. ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட
தண்டா காட்டுப்பகுதியில் இருந்தேன். மூன்று நாட்கள் முழுவதுமாக காட்டில் நம்
ஆதிவாழிடத்தில் இருந்தேன். எதிர்பாரமல் நண்பர்கள் மூலம் அமைந்த பயணம். தூய வெள்ளி உருகி ஒடியது போன்று ஓடிய சுணை,கால்களை முத்தமிடும் பாசிமீன்கள் .தூய
காற்று பச்சைப்போர்வைக்குள் ஊடுருவும் சூரியன் என பரவசப்படுத்துபவை ஏராளம்
இருந்தன..
காட்டெருது,கடமான்.
தோகைவிரித்த மயில் வெள்ளைக்கயிறு திரித்தது போன்ற பாம்பு சிறுத்தை பாதம் என
கொஞ்சம் விலங்குகளை காணமுடிந்தது .இக்காட்டில் புதர் செடிகள் அதிகம் இருந்தது
.பெரு மரங்கள் குறைவு .நீர்மத்தி,புருசு காட்டுவேம்பு, ஆகியவை அதிகம் காணப்பட்ட
மரங்கள்.எங்களுக்கான வேலை தினமும் குறிப்பிட்ட பரப்பு சென்று அப்பகுதியில் உள்ள
தாவரங்கள் விலங்குகளை கணகெடுக்க வேண்டும். வழிகாட்டியாய் வன ஊழியர்கள் வந்தனர்.
காட்டுக்குள்
சோளகர் இன பழங்குடிகளைப் பார்க்க முடிந்தது .ஆற்றுமண்ணின் முகம் .ஒல்லியான
குட்டையான தேகம். தாய்மொழி கன்னடம் போன்ற ஒரு பாஸை .அவர்கள் பேசும் தமிழ்
சுவாரசியமாக இருக்கிறது. பேசும் போது கோவிந்தா என்ற பதம் அடிக்கடி
பயன்படுத்துகிறார்கள் இப்பகுதியில் சோளகணை, பர்கூர் போன்ற பிரதேசங்களில் இவர்கள்
வசிக்கிறார்கள் அரசால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சிறிய அளவில் விவசாயம் செய்கின்றனர் காட்டுக்குள் மாடுமேய்கின்றனர்
அம்மாடுகள் பர்கூர் இன மாடுகள் எனப்படுகிறது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து கர்னாடகாவின் எல்லைப்பகுதியான மாதேஸ்வரன் மலை
என்ற ஊரை பார்க்க முடிந்தது.
இவ்வனப்பகுதி சத்யமங்கலம் வனப்பகுதி அருகில் தான் இருந்தது
இக்காட்டுப்பகுதி அதனுடய தொடர்ச்சி என சொல்லப்படுகிறது. வீரப்பனின் குல தெய்வம்
ஓசாடப்பன் சாமி என்று ஒரு மரத்தடியில் சிறு கற்கலால் கூட்டப்பட்டிருந்த சிலையை
காட்டினர் .அதில் வீரப்பன் கட்டிவைத்த மணி ஒன்று இருக்கிறது என கூட வந்த ஜீப்
டிரைவர் ஒரு மணியை காட்டினார். அம்மணியில்
ஒரு ரேஞ்சர் திருட்டு வீரப்பன் என எழுதி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. ரேஞ்சரும்
ஜீப் டிரைவரும் பயபக்தியோடு அதனை தொழுது கொண்டனர்.
இரவில் புதிதாக கட்டப்பட்ட கண்காணிப்பு கோபுரத்தில் தங்கினோம்
வெளிச்சம்
கிடையாது. சுற்றிலும் இருள் போர்த்திய மலைகள். சீவீடுகளின் ரீங்காரம் என காட்டின்
இரவு வேறு விதமாக இருக்கிரது .விலங்குகள் இரவில் தான் அதிகம் நடமாடும் என்றனர்.
காடு இரவில் தான் விழித்துக் கொள்கிறதோ!
உச்சி பொழுதில்
காட்டுக்குள்ளும் வெயில் சூடு பிடிக்கிறது. பின்னிரவும் காலையும் லேசான பனிபொழிவு.
காட்டில் நடக்கும் போது அவ்வப்போது கேட்கும் சரசரப்பு சத்தம். கரும்பாறை
ஒன்றை கண நேரத்தில் பார்க்கும் போது யானையோ
என நினைத்து பயமுறுத்துகிறது. வியர்வை வழிய காட்டில் நடந்து பின் உணவை அருந்தும் போது மட்டுமே உணவின் உண்மையான
ருசியை உணர்ந்து கொள்ள முடிகிறது.
பிற்பகல் பெரும் நேரம் வேறு வேலையின்றி காட்டில் ஓடும்
சுனையில் குளித்துக் கொண்டிருந்தோம் உண்மையில் அது ஒரு பேரானந்தம். தெளிந்த முத்து
போல் ஓடும் நீரை விலங்குகள் போல அப்படியே
வாய் வைத்து உறிஞ்சி குடித்தேன்.அதன் சுவை இன்னும் நாவில் இருக்கிறது.
இக்காடுகளில் மழை பொழிவு குறைவு தென்மேற்கு பருவமழை இதற்கு கிடைப்பதில்லை
வடகிழக்கு பருவமழைதான் இங்கு பெய்கிறது .காட்டறு அடித்துக் கொண்டு வந்த கற்கள் ஒரு
நவீன ஒவியம் போல பல்வேறு வண்ணங்களில் ஆறு
முழுக்க சிதறிக்கிடக்கின்றன….
காட்டுக்குள்
செல்லும்போது மனிதர்களை காட்டிக்கொடுக்கும் பறவை (TO IT TO IT TO) தொடர்ந்து
மனிதரின் வருகையை அறிவித்துக் கொண்டே இருந்தது.
முதல் காட்டு அனுபவமாக இது தெரியவில்லை ஏற்கனவே காட்டில் வாழ்ந்தவனாதாலால்
சிரமம் ஒன்றும் தெரியவில்லை.
.கூடே
இருந்தவர்களின் கூச்சலைத் தவிர
எல்லோரும்
கல்லூரி மாணவர்கள் சான்றிதழுக்காக வந்தவர்கள் தான் அதிகம் .காட்டின் முழுமையை அவர்கள் அறிய முயற்சிப்பதில்லை புகைப்படம் எடுப்பதில் தங்கள் முழு திறனையும்
காட்டுகிறார்கள் . வன அதிகாரிகளுக்கு வனம் ஒரு கட்டுக்கடங்காத விலங்கு அதனை
கட்டுப்படுத்துவதே தம் வேலை என நினைப்பில் இருக்கிறார்கள்
சோளகர்கள் பொதுவாக அமைதியானவர்கள் .இவர்களும்
லிங்காயத்துகலும் கிட்டத்தட்ட ஒரே வகையினர் ஆனால் லிங்காயத்துகள் மிகவும்
ஆச்சாரமானவர்கள்
இப்பயணம் சென்று வந்ததும் சோளகர்களைப் பற்றி எழுதிய
சோளகர் தொட்டி என்ற நாவலை வாசித்தேன்..சோளகர்களின் வாழ்வு வன அதிகாரிகளாலும்
,வீரப்பனாலும் வெளியே இருந்து வந்தவர்களாலும் . எப்படி அவர்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது
என்பது நாவலின் மையம் . ஆங்கிலேய ஆட்சிக்காலத்தை விட இந்தியா சுதந்திரம் பெற்ற
பின்பு தான் பழங்குடியினருக்கு அதிகாமன பிரச்சனைகள் தொடங்கியுள்ளன .வெரியர்
எல்வீன் போன்ற இன வரைவியலார்கள் பழங்குடியினர் மரபு ,பண்பாடு ,கலாச்சாரத்தை அவர்களை நாகரீகப்படுத்துகிறோம் என்ற பேரில்
அழிப்பதை கடுமையாக எதிர்த்துள்ளார்கள்.
ஒரு சராசரி
இந்திய மனம் வனத்தை ஒரு சொத்தாகத்தான் பார்க்கிறது .வனத்தின் புனிதம் இன்று
கேள்விக்குள்ளாக்காப்பட்டு
அழிக்கப்படுகிறது. பழங்குடிகள் மட்டுமே தங்கள் மரபான மன நிலையோடு காட்டை
நேசிப்பவர்கள். .அவர்கள் காட்டிற்குள் வசித்தாலும் அவர்களின் எளிய வாழ்விற்கு அவர்களுக்கான வனத்தேவை மிகவும் குறைவுதான்
போதுமான கல்வியறிவு இல்லாத அவர்கள் . இடைத்தரகர்கள்.வன அதிகாரிகளால்
ஏமாற்றப்படுகிறார்கள் சுரண்டப்படுகிறார்கள். இதனை விரிவாக சோளகர் தொட்டி நாவல் சித்தரிக்கிறது
.
இப்பயணம் ஒரு
நல்ல அனுபவம் .பின் ஈரோட்டில் நண்பர் பாரியின் வீட்டில் தங்கியிருந்தேன்.அருமையான
உணவு கொடுத்து கவனித்தார்கள் .பின் மறு நாள் மாலையில் ஈரோட்டுக்கு அருகில் இருந்த
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் விஸ்ணுபுரம் இலக்கிய நண்பர்களான . வழக்கறிஞர்கள்
.கிருஸ்ணன் ஈஸ்வரமூர்த்தி அகியோரை சந்திக்க முடிந்தது. ஏரியில் இருந்து அருமையான
ஒரு சூரிய அஸ்தமணம் காணமுடிந்தது .பின் ஈரோட்டிலிருந்து ஊட்டி போகலாம் என
நினைத்தேன் பின் நாகைக்கு கிளம்பினேன். நண்பர் பாரி பேருந்து நிலையம் வரை தனது
பைக்கில் கொண்டு வந்து விட்டார்…பேருந்தில் ஏறீ கண்களை மூடினேன் உடலையும் மனதையும் மீண்டும்
காடு நிறைத்துக் கொண்டு விட்டது…
கருத்துகள்
கருத்துரையிடுக