07 02/2020
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அன்புள்ள ஜெ.
நூலகத்தில் புத்தரேக்குகளை துழாவும்போது உங்களது ஆழ்நதியைத் தேடி...மற்றும் கண்ணிரை பின் தொடர்தல் ஆகிய இரு நூல்களும் வாசிக்க கிடைத்தன. கண்ணீரை பின் தொடர்தல் இன்று புதிய வாசகர்கள் நிறைபேர் வாசித்திருக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். சமீபத்தில் வாசித்த அக்னி நதி, மீசான் கற்கள், முன்பு வாசித்த நீலகண்ட பறவையைத் தேடி, ஆரோக்ய நிகேதனம், பாத்துமாவின் ஆடு என நான் படித்த ஆறு நாவல்களின் பெயர் அப்புத்தகத்தில் இருந்தது மகிழ்சியளித்தது. மேலும் படிக்க. நினைத்திருக்கும் மண்ணும் மனி தரும் நாவல் பற்றிய கட்டுரையும் கூட.. இந்நாவல்களை வாசிக்கும் இளம் வாசகர்களுக்கு அதனை சரியாக தொகுத்துக் கொள்ள, நாவலின் சாரத்தை அணுக உதவும் மிக முக்கியமான கட்டுரைகள் இப்புத்தகத்தில் உள்ளது இதன் சில கட்டுரைகள் தளத்தில் இருக்கிறதென்றாலும் இந்நூல் கையில் இருப்பது இன்றைய சூழலில் மிகவும் அவசியமென நினைக்கிறேன். ஒரு இலக்கிய கூட்டத்தில் முக்கிய தமிழ் எழுத்தாளர் இருக்கையில் இப்புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டேன் அவருக்கே அது தெரிந்திருக்கவில்லை.
புத்தகம் நூலக ஆணைப்பெற்றிருக்கிறது எனவே மாவட்ட நூலகங்களில் இருக்க வாய்ப்பிருக்கிறது.
கதிரேசன்
நாகை
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக