கடிதம் சிறுகதை
கடிதம் சிறுகதை
"இன்னும் கொஞ்ச நாள்ல ஜீவா வயசு க்கு வந்துற்வா இப்பவே அடிவயிறு வலிக்குதுன்றா இவனுக்கும் கொஞ்சம் வெவரம் தெரிய ஆரம்பிச்சிருச்சு . அம்மா இருக்கும் வீட்டை எனக்கு குடுக்க அண்ணனும் சரின்ருக்கான் நான் போறேன் சிம் மாத்திட்டேன் போன் பண்ணவேணாம்."
கடும்கோடையின் இரவு... பகலில் உறிஞ்சிய வெப்பத்தை இரவில் துப்பிக்கொண்டிருந்தன வீட்டின் சுவர்கள். குடிசையின் புழுக்கத்தோடு காற்றின் வெப்பமும் அவன் உடல் மீதுபட்டு தோல்கள் எரிவது போலிருந்தது தொண்டை வறண்டு அவனுக்கு தாகம் எடுத்தது! மெல்ல எழுந்து வீட்டின் மூலையில் மணல் பரப்பி அதன் மேல் வைக்கப்பட்டிருந்த மண்பானையை திறந்தான் சில்வர் டம்ளரில் தண்ணீர் அள்ளி கையில் வைத்து அழுத்தி அதன் குளிர்ச்சியை உணர்ந்தான்..கன்னத்தில் வைத்து தேய்த்தான் பின் கை விரல்களின் சூட்டால் நீரின் தன்மை மாறக்கண்டு மெல்ல பருகத் தொடங்கினான் நீரின் குளிர்ச்சி உடலின் உள்ளே ஊறிச்செல்வதை அனுபவித்தான்.
மிச்சம் இருந்த ஓரிரு துளிகளை தரையில் கொட்டினான் சிமென்ட் தரையில் சொட்டிய நீர் துளி இரு வட்ட உருவங்களை உருவாக்கி அவனைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது. சிறிது நேரத்தில் சிமெண்ட் தரை அத்துளிகளை தன்னுள் இழுத்துக்கொண்ட மாயா ஜாலத்தை கண்டான். டம்ளரை ஆட்டி இன்னும் ஒரு துளியை உதறினான் கனநேரத்தில் தரை அதனையும் உறிஞ்சிக்கொண்டது. மீண்டும் கொஞ்சம் தண்ணீரை மோண்டு தரையில் ஊற்றினான்.
ஊர்ந்து உருண்டோடிய தண்ணீரை பெரும் மலைப்பாம்பு இரையை விழுங்கியதுபோல் தரை கவ்வி உள்ளிழுத்துக்கொள்வதையே வெறித்து பர்த்து கொண்டிருந்தான் வயிறு மீண்டும் எரியத்தொடங்கியது டம்ளரில் இருந்த கடைசி இரு துளி நீரை கையில் கொட்டி வயிற்றில் தேய்த்து கொண்டான் சட்டென்று வீசிய காற்று நீருடன் கலந்து வயிற்றில் குளிர் பரப்பி சென்றது,, ஏதோ ஞாபகம் வந்தவனாய் குடிசையிலிருந்து வெளிவந்து அவள் வீட்டை பார்த்தான் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.வெளியில் இருந்த நிச்சலனத்தை சற்று முன்பு அடித்த காற்று மெல்ல அசைத்திருந்தது
எதிரில் இருந்த தென்னை மரத்தின் கீற்றின் சலசலப்பு அவன் நினைவை திருப்பியது. தென்னைஓலைகளின் கூர் முனைகள் வீட்டின் சுவற்றை உரசிக்கொண்டிருந்தன. நீண்ட விரல்களைக் கொண்ட அவளின் விரல்கள் அவனின் மார்பைவருடும் நினைவு. கொடியில் கிடந்த அவளின். பாலியஸ்டர் சேலை மெல்ல அவன் கைகளை தழுவிவிட்டுச் சென்றது.
அவள் வீட்டைப் பார்த்தான் கடைசி அறையின் விளக்கு எரிந்துகொண்டிருந்தது ஒரு வேளை இன்னும் தைத்து கொண்டிருக்கிறாளோ சற்று காதை கூர்மையாக்கி கேட்டான் அவளின் தையல் மெசினில் உட்கார்ந்து தைக்கும் சத்தம் கேட்டது.
ஒரு சில நாட்கள் அவள் வராமல் இருப்பதும் உண்டு ! .சத்யணுக்கோ ஜீவாவிற்கோ உடம்பு முடியா விட்டாலோ ,வெளியூர் செல்லும் வேளை இருந்தாலோ ஊரில் இருந்து அவள் அம்மா வந்தாலோ அவள் வரமாட்டாள் அந்த நாட்களில் அவளோடு பேசிபுணர்ந்த நினைவுகளோடும் ஒரு சிறு ஏக்கத்தோடும் சுய இன்பம் செய்து விட்டு உரங்கிப் போவான் இன்றும் வராமல்இருந்துவிடுவாளோ..
அவனுக்கு மூத்திரம் வருவது போல் தோன்றியது.பொதுவாக வீட்டின் மாடியில் மழை நீர் போக இருக்கும் துளை தான் அவனது இரவு நேர கழிப்பறை சிறுநீர் கழித்தபின் மண்பானையிலிருந்து ஒரு கப் நீரை அளந்து பின்னால் ஊற்றி விடுவான். இருந்தும் இன்று கீழே இறங்க எத்தனித்தான் கீழே படி வழியே இறங்கும் போது அவள் வருகை சத்தம் கேட்டது. வழக்கமாக கேட்கும் புடவையின்ன் சரசரப்பு, கொலுசு, மூக்குறிஞ்சல்கள்..... இறங்குவமா வேண்டாமா என ஒரு கணம் யோசித்தான் பின் கீழே இறங்கினான்…..
அவள் பெருமூச்சுடன் மேழே ஏறிவந்துகொண்டிருந்தாள்
அவன் இறங்கி வருவதை பார்த்து லேசாக திகைத்து நின்றாள்
எங்க போறிங்க ?
வாரேன்..... என பதில் சொல்லி விட்டு அவளை லேசாக உரசிக்கொண்டு,கீழே இறங்கினான்
தினமும் கூடும் உடல்தான். அதே சதை, தைக்கும் துணி நூலும் தேங்காய் எண்ணை ,சீயக்காயும் கலந்த மணம் இருந்தும் ஏன் இப்படி அலைக்கழிக்கிறது? அவள் மேலே வந்து கட்டிலில் அமர்ந்தாள் சிதறிக்கிடந்த புத்தகங்களை எடுத்து அடுக்கத்துவங்கினாள் அவன் படிப்பு மேஜையின் மீது இருந்த புத்தகம் அந்த புத்தகத்தில் எழுதியிருந்த தாளை எடுத்து அதில் பார்வையை செலுத்தவும் அவன் வீட்டிற்குள் நுழைவதற்கும் சரியாய் இருந்தது அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் அவன் எழுதிவைத்திருந்த தாளை வெறித்தாள்..
“அடுத்த வாரம் ஒரு பத்திரிக்கையிலிருந்து கதை ஒன்னு கேட்டிருந்தார்கள்” என்றான்
நல்லாயிறுக்கு” என்று சொல்லிவிட்டு அதை டேபிளின் மேல் வைத்தாள்
ஏன் லேட்டு “
அவசரமா தச்சு குடுக்கவேண்டி இருந்தது ஜீவா வேற பரிட்சைக்கு படிச்சுட்டுருந்தா! பதில் சொல்லி விட்டு அவள் கட்டிலில் ஏறி திருப்பி படுத்து கொண்டாள் .இவன் அவள் அருகில் சென்று படுத்துகொண்டு அவள் தலைமுடியில் ஒட்டியிருந்த நூல் பிசிருகளை ஒவ்வொன்றாக எடுத்தான். பின் வெருமனே அவள் தலையை கோதினான் அவள் சில கனம் அவன் முகத்தை பார்த்து விட்டு அவன் மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள்
வேர்வை படிந்த அவள் மார்புசட்டை புதுத்துணியின் அந்துருண்டை மணத்துடன் சேர்ந்து வீசியது. அவள் அவனை இறுக்கிக்கொண்டாள் இருவரின் ஒருவர் வசம் இன்னொருவர் வசம் இருந்தனர் என்றும் இல்லாமல் இன்று அவளுக்கிருந்த வேகம் அவனை திகைக்கச் செய்தது. கலவியின் முடிவிலும் இருவருக்கும் உரக்கம் வரவில்லை. இருவரும் பேசவும் விரும்பவில்லை..பேசாமல் ஒன்றை ஒன்று அடைந்து விட்டதன் நிறைவில் படுத்துக் கிடந்தார்கள்…
அவன் அவளை சந்தித்த நாட்களை எண்ணிக்கொண்டான் இந்த ஊருக்கு மாற்றாலாகி வந்தவுடன் அவனுக்கு வேலையை விட வீடு கிடைப்பதுதான் பெரிய கஸ்டமாக இருந்த்தது.வந்தவுடன் இரண்டு மாதங்கள் மேன்சன் வாசி பின் அலுவலகத்தின் உதவியாளர் ஒருவர் மூலம் இந்த வீட்டை தேடி கன்டுபிடித்து வந்து சேர்ந்தான்.அறைக்கு உணவு கொண்டுவருபவளாகத்தான் அவள் வந்தாள்.பின் சில பார்வகள். பேச்சுகள். பேச்சு வளர்ந்தது அவளுக்கும் ஒரு துணை தேவையாக இருந்தது..அவளை அவன் கைபிடித்து இழுக்க அவளும் மறுக்கவில்லை…….அவனும் புத்தகங்களுமாய் இருந்த வாழ்வில் அவளும் சேர்ந்து கொண்டாள்! அவர்கள் பழக்கம் அத்தெருவில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்துதான் இருந்தது..அவளுடைய அம்மா வந்தாள் அவனை தன் பெண்ணை விட்டு விடுமாறு அவன் காலில் விழுந்தாள்! அவளை காறித்துப்பி தூற்றினாள்! பின் தன்னுடன் வந்த்துவிடுமாறும் அவளுக்கு சொந்தத்தில் ஒருவனைப்பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் சொன்னாள் ஆனால் அவள் போகவில்லை .
விடிகாலையில் எழுந்து முதல்வேளையாக அவளை தேடினான் அவள் இல்லை அதிகாலை பெரும்பாலும் அவள் சொல்லாமள் போய்விடுவாள் அத்தி பூத்தார்போல் என்றாவது அவனிடம் ஏதவது சொல்லி விட்டுப்போவாள் இன்றும் அவனிடம் சொல்லிவிட்டு போகவில்லை அவள் சென்ற பின்பு அறை முழுவதும் ஒரு நிசப்தம் கூடி இருந்தது அவன் குளித்து விட்டு வந்து கண்ணாடி முன் நின்று தலை சீவத்துடங்கினான் மின்விசிறியை இயக்கியபோது தான் கண்ணாடி இடுக்கில் இருந்த வெள்ளைக்காகிதம் படபடத்தது ஒரு கணம் தயங்கினான் பின்பு எடுத்து அபூர்வமாகமட்டுமே அவன் பார்த் திருக்கும் அவளின் கையெழுத்தைப் படித்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக