சமஸுடன் ஓர் உரையாடல்
நண்பர் தாமரைக்கண்ணனிடம் தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது . ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியிலுள்ள தமரைக்கரையில் இந்து நடுப்பக்க ஆசிரியர் சமஸுடன் ஒரு கலந்துரையாடல் நடக்க இருப்பதாகச் சொன்னார். தமிழ் இந்து பத்திரிகை ஆரம்பித்ததிலிருந்தே அதன் நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்து பத்திரிகை மிக அவசியமான அறிவுச்சுரங்கம். . சமஸின் எழுத்து அலைந்துதிரிபவனின் எழுத்து .எனவே அது மக்களின் மனதில் தோன்றுபவற்றை நேரடியாகப் பிரதிபலிப்பவை . அதனாலேயே அவர் எழுதும் கட்டுரைகள். தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்குகின்றன. சமஸுடைய யாருடைய எலிகள் நாம் மிக முக்கியமான கட்டுரைத்தொகுப்பு கடலோடிகளைப்பறி எழுதிய கடல் ,. இந்தியாவின் வண்ணங்கள், அரசியல் பழகு, ஆகியவை , சமகால அரசியல் விழிப்புணர்வு பெற விரும்புவார்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்பேன் . சமஸிடம...