சமஸுடன் ஓர் உரையாடல்
நண்பர் தாமரைக்கண்ணனிடம் தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது . ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியிலுள்ள தமரைக்கரையில் இந்து நடுப்பக்க ஆசிரியர் சமஸுடன் ஒரு கலந்துரையாடல் நடக்க இருப்பதாகச் சொன்னார். தமிழ் இந்து பத்திரிகை ஆரம்பித்ததிலிருந்தே அதன் நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்து பத்திரிகை மிக அவசியமான அறிவுச்சுரங்கம்.
. சமஸின் எழுத்து அலைந்துதிரிபவனின் எழுத்து .எனவே அது மக்களின் மனதில் தோன்றுபவற்றை நேரடியாகப் பிரதிபலிப்பவை . அதனாலேயே அவர் எழுதும் கட்டுரைகள். தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் பெரும் விவாதத்தை உருவாக்குகின்றன. சமஸுடைய யாருடைய எலிகள் நாம் மிக முக்கியமான கட்டுரைத்தொகுப்பு கடலோடிகளைப்பறி எழுதிய கடல் ,. இந்தியாவின் வண்ணங்கள், அரசியல் பழகு, ஆகியவை , சமகால அரசியல் விழிப்புணர்வு பெற விரும்புவார்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்பேன் . சமஸிடம் நான்கைந்து முறை நேரில் சந்தித்து உரையாடினாலும் . அதிகமாக விவாதித்ததில்லை . ஆகவே இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தேன்
நாகையிலிருந்து தஞ்சாவூர் வரை திருச்சி பேஸஞ்சர். அங்கிருந்து சதாப்தி ரயிலில் செல்ல பாரி பயணச்சீட்டு பதிவு செய்திருந்தார். நான் சென்ற ரயில் தஞ்சாவூர் செல்ல தாமதித்ததால் சதாப்தி ரயில் சென்று விட்டது. பேருந்து கட்டணத்தை மிச்சம் செய்ய நினைத்ததின் விளைவு!பின் அதே ரயிலில் டிக்கட் எடுக்காமல் திருச்சி வரை சென்றேன். அங்கிருந்து பேருந்தில் கரூர். அங்கிருந்து ஈரோடு. அங்கிருந்து பெருந்துறை. எட்டு மணிக்குச் செல்ல வேண்டியவன் பனிரண்டு மணிக்குச் சென்றேன். ஈரோடு பக்கம் செல்லும்போது தங்க நேர்ந்தால் அடைக்கலம் அளிப்பவர் நண்பர் (வள்ளல்) பாரி. பேருந்து நிலையத்தில் இருந்து பைக்கில் கூட்டிச் செல்ல வந்திருந்தார். வரமாட்டேன்னு நினைச்சேன். ஏதாவது பஸ்டாண்டுல படுத்துகிடந்துருப்ப போலிஸ் பிடிச்சுட்டு போயிறுக்கும்னு நினைச்சேன். . என்றார். ( இதற்கு முன் ஒரு முறை அவ்வாறாகியிருக்கிறது)
காலையில் நானும் பாரியும் அந்தியூர் வரை பைக்கில் சென்றோம் அங்கிருந்து தாமரைக்கண்ணனை அழைத்து வர வேண்டியிருந்ததால் நான் தாமரைக்கரைக்கு புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். பேருந்தில் அதே கூட்டத்திற்கு வரும் தோழர்களுடன் காரசாரமான விவாதம் . அடிதடியில் போய் முடியுமென்றால்லாம் நினைத்தேன். (கொஞ்சம் ஓவர் கற்பனை என்பது போகப்போக புரிந்து விட்டது.) . கூட்டம் நடைபெறும் இடம் முன்பு பள்ளியாக செயல்பட்டு தற்போது கைவிடப்பட்ட கட்டிடமாக இருந்தது. மலையில் செல்லும்போது குளிர் ஒவ்வொருகொண்டை ஊசி வளைவிலும் தேங்கி. நிற்பது போல அதிகமாகிக் கொண்டே சென்றது. ஸ்வெட்டர் இருந்ததால் சாமளிக்க முடிந்தது. காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொது. கீழே கிருஷ்ணன் தலைமையிலான விஸ்ணுபுரம் குழுவினர் முன்னரே வந்து வன நடை போய் விட்டுத் திரும்பி வந்திருந்தனர்.
பத்துமணிக்குக் கூட்டம் ஆரம்பித்தது பெரும்பாலும் அமைப்புகளிலிருந்து வந்தவர்கள். இடது சாரிகள். தமிழ்த்தேசியம் , பழங்குடியினர்களுக்கான சங்கத்தைச் சேர்ந்தவர்கள்,அரசியல் அறிவியல் படிக்கும் மாணவிகள் என பல்வேறு தரப்பட்டவர்கள் , கிட்டத்தட்ட ஒரு முப்பத்தைந்து பேர் குழுமியிருந்தனர். மிக எளிமையான அறை அனைவரும் தரையில் அமர்ந்து விவாதித்தோம். . விலையில்லா பொருட்களைப்பற்றி பேசிய சமஸின் உரை இரண்டு மணி நேரம் நீண்டது. இங்கிலாந்தில் இலவசம் என்ற வார்த்தயைப் எப்படிப் பார்க்கிறார்கள். அரசு இலவசங்களை எப்படி வழங்குகிறது. மலைப்பகுதியில் இலவசத்தொலைக்காட்சி மூலம் நடந்த மாற்றம். என பல வகையிலும் இலவசத்தின் இன்றியமையாமையைப் பற்றி பேசினார் , அவர் சமீபத்தில் மேற்கொண்ட இங்கிலாந்து பயணத்தில் அவர் எழுதிய கட்டுரைகளைப் மேற்கோள் காட்டுவதாக இருந்தது. அவரது முழுப்பேச்சும்.
பின்பு விவாதம் சமகால தமிழக அரசியல் இந்திய அரசியல் என்பதைக் குறித்து திரும்பியது. பெரும்பான்மையான கேள்விகளுக்காக அவர் அளித்த பதில்கள் ஒருவகையான தன்னிநிலை விளக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சில கூரிய அவதானிப்புகள் சிலிர்க்க வைத்தன, குறிப்பாக, பெரிய ஹோட்டல்களும், மால்களிலும்,சுவற்றில், கார் பின்பும் கை நகம் கொண்டும். சாவி கொண்டும் கீறப்படுதற்கு பின்னுள்ள உளவியல். சாதி சார்ந்து சிந்திக்கும் மனோபாவம். என சில முக்கியமான அவதானிப்புகள் இருந்தன.
சுமார் மூன்று மணிக்குக் கூட்டம் முடிந்தது.
என்னை அடையாளங்கண்டு வைத்திருந்தார் என்பது மகிழ்ச்சியளித்தது. சமஸ் கட்டுரைகள் எனக்கு எல்லாம் பிடிப்பதில்லை சிலவை மிகுந்த எரிச்சலூட்டுகின்றன, சிலவை சோர்வடையச் செய்கின்றன , சில கூறிய அவதானிப்புகளைக் கொடுக்கும் கட்டுரை, (உதாரணமாக சமீபத்தில் ரபேல் ஒப்பந்தத்திற்கெதிராக ராகுல் பற்றி எழுதிய கட்டுரை,) சிலவற்றைப் படித்து புண்பட்டு கோபமாக கடிதம் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் சமஸ் எனக்கு முக்கியமானவர். காந்தியைப் பற்றி ஒரு கேள்வியின் போது ஜெயமோகனின் இன்றைய காந்தி நூலைப் பரிந்துரைத்தவர் அவரே. மூன்று வருடங்களுக்கு முன்பு அந்நூலைப் படிப்பது எளிதாக இருக்கவில்லை, அந்நூலைப்படிப்பதற்காக நான் படித்த சில நூலின் வழியே காந்தியையும் ஜெயமோகனையும் நோக்கிச் நெருங்கிச் சென்றேன். சமஸின் நிறைய கருத்துக்களில் முரண்படுகிறேன். முரண்பாடுகள் இல்லாமல் எப்படி சிந்தனை வளர முடியும். முரணியக்கம் Dilalectis) என்பது தானே. மார்க்கீசிய அறிவின் அடிப்படை .
இக்கருத்தரங்குக்கு வந்த மற்றொரு முக்கியமான நபர் அன்புராஜ் இவர் இளமையில் சுமார் இரண்டாண்டுகளுக்கும் மேலாக வீரப்பன் கூட்டாளிகளுடன் இணைந்து காட்டிலிருந்தவர். கடத்தலில் ஈடுபட்டு, சிறை சென்றார் அங்கு அவருக்கு சிறையில் .இடதுசாரி புத்தகங்கள் அறிமுகமாகியுள்ளது. சிறையிலேயே தன்னை ஒரு நாடக கலைஞராக தன்னை மாற்றிக்கொண்டு தண்டனையில் இருக்கும் போதே சிறைக்கு உள்ளேயும் வெளியும் நாடகங்களில் நடித்தும் அரங்கேற்றியும் உள்ளார்
Anpuraj (center white kurtha) |
. சிறை வாழ்க்கை என்பது ஒருவனின் சிந்தனையை மழுங்கடித்து அவனை ஒன்றுமற்றவனாக மாற்றிவிடும் என்றே எண்ணிய்ருந்தேன், ஆனால் சிறை பற்றி அன்புராஜ் அளித்த சித்திரம். அலாதியானது. விஸ்னுபுர இலக்கியவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருஸ்ணன் அவரை ஒரு பேட்டிக்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். சிறையில் கிட்டத்தட்ட இருபது வருடம் தான் பட்ட துன்பங்களை சிறு பகடியோடு எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்த அம்மனிதரை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பயணம் கற்றுத்தந்ததையெல்லாம் சொல்லமுடியாது. தினமும் சராசரிகளுக்கு நடுவில் அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரும் கடினம் என்று பேசித்திரியும் ஒரு பெருங்கூட்டத்தின் நடுவில் தான் இவரைப் போன்ற மனிதர்களும் வெறும் காணல் நீரைக் கண்டு பூத்துப் போன கண்களுக்கு அருவியின் சாரல் பட்ட தெரித்த பூக்களாகத்தெரிகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக