குப்பிச்சில்லு (சிறுகதை)


A MAAL HUT HOUSE IN NDIAN HILL SATAION க்கான பட முடிவு
 இன்னும் ஒரு ஓவர் தாண்டா முடிஞ்சுடும் பாதில விட்டுட்டுப் போன தோத்தாங்கோளி…… பயந்து ஓடுராங்யம்பாய்ங்கடா…. மணி முத்தை வற்புறுத்தி இருக்க வைத்தான். அடுத்து மணி போட்ட கடைசி ஓவர் முதல் பாலே சிக்சர்……. பந்து அருகில் இருந்த ஏலத்தோட்டத்திற்குள் போய் விழுந்தது மணிக்கு முகம் தொங்கிவிட்டது. இனியும் ஐந்து பந்துகளில் ஐந்து ரன்கள் போதும் ஜெயிப்பதற்கு! எல்லோரும் பந்தை தேடி ஏலத்தோட்டத்திற்குள் ஓட.. முத்து கருவெட்டி மரத்தின் கிளையில் சொருகிவைத்திருந்த நரம்பு பையை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினான். மழை வருவதுபோல்  வானம் இருட்டாயிருந்தது. மணி ஆறைக்கடந்திருக்கும்.  வீட்டில் அம்மா இருந்தால் அடி உறுதி..

ஜீப் ரோட்டில் நின்று பார்க்கும் போதே வீட்டின் சிம்னி புகைவிட்டுக்கொண்டிருந்தது. அம்மா வந்துவிட்டாள்!!!! வெந்நீ போட்டிருப்பாள். கீழெ செங்கரை தேயிலை பேக்டரியிலிருந்து ஊதிய ஆலைச் சங்கு மணி ஆறைகடந்து விட்டதை   உறுதி செய்தபோது அவனுக்கு பயம் தொற்றிக்கொண்டது.என்றும் சரியாக ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவான்  ஐந்து நிமிடம் லேட்டாக வந்தாலும்.

கணக்கெழுதுற வேல இருந்துச்சா துரைக்கு?

சீக்கிரம் வரமுடியாது?

நாளைல இருந்து நீ பல்லிகொடம் போகவேணம்.தின்னனுட்டு வீட்டுக்குள்ள கெட…..

 கடைசி சொல்லை கெட்டவுடன் முத்து பதறிவிடுவான். அவனால் பள்ளிக்குடம் போகமால் இருக்க முடியாது, மதியச்சாப்பாடு, நண்பர்கள், மைதானம், விளையாட்டு இவையே முத்தின் உலகம்  ஆகவே அம்மாவிடம் ஆறு மணியை தாண்டமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறான் .இன்றைக்கு திட்டு அல்லது அடி, அம்மா திட்டுவாளா அடிப்பாளா ஒரு வேளை இரண்டும் உறுதி என நினைத்துக்கொண்டே வீட்டுக்குச்சென்றான் 
A MAAL HUT HOUSE IN NDIAN HILL SATAION க்கான பட முடிவு

. அடுக்களையில் அம்மா ஏதோ கிண்டிக்கொண்டிருந்தாள்.  ஏலக்காய், பாலின் மனம். பையை திண்னையில் போட்டுவிட்டு அம்மாவின் அருகில் சென்று மரமுக்காலியைப் போட்டு உட்கார்ந்து அடுப்பை பார்த்தான்.அம்மா பாயாசம் கிண்டிக்கொண்டிருந்தாள்.
அவன் அருகில் வந்தமர்ந்திருப்பதை நினைத்து தலையை கோதினாள். வழக்கமாக ஏன் இவ்வளவு லேட்டு என்று கேட்பவள் இன்று ஏதும் கேட்கவில்லை..தானே சிரித்துக்கொண்டிருந்தாள். அதை பார்த்து அவனும் சிரித்தான் மெதுவாக அவளது கருத்த கன்னங்களை கடித்து முத்தம் கொடுத்தான். அவள் அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு அவன் தலையை கோதினாள்.

 அவனை மடியில் இருத்திக்கொண்டே  ஜீனீ டப்பாவை தூக்கியவள் அப்போதுதான் டப்பா  சுத்தமாக ஜீனியில்லாமல் கழுவி வைக்கப்பட்டிருந்ததை பார்த்தாள் பின் வேகமாக அவனை மடியிலிருந்து கீலே  இறக்கி

எலேய்

நீலா பாட்டிட்ட போய் ஜீனீ வாங்கிகிட்டு வா ….


நான் போமாட்டேன்..

ஏண்டா……

அவ கத்தி வச்சுருக்கா… நா அங்க போ எங்குஞ்சாமணியை அருக்க வர்ரா .

அம்மா” போடா ஒன்னும் செய்யமாட்டா நான் சொல்லியிருக்கேன்”

என்ன சொன்ன? ..

நான் சொல்லியிருக்கேண்ணு சொன்னல்ல போ இனி அவ ஓங்க் குஞ்ச அறுக்க வரமாட்டா…

அம்மா சிரித்துக்கொண்டே அவனைப் பார்த்து சொல்லிவிட்டு அடுப்பு விறகில் கங்கை நெறித்து உள்ளே தள்ளினாள்.

  லீலா பாட்டியின் கல்வீடு ராஜா அண்ணன் கல்யாணத்திற்காக சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தால்  வீடு முழுக்க சுண்ணாம்பு மணத்தது. அவன் வீட்டுக்குள் சென்றதும் சுண்ணாம்பு காரத்தால் அவன் தொண்டை கமறியது. கரண்ட் இல்லாத வீட்டிற்குள் .நெளிந்த அலுமினிய மண்ணென்னெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. பாட்டி அம்மியில் உட்கர்ந்து ஏதையோ அரைத்துக் கொண்டிருந்தாள். அவளது கருத்த முகமும் சுருட்டை முடியும்.வெத்திலை போட்டு சிவந்த நாக்கும் உதடும் அவனுக்கு ஜக்குபாய் கதையில் வரும் சூனியக்காரியை ஞபாகப்படுத்தியது. அவன் அதை நினைத்து சிரித்துக் கொண்டான்

அவன் மெல்ல தன் இரு கைகளையும் காலின் இடையே பொத்தி பிடித்துக்கொண்டே உள்ளே எட்டிபார்த்தான்.

என்னடா…

அம்மா ஜீனீ கேட்டுச்சு….

பாட்டி அம்மியில் அறைப்பதை விட்டு விட்டு எழுந்தாள்
ஏற்கனவே ஒருகிளாஸில் ஜீனி அம்மாவிடம் இருந்து நீலாப்பாட்டிக்கு அவன் வாங்கிக்கொடுத்திருக்கிறான். அம்மா இப்போது அதை திரும்ப கேட்டு அனுப்பியிருக்கிறாள். நீலா பாட்டியின் முகத்தைப் போல் சுவரில் கயிறு போட்டு கட்டப்பட்டிருந்த அம்மரபலகை புகையால் கருத்திருந்தது அதிலிருந்த அமுல் டப்பாவை எடுத்தாள். அமூலைத்தான்  எடுப்பாள் என முத்து நாக்கில் ஊறிய எச்சில் அவள் ஓரு சில்வர் கிளாஸை எடுத்து ஜீனியை அள்ளியபோது மறைந்துபோனது. ஒரு சில்வர் டம்ளர் நிறைய கொட்டி  அவனிடம் இந்தாடா என நீட்டினான். அதை வாங்கிக்கொண்டே  .வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தான் ..சாணித்தரை ஈரமாகவும்  சில இடத்தில் தரை பெயர்ந்தும்.கிடந்தது. கதவிற்கு பின்னால்  இருந்த பிளாஸ்டிக் துணியால் அம்மியை மூடியிருந்தாள் .அவன் அதனை உற்றுப் பார்த்தான் ,கீழே சில கல்கண்டுகள்  போல ஏதோ சிந்தியிருந்தன முத்து அதை எடுக்கப் போனான். உடனே அவள் தொடதே,…. குப்பிச்சில்லு என்றாள் அவன் சற்று யோசித்தவனாய் ஜீனியை வாங்கிக்கொண்டு வாசல்படியைவிட்டு போனபோது அவள் மீண்டும் நில்லுடா என்றாள். அவள் மெல்ல எழுந்து வந்து அவள் வெத்திலைப்பயை திறந்து உள்ளிருந்து ஒரு இருபத்தைந்து பைசாவை எடுத்து அவனிடம் கொடுத்தாள்..

 அவன் புரியாமல் விழித்தான் என்னடா பாக்ற இந்தா என்றாள் அவன்  இருகைகளிலும் ஜீனி  இருந்த டம்ளரை பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு  அவன் கால்சட்டைக்குள் கைவிட்டு உள்ளே  அந்த நாணயத்தை போட்டாள் அவன் நெளிந்தாள். அவள் லேசாக அவன் தொடையை கிள்ளி விட்டு ஓடு என்றாள் .முத்து பாய்ந்து விட்டிற்கு ஓடி னான்.

அம்மா ஏன் தொடய அந்த கிளவி கிள்ளூச்சு….

அதனை கண்டுகொள்ளாமல் ,பாயசத்தில் ஜீனியை கரைத்தாள் அம்மாவின் முகம் பளிச்சென்றிருந்தது. வெள்ளைக்கலரில் பூப்போட்ட புடவைகட்டியிருந்தாள்.முத்து பாயாசத்தை முதல் டம்ளர் முடித்துவிட்டு அடுத்தம்ளர் ஊற்றினான்.

இன்னிக்கு என்னம்மா திடீர்ணு பாயாசம்

ஏ தொற தெரிஞ்சாத் தான் சாப்பிடுவிங்களோ

முத்து ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்துக் கொண்டே பாயசத்தை மொத்தமாக  வாயில் கவிழ்த்தான்

அடுப்பு கங்கு அணைந்திருந்தது அடுப்பில் வெந்நீ கிடந்தது யாரு குளிக்க ஒருவேளை அம்மா நம்மை குளிக்க சொல்வாளோ!


அம்மா நா காலைல  பள்ளிக்கொடத்துக்கு போகும்போது குளிச்சுக்கறேன்

அம்மா  சணல் சாக்கின் கிழிசலை தைத்துக் கொண்டிருந்தவள்  அவனை நேராக நிமிர்ந்து பார்த்துவிட்டு
 பின் மீண்டும் குனிந்து சிரித்துக்கொன்டாள்.

கடைசியில் கண்ணாடி கிளாஸின் அடியில்  எஞ்சிய பச்சரிசியை எடுத்து அம்மாவிடம் காட்டி கேட்டான்

இது குப்பிச்சில்லாமா

அம்மா முறைத்தாள்.

உடனெ முத்து

நீலா பாட்டி இந்த மாதிரிதான் அரைச்சுக்கிட்டுருந்துச்சு
நான் கேட்டதுக்கு தரமாட்டேனுடுச்சு..

அம்மா மாடரென்று எழுந்தவள் எதோ நடந்துவிட்ட.
பதபதைப்புடன் . வாசலில் நின்று கீழே இருந்த  வீட்டை நோக்கி சத்தம் போட்டாள் மணீயக்கா

ஏ மணியக்க வாக்கா

கையில்  அடுப்பு கரியோடு வெளியே வந்தாள் மாணியக்கா
என்னபிள்ள ஏன் இந்த கத்து கத்துறவ.நீலாகிழவி குப்பிச்சில்லு அரைச்சிருக்காளாம்.அம்மாஅவளுக்கு பதில் சொல்லாமல்  குறுக்கு பாதியின் வழியே நீலா பாட்டிவீட்டை நோக்கி மேலேறினாள். மணியக்காவும் மூச்சுவாங்க மேலேறுவதை முத்து கையில் பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் ஜீப் ரோட்டில் வண்டிஒன்றுவரும்சத்தம் கேட்டது.
A JEEP ROAD IN CARDAMOM AREA IMAGE க்கான பட முடிவு
                       


முத்து வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான் நீலா பாட்டியை மூன்று பேர் தூக்கிப் போனார்கள். அவள் கண்கள் மட்டும் திறந்திருந்தது மறுநாள் கழிந்து பாட்டியை அதே ஜீப்பில் கொண்டுவந்தார்கள் இப்போது அவள் மேல் புடவைக்கு பதிலாக வெள்ளைத் துணி சுற்றியிருந்தது. கண்கள் மூடியிருந்தட்ன.

அம்மா தான் எல்லாவற்றையும் முன்னால் நின்று கவனித்தாள் இரண்டு மாதத்திற்க்கு பின் ராஜா அண்ணண்  கல்யாணத்திலும்  அம்மா தான் மும்முரமாக வேலை செய்தான் கல்யாண சாப்பாட்டில் சப்பாட்டில் பாயாசம் குடிக்கும் போது மட்டும்  முத்துவிற்கு ஏ னோ நீலா பாட்டி ஞாபகம் வந்தது.

இப்போது கொஞ்ச நாளாக அம்மாவின் பக்கத்தில் படுப்பதை விட்டிருந்தான். நீலா பாட்டி இறந்த பயம் போய்விட்டது என்று சொல்லமூடியாது ஆனால் அதனை அடிக்கடி நினைக்க மிடியாதபடி மறந்திருந்தான்.

கோடை விடுமுறை காலையில் இருந்து விளையாட்டுத்தான் அன்று மாலையில் லேட்டாகத்தான் வீட்டுக்கு வந்தான் தண்ணி டேங்க்கிடமிருந்து பார்த்த போது வீட்டின் சிம்னி விளக்கு புகையவில்லை

அம்மா இல்லையோ

வீட்டிற்கு வந்து பார்த்தபோது அம்மா கட்டிலில் படுத்திருந்தாள்

தலைவலி இருக்கும் போது அம்மா இப்படி படுப்பாள்  என்னைப் பார்த்ததும் அவள் கண்கள் நிறைந்தன அருகில் சென்றேன் என் தலைமுடியை கோதினாள்

அவளுக்கு விக்கல் எடுத்தது மெல்ல  தண்ணிர் கொண்டுவா என்பது கை காட்டினாள்

 வெளியில் அடுப்பில் இருந்த தண்ணியை அள்ள போனபோது செம்பு கிழே அம்மியில்  விழுந்தது.குனிந்து எடுத்த போது கைகளில் ரத்தம் கையில் சிறு அளவில் குப்பிச் சில் ஒட்டியிருந்தது.
கீழே அம்மியிலும் வெள்ளையாக சில துணுக்குகள்  தண்ணீர்  அள்ளிய கையோடு அம்மாவைப் பார்த்துவிட்டு  அவளுக்கு தண்ணீரைக் கொடுக்கமால் கீழே மணியக்காவை கூப்பிட ஓடிnaன்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிறுகதை புதிய சிலுவை

தேர்வு (சிறுகதை)

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்