இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமஸுடன் ஓர் உரையாடல்

படம்
 நண்பர் தாமரைக்கண்ணனிடம் தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது . ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியிலுள்ள தமரைக்கரையில்  இந்து நடுப்பக்க ஆசிரியர் சமஸுடன்    ஒரு கலந்துரையாடல் நடக்க  இருப்பதாகச் சொன்னார்.  தமிழ் இந்து  பத்திரிகை ஆரம்பித்ததிலிருந்தே அதன்    நடுப்பக்கத்தில் வரும் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். பள்ளி கல்லூரிகளில் படிக்கும்   மாணவர்களுக்கு இந்து பத்திரிகை மிக  அவசியமான அறிவுச்சுரங்கம்.  .  சமஸின்  எழுத்து அலைந்துதிரிபவனின் எழுத்து .எனவே  அது மக்களின் மனதில் தோன்றுபவற்றை நேரடியாகப் பிரதிபலிப்பவை . அதனாலேயே அவர் எழுதும்  கட்டுரைகள். தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில்   பெரும் விவாதத்தை உருவாக்குகின்றன. சமஸுடைய யாருடைய எலிகள் நாம் மிக முக்கியமான கட்டுரைத்தொகுப்பு கடலோடிகளைப்பறி எழுதிய கடல் ,. இந்தியாவின் வண்ணங்கள், அரசியல் பழகு, ஆகியவை , சமகால அரசியல் விழிப்புணர்வு பெற விரும்புவார்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்பேன் .   சமஸிடம...

குப்பிச்சில்லு (சிறுகதை)

படம்
 இன்னும் ஒரு ஓவர் தாண்டா முடிஞ்சுடும் பாதில விட்டுட்டுப் போன தோத்தாங்கோளி…… பயந்து ஓடுராங்யம்பாய்ங்கடா…. மணி முத்தை வற்புறுத்தி இருக்க வைத்தான். அடுத்து மணி போட்ட கடைசி ஓவர் முதல் பாலே சிக்சர்……. பந்து அருகில் இருந்த ஏலத்தோட்டத்திற்குள் போய் விழுந்தது மணிக்கு  முகம் தொங்கிவிட்டது. இனியும் ஐந்து பந்துகளில் ஐந்து ரன்கள் போதும் ஜெயிப்பதற்கு! எல்லோரும் பந்தை தேடி ஏலத்தோட்டத்திற்குள் ஓட.. முத்து கருவெட்டி மரத்தின் கிளையில் சொருகிவைத்திருந்த நரம்பு பையை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினான். மழை வருவதுபோல்   வானம் இருட்டாயிருந்தது. மணி ஆறைக்கடந்திருக்கும்.   வீட்டில் அம்மா இருந்தால் அடி உறுதி.. ஜீப் ரோட்டில் நின்று பார்க்கும் போதே வீட்டின் சிம்னி புகைவிட்டுக்கொண்டிருந்தது. அம்மா வந்துவிட்டாள்!!!! வெந்நீ போட்டிருப்பாள். கீழெ செங்கரை தேயிலை பேக்டரியிலிருந்து ஊதிய ஆலைச் சங்கு மணி ஆறைகடந்து விட்டதை    உறுதி செய்தபோது அவனுக்கு பயம் தொற்றிக்கொண்டது.என்றும் சரியாக ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவான்   ஐந்து நிமிடம் லேட்டாக வந்தாலும். கண...

தாமரைக்கண்ணன் திருமணம்

படம்
நண்பர் தாமரைக்கண்ணண் விஸ்ணுபுரம் இலக்கியகூட்டத்தில் எனக்கு அறிமுகமானவர். ஒட்டவெட்டப்பட்ட தலை மீசையில்லாத கண்ணாடி போட்டமுகம். கொங்கு பகுதிக்கே உள்ள சிவப்பு வெகு   இயல்பாக பழகும் தன்மை என தாமரை கண்ணணுக்கே உறிய சிறப்புகள் எராளம். திருமணத்திற்கு அழைத்தபோது. கண்டிப்பாக போக வேண்டும் என நினைத்துக் கொண்டேன். செவ்வாய்கிழமை நாகையிலிருந்து கிளம்பி. தஞ்சாவுர். அக்காவின் மகனுடன்   ரயிலில் ஹைதராபாத் போக வேண்டியிருந்தது என்னால் தாமரையின்  திருமணத்தை தவிர்க்க முடியவில்லை. கடந்த இரு வாரங்ககளாக இது பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன் எனவே ரயிலில் நாங்கள் இருவரும் போகவிருந்த திட்டத்தை மாற்றி அவனை பேருந்தில் டிக்கட் எடுத்து அனுப்பினேன். தஞ்சாவூரிலிருந்து அவனை பேருந்தில்   ஏற்றி அனுப்பி வைத்தவுடன் மனம் பரவசம் கொள்ளத்தொடங்க்கியது. நேராக பஸ்ஸில் திருச்சி அங்க்கிருந்து ஈரோடு பேசஞ்சர். செல்வராணி அக்கா காரில் கூட்டிச்செல்வதாக சொல்லியிருந்தார் கூட சாகுல் ஹமீது அண்ணன் கன்னியாகுமாரியிலிருந்து வந்திருந்தார். குறித்த நேரத்திற்குள் சென்று சேர முடியாததால் அவர்களோடு சேர்ந்து செல்ல இ...

நதிக்கரையோரம்

படம்
சில ஆண்டுகளுக்கு பின் காவிரி ஆற்றில் வெள்ளம் வந்திருக்கிறது. இவ்வருடம் பெய்த பருவ மழையின் கிருபையால் எந்த விதமான ஆர்பாட்டமும் போராட்டமும், தற்கொலையும், இல்லாமல் காவிரி அன்னை நெஞ்சம் நிறைந்து     முலைகனிந்து தன் பிள்ளைகளுக்கு அமூதூட்டியிருக்கிறாள் காவிரி    தென்னகத்தின் கங்கை, கங்கைச் சமவெளி நாகரீகத்திற்கு ஒப்பீடானது காவிரி சமவெளி நாகரீகம். குடகிலிருந்து பூம்பூகார் வரை விரிந்து கிடக்கும் காவிரியின் ஆற்றூப்படுகை தான் தென்னிந்தியாவின்   கலை,இலக்கியம், பண்பாடும் உருவாக காரணமான இடம் ஆகவே காவிரிக்கரையின்      அழகை காண ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தோம்   நண்பர் பாரியிடம் சொன்னபோது போலாமே என்றார். உடனடி திட்டம் நிறைவேற்றப்பட்டது. முதற்கட்டமாக   ஈரோட்டிலிருந்து ஒகனேக்கல் வரை பின் திரும்பி   திருச்சி முக்கொம்பு   வரை காவிரி கரையோரமாக போவது என்று முடிவு செய்தோம். நாகையிலிருந்து ஈரோடு கிளம்பினேன்.   ஈரோடு ரயில் நிலையத்தின் இறங்கியதும் .அன்று காலைதான் கம்போடியா பயணம் சென்று வந்த கிருஸ்ணனுடன் பாரியும் நண்பர்களும் பேசி...

நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு

படம்
நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு - கதிரேசன் நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி போக்குகள் என ஒரு ஒட்டு மொத்த சிறுகதைகள் குறித்த விவாதமாக  இக்கூட்டம் இருந்தது.  எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் சிறுகதைகள் தோற்றம் குறித்தும் எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி முதலான ஆரம்பகால எழுத்தாளர்கள் குறித்தும் மேலைநாடுகளில் பிரபுக்குடும்பங்களில் சிறுகதைகள் ஒரு கேளிக்கை நிகழ்வாக சொல்லப்பட்டது குறித்தும் சொன்னார். ஆசிரியன் கதை சொல்லும்போதே கேட்பவர்கள் கதையின் முடிவை தாங்களாகவே ஊகித்துக்கொண்டு கதையை பின்தொடர்வார்கள். கதை சொல்லியின் சவால் என்பது வாசகன் ஊகிக்கும் அத்தனை முடிவுகளையும் தாண்டி அவன் முற்றிலும் எதிர்பார்க்காத வேறொரு முட...