தீட்சையின் சில படி நிலைகள் குரு நித்யசைதன்ய யதி ( தமிழில் கதிரேசன் )
ஒரு மகாகுருவின் அருகில் ஒரு நல்ல சீடன் ஒருவன் வந்தடைவது தெய்வ கருணையால் எனக் கூறலாம். அதுபோல தங்களுக்கிடையே ஒத்துபோகமுடியாத குருவும் சீடனும் சந்திப்பதைத் தற்செயல் என்றுதான் சொல்லவேண்டும் .அப்படிப்பட்ட இருவர் தற்செயலாக சந்திக்கும் சந்திப்பு இருவருக்குமிடையே நேரம் வீணாவதற்கும் மனது புண்படுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். குருவும் சீடனும் தம்மில் ஒத்து போகிறவர்களா என்பதை அறிந்துகொள்ள ஒரு தவறு நடக்கமால் வேறு வழியில்லை .சிறிது காலம் குருவும் சீடனும் ஒன்றாக கூடிக்கழித்த காலங்களை திரும்பி பார்க்கும்போது மட்டும்தான் அவர்களுடைய சந்திப்பு நன்மைக்கா அல்லது தீமைக்கா என்று புரிந்து கொள்ள முடியும். நான் மிகச்சிறந்த குரு என கம்பீரமாக மார்தட்டிக் கொண்டு திரிபவர்களுக்கே ஆயிரக்கணக்கிள் சீடர்கள் தேவைப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவுக்கே பன்னிரண்டு சீடர்கள் கிடைத்து இறுதியில் ஒருவரும் உதவவில்லை. குரு சீட உறவில் ஏற்படும் தவறுகள் முரண்பாடுகளைக் களைந்து அவற்றை உபயோகரமாக மாற்றிக்கொண்டு செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. ஒரு பழுதடைந்த கடிகாரத்தை சரிசெய்ய வேண்டுமானால்கூட கடிகாரம் செய்பவன் அதனை சிறிது நேரம் இ...