காடு


காலையில் எழவெண்பஞ்சு மூட்டைக்குள் எரியும் மஞ்சள் விளக்கு போல் மரக்கூட்டங்களை ஊடுருவிக்கொண்டு சூரியன் பளிச்சிட்டது.நான் மெல்ல இரு கைகளையும் மார்போடு சேர்த்துக்கட்டிக்கொண்டு குளம் நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.புல்லின் நுனியில் சொட்டி நின்ற பனித்துளிகள் கனுக்காலை தீண்டி பாதம் பனியில் நனைந்து  உறைந்து ஊறியது.குளத்தின் மேல்பக்கமாக இருந்த ஈட்டி மரத்தின் அடியில்.செம்மண் பாறையை ஈட்டி மரத்தின் வேர்கள் மலைப்பாம்பு மரத்தை சுற்றி பிணைந்திருப்பதுபோல் பிணைந்திருந்தன.ஈட்டி மரத்தின் உச்சியில் இருந்து இலை  விலகாமல் நேராக பொத்தென்று குளத்தில்   விழுந்தது . அப்பெரிய குளம்  அலையில்லாமல் நிச்சலனமாய் இருந்தது .எதிர் புறம் இருந்த நாணல் புற்கள் கூட அசையாமல் நின்றிருந்தது. குயிலின்  அகவலைப்போல   அச்சத்தம் காட்டின் உள்ளே இருந்து மேலே எழும்பி வந்தது.சிறிது நேரத்தில் காட்டையே நிறைத்துக்கொண்டது நான் மெல்ல எழுந்து அந்த குரல் வந்த திசையை நோக்கி போனேன் தங்கப்பன் இன்னும் எழுந்திரிக்கவில்லை நேற்று இரவு முள்ளம்பன்றி இறைச்சியையை இரவு இரண்டு மணிவரை தின்று கொண்டிருந்தான் நான் தூங்கிவிட்டேன்! இன்னும் ஏலத்தோட்டமாக்கப்படாத காட்டுக்குள் இருந்து அந்த சத்தம் கேட்டது . பெரு மரங்கள் நிறைந்திருந்ததால் காடு அடர்த்தியில்லை காலைவேளையில் சறுகுகலுக்கு உள்ளும் பனி படர்ந்திருந்ததால் வழக்கமாக அதை மிதித்தால் கேட்கும் ஒசை கேட்கவில்லை.இப்போது லேசாகா ஆடிய காற்றில்
மரங்களின் இலைகளின் நுனியில் வானத்தின் ஒளிபட்டு  தேங்கி நின்றிருந்த நீர்துளி பூமி நோக்கி துள்ளி குதித்த போது ஓரிரு துளிகள் என் பின்முதுகின் வழியாக உடலுக்குள் சென்று உடல் சில்லிட்டது .இப்போது அந்த குரல்  ஒரு அழுகைபோல முன்னை விட அதிகமாக கேட்டது சற்று கீழ்நோக்கி நகர்ந்து வந்தேன். மரங்களுக்கிடையில் வெள்ளைப்பொட்டு போல் சூரியனின் காலை ஒளி காட்டுக்குள் புகுந்திருந்தது .கீழே குளம் நிரம்பி வழியும் நீர் ஓடி உருவான ஓடை வரை வந்து விட்டேன் உண்மையில் அந்த ஒசை எத்திசையிலிந்து வந்தது என ஊகிக்க முடியவில்லை மேலே எறிச்செல்லும் பாதையும் மறந்துவிட்டது. தனிமை  அச்செயலை மீண்டும் மீண்டும் செய்யச்சொன்னது.அருகில் உள்ள ஓடை நீருக்கு மேல் இருந்த பாறையின் அடியில் அமர்ந்தேன்.நடந்து வந்த அலுப்பு உடலை அலுத்தியதும் உறங்கிப்போனேன்…

                            ……………………………………………………
ஏதோ பேச்சரவம் கேட்டு எழுந்த போது வெயில் சூடேரத் துவங்கியிருந்தது.பாறையில் எச்சில் வடிந்திருந்தது.காணிக்காரர்கள் நான் இங்கு வந்து படுத்துக்கிடந்ததை நினைத்து சிரித்து கொண்டு போயிருப்பார்களோ! .அவர்கள் எல்லா பெண்களின் வாயிலும் வெற்றிலை மென்று உதடுகள் சிவந்து காணப்பட்டது பாதையின் இருபுறமும் வெற்றிலை எச்சில்களின் துப்பல்கள் மெல்ல அது ஒரு மணத்தை கிளப்பியது அவர்கள்  என்னை கடந்து போகும்போது அவர்கள் மேலே ஜீப் ரோட்டிற்குத்தான் போகிறார்கள் என்பதை ஊகித்துகொண்டேன்  மெல்ல அவர்கள் பின்னால் சென்றுகொண்டிருந்தேன் அதில் மெல்ல ஒருத்தி மற்றவர்களிடமிருந்து பின் தங்கினாள்  பின்பு இடப்புறம் இருந்த பாதை வழியாக காட்டிற்கு உள்பக்கம்  சென்றாள்.எனக்கு அவளை பின்தொடர வேண்டுமென்றொரு வெறி மெல்ல பரவியது என் நிலை மறந்து மெல்ல அவள் பின்னாள் நடந்தேன் நீண்டிருந்த ஆலமரத்தின் பின்னே இருந்த பாறைக்கு பின் சென்றாள் அங்கே ஆலமரத்தின் வேர்களோடு சில துணிகள் சேர்த்து கட்டப்பட்டிருந்தது கீழே மூன்று புரமும் கற்களால் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு நாக கன்னிச்சிலை  .மெல்ல அவள் பின்னாள் போய் நின்றேன் என்னை திரும்பி ஒரு கணம் பார்த்து விட்டு தன் பையை இக்கி அம்மரத்திடம் வேண்டிக்கொண்டால் அடியில் இருந்த பாறை மண்னை எடுத்து பூசிக்கொண்டாள் .என்னை அழைத்தாள் முதலில் தயங்கிய நான் பின் அவளின் முகத்தை அருகில் கானும் நோக்கில் முன்னால் சென்றேன் கையை ஒன்று சேர்த்து சாமி கும்பிடுவதைப்போல கை காட்டிச் செய்யச்சொன்னாள் .என் நெற்றியில் கொஞ்சம் மன்னை எடுத்து வைத்துகொன்டேன் பின் அவள் முகத்தை  பார்க்க பயமாக இருந்ததால் மனிதில் அவள் உருவத்தை கொண்டுவர முயற்சி செய்தேன் என்  நெற்றியில் பொட்டு ஒன்று  வைத்து விட்டு நான் கண் மூடி ஒரு கணம் அவள் முகத்தை என் அகத்தில் கொண்டு வர முயற்சித்து பின் கண் திறந்தேன்.அவள் இல்லை பாறைக்கு பின் ஓடையை தாண்டி யாரோ நடந்து போகும் சத்தம் கேட்டது.சிறிது நேரத்தில்  அவலை பின்தொடர நினைத்த போது ஏதோ ஒன்று கால்களை  இருக்கி பற்றி பிடித்துகொண்டது போல் இருந்தது அக்குரல் மீண்டும் கேட்கத்துவங்கியது.ஒரு நிமிடம் ஒன்றும் ஊகிக்க முடியாதவனாய் திகிலுடன் நின்றிருந்த நான் பின் வெறி கொண்டவனைப்போல் ஓடத்துவங்கினேன் அக்குரல் தற்போது என்னை ஏளனம் செய்து கேட்கும் சிரிப்பொலியாய் தோன்றியது.மேலே ஜீப் ரோட்டிற்கு வந்து மேலேரும்போதே முன்னாள் வந்த காணிக்காரர்கள் அவ்விடத்தில் ஜீப்பை எதிர்பார்த்து குழுமியிருந்தார்கள் .நான் அவர்களை கடந்து மேலேறினேன்.மேல தங்கப்பன் மதிய மதிய உணவிற்காக விறகு வெட்டத்துவங்கியிருந்தான்.என்னை பார்த்து ஒரு முறைப்பிற்குள் மேல் ஒன்றும் பேசவில்லை .நான் சட்டேன்று அடுப்பு பக்கம் போனேன் எனக்கு வைக்கப்பட்டிருந்த பாலில்லாத காப்பி சுடு ஆறியிருந்தது அதை எடுத்து குடிக்கத்துவங்கினேன் .மெல்ல தங்கப்பனின் விறகுவெட்டும் ஓசையை தாண்டி நான் கேட்ட ஓசை மீண்டும் கேட்கத்துவங்கியிருந்தது  வெட்டிய.விறகுகளை ஒரு தாய் தன் குழந்தயை தன் மார்போடு முலையில் சேர்ந்து அனைத்துகொண்டு பாலுட்டுவது போல  வெட்டிய விறகை மார்போடு அனைத்து தூக்கிக்கொண்டு வந்தான்.நான் காபி டம்ளரை வாயில் உறிஞ்சிய படியே சிரித்து கொண்டிருந்தேன் ..என் சிரிப்பை பார்த்து விட்ட தங்கப்பன் ..என்னாடே கிடந்து இளிக்கிற..காலைல சீக்கிறம எங்க கிளம்பி போய் என்ன பாத்துட்டு வந்து இப்டி மோங்க்குற ….என்றான்
இவனிடம் சொல்வோமா வேண்டாமா என்ற சந்தேகம் என்னுள் வந்துபோனது ..தங்கப்பா நான் காலைல குளம் நிரம்பி வழிஞ்சு தண்ணி கீழ போகுமுள்ள ஒரு காணு அதுக்கு அந்த அலமரத்துக்கு அடியில இருந்த ஒரு பாறை வரைக்கும் போனேன் என்றேன் .தங்கப்பன் விறகை கூடத்தில் போட்டுவிட்டு கையை இரு அசமபக்க முக்கோணங்க்களைபோல் இடுப்பில் வைத்துக்கொண்டு என்னை நோக்கினான் இறுபுறமும் நீண்டு விரிந்திருந்து மயிர்கள் அடர்ந்திருந்த மார்பில்  வியர்வை காய்ந்த கோரைப்புற்களுக்குள் நிறைந்து நிற்கும் பனித்துளி போன்று நிறைந்திருந்தது .என் முகத்தை நன்றாக உற்றுப்பார்த்து எந்த காட்டுக்கு போனீரு என்றான் ..சற்றே
ஆச்சரியமும் கோபம் கொண்ட பார்வையுடன்.கீழ ஒரு ஆலமரம் இருக்குமில்ல அங்க தான் என்றேன்…

அங்க என்னத்துக்கு போனீரு அது காணிக்காரங்க இடமில்லா.அங்க தனியா போனா அவனுக..பிடிச்சு வீடுங்களுக்குத் தூக்கிட்டு போய் உடுத்துயிருந்த துணிமணி எல்லாத்தை அவுத்து…..என்று சொல்லி நிறுத்திவிட்டு என் முகத்தை ஒருமுறை பார்த்தார்…. நான் அவுத்து என்றேன் சற்று திகிலுடன் அவுத்து அவனுக வச்சுகிருவாங்க என்றார். அப்ப நமக்கு என்றேன் …நமக்கு என்ன சும்மா ஆட்டிவிட்டுகிட்டு வரவேண்டியது தான் என்று சொல்லி விட்டு அவன் சிரிக்கும் போது அவன் மார்புகள் அதிர்ந்து மென் மயிர்களில் நிரைந்திருந்த வியர்வை துளிகள், காணில் தேங்கி நிற்கும் நீரில் கிடக்கும் அரைத்தவளைகளைப்போல் துள்ளின.எனக்கு கோபம் வந்தது இருந்தும் அதை அடக்கிக்கொண்டு .உண்மையாகவா? என்றேன் நெசம்  தான் பிலா நான் ஏன் பொய் சொல்லபோறேன் என்றேன்.அவரை நான் நம்பாமல் பார்த்தது அவருக்கே தெரிந்திருக்க வேண்டும் .போய் யாரைப்பார்த்தீர்கள் என்றான். அங்க ஒரு அக்கா எனக்கு திண்ணீறு பூசிவிட்டங்க என்றேன் உடனே நெற்றியில் இருக்கிறதா என்று தடவிப்பார்த்துக்கொண்டேன்  இல்லை வேர்வையால் அழிந்திருந்தது.நான் சொன்னதை கேட்டதும் முகத்தை கொஞ்சம் கவனத்தோடு வைத்துகொண்டு எந்த அக்கா… காணிக்காரியா என்றார்.தெரியல ஆன உடுப்பு  எல்லாம் அவங்கல மாரித்தான் உடுத்தியிருந்தாங்க  என்றேன்……இப்போது தங்கப்பன்  பிள்ள நீ அங்க போககூடது  கேட்டியா? என்று முகத்தை சற்று கடினமாகவே வைத்துகொண்டு சொன்னார்  அந்த  எச்சரிப்பில்  பயமோ திகிலோ கலந்திருந்தது…. சிறிது நேரம் கீலே கிடந்த விரகுகலை அடுக்கியவர்  பின்னர் சடாரென எனை நோக்கி திரும்ப கடைசியாக அடுக்கிய விறகுகள் லேசாக கீழே சரிந்தது பிள்ள நீ கண்டது கானிக்காரி இல்ல என்றார்.நான் சற்று திகிலுடன் வேறேன்ன என்றேன்.அது ஒரு யட்சியாக்கும் என்றாள் .எட்சியா  எனக்கு வயிற்றை கலக்கி மூத்திரம் அடைத்துகொண்டு வந்து விட்டது அதற்கு மேல் அதைப்பற்றி அங்கு பேச விரும்பவில்லை .நான் எழுந்தபோது தங்கப்பன் விடாமல் என்முகத்தை நோக்கி மீண்டும் ஆமா பிள்ள அது காட்டுக்காணிகளுட யட்சியாக்கும் அது மத்த சனங்கள  பார்த்தா காட்டுக்குள்ள கூட்டிட்டு போகும்.. என் உடம்பெல்லாம் புல்லரித்தது நான் ஆச்சரியத்துடன் கேட்டுகொண்டு காட்டுக்குள்ள கூட்டிட்டி போய் என்றேன்.அவர் வேற எதுக்கு பிள்ள அதுக்குத்தான் என்றார்.எனக்குள் ஒரு நிமிடம் பற்றியேரிந்த காமத்தை அடக்கிக்கொண்டு அதுக்கா… எதுக்கு.. தங்கப்பன்னே என்றேன் பிள்ளா அது காட்டுக்குள்ள கூட்டிட்டு போய அந்த ஆலமரத்துக்கு அடியில வச்சு….. சட்டென்று அவருடைய முக பாவனையை மாற்றி சோர  குடிக்கும்….யட்சியாக்கும் அது என்றார்….ஒரு கணம் அவர் முகத்தில் தோன்றிய சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு என்னை பார்த்தவர்  .பின் கையில் தூம்பாவுடன் கிளம்பிவிட்டார் எனக்கு தனியாக இருக்க பயமாக இருந்தது  நானும் அவர் கூட கிளம்பினேன் பிள்ள நீ எங்க வர என்றார் நானும் .உங்க கூட வாரேன் என்றேன்  .நான் உரம் போட போறேன்.பிள்ள நீ இனி உரம் போட முடியாதுல்ல என்றார் நீ இந்த பாத்ரூம்ல போடு எனக்கு அதுக்குள்ள உக்காந்து  போட பிடிக்கல்ல வெளில போட்டாத்தான் சாவகாசமா ஏதாவது பாத்துக்கிட்டு போடலாம் என்றார் நான் ஐயே! என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் போனேன் தங்க்கப்பன் ஏதோ பாடலை முனுமுனுத்துக்கொண்டு போவது கேட்டது .இப்போது பாத்ரூம் சுவர்களுக்குள் இருந்த வெள்ளை சிமென்ட் செங்கலை பார்க்கும் போது என்னுள் அவளின் முகம் வந்து காமத்தை தூண்டியது. அன்று காலையிலேயே மீண்டும் ஒரு முறை அதைச்செய்தேன் .நன்றாகத்தான் இருந்தது குறியின் முனையில் இருந்த சிறு எரிச்சலைத்தவிர
………………………………………………………………..   
பாத்ரூமை விட்டு வெளியில் வரும்போது எனக்கு அவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை
முதலாளி  வக்கத்து வீட்டில் பீலிப்போஸ்தலையில் வெள்ளைத்துண்டு கட்டி கையில் தூப்பாக்கியோடு நின்றிந்தார்.துப்பாக்கியை நீட்டி மடக்கி என்னை நோக்கி குறிபார்த்தார்.ஒரு கணம் உறைந்து விட்ட என் மனது . அம்மே…………சட்டென்று  சுதாரித்து கொண்டது அருகில் இருந்த பள்ளத்தில் தாவிகுதித்து கீழ்நோக்கி ஓடத்துவங்கினேன்
டா நிக்கடா அவிடே.. என்று என்னை நோக்கிவந்தார் நான் பள்ளத்தில் எழுந்து குளத்து மேல் பக்கம் நோக்கி ஓடி காலையில் இருந்த பறைக்கடியில் ஒளிந்து கொண்டார் செட்டின் நாலா பக்கமும் எனை தேடியவர் ஒரு பெரிய சிரிப்போடு இல் அமர்ந்து வெளிப்புறம் இருந்த சேரில் அமர்ந்து தன் பூட்சை கழட்டத்துவங்க்கினார்.நான் மெல்ல குளத்திலிருந்து மேலே சென்ற பைப்பின் பாதை வழியாக மேலேரத்துவங்கினேன்.நல்ல வெயில் தொடங்கி விட்டது என்றாலும் பனி இன்னும் உருகவில்லை மேலே டேங்கிற்குச் செல்வதற்குள் ஆடை முழுவது நனைந்து விட்டது.சிறிய  கட்டுவிரியன் பாம்பு ஒன்று பைப்பை சுற்றியிருந்தது.முதலாளி பார்க்கக் கூடது என்பதற்காக குனிந்து ஏறிக்கொண்டிருந்த என் மனதில் ஆனி வது அடித்தது போல் இருந்தது .நான் மெல்ல நிமிர்ந்து கீழெபார்த்தேன் திண்ணையில் முதாலாளி இல்லை நான் மெல்ல அருகில் இருந்த கல் மேல் அமர்ந்து கொண்டேன் உடல் முழுவதும் வியர்த்து மூச்சு விடும்போது நெஞ்சும் அடிவயிறு வலித்தது .தண்ணி டேங்கிற்கு பின்புறம் யாரோ இருப்பதை  சருகுகளின் லேசன சலசலப்பில் உணர்ந்து கொன்டேன் மெல்ல போய் எட்டிபார்க்கலாமா என நினத்தேன் அதிகாலை என்னையும் தஇகில் சங்க்கப்பனயும் சேர்த்து வேறு யாரு இங்கே வருதிக்ல்ல யாராக இருக்கும் என மெல்ல எட்டிப்பார்க்க மன்ம் ஆர்வம் கொண்டது .டேங்க்கின் சிமென்ட் சுவர்களில் பனியின் ஈரமும்.நீருன் குளுமையும் கைகளின் வழியாக உடம்பிற்குல் படர்ந்தது .நான் மெல்ல அந்த வ்ட்ட வடிவமுள்ள டேங்கை சுற்றிசென்ற போது .டேங்க்கில் யாரையோ வைத்து அழுத்திபிடித்திருந்தான் அருகில் சென்று பார்த்தேன் சுவற்றொடு ஸ்வராக அவளை வத்து பிணத்து கோன்டிருந்தான் .அவள் திமிறிக்கொண்டிருந்தார் .நான் மெல்ல டேங்கிற்கு பின்னாள் இருந்த  கர்வெட்டி கருவெட்டி ம்ரத்துக்கிற்கு பின்னால் நிண்று கொண்டேன் உடல் வியர்த்து பசி எடுத்தது கூடவே குறியும் எறியத்துவங்கியது.மரத்தின் கீழெ அமர்ந்து ககளை மடிக்குள் இருக்கி போர்த்தி கங்களை மூடிக்கொண்டேன்
…………………………………………………………………………………….  அவன்
டேங்கிற்கு மேல்  இருந்து வரும் ஒற்றையடிப்பாதையில் மெல்ல தங்கப்பன் இறங்க்கிவந்து கொண்டிருந்தான் கழுத்தை சுத்தியிருந்த துண்டை கையால் வாயில் கூட்டிப்பிடித்து  கனைத்துகொண்டு மெல்ல நடந்து கொண்டிருந்தான்.அவன் முகம் இருண்டிருந்தது .ஏதோ அதிர்ச்சியில் உறந்தவன் போல நடந்து போய்கொண்டிருந்தான்.அவனுக்கு பின்னாள் பின் தொடருவதற்க்கு எனக்கு பயமாக இருந்தது .அவன் கீழே குளத்தின் அருகே சென்று குளிக்கத் துவங்கியதும் எனக்கு டேங்கிற்கு பின்னாள் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.டேங்கிற்கு மறுபுரம் மெல்ல எட்டிபார்த்தேன் யாரும் இருக்கவில்லை அந்த பெண் எங்கே போய்விட்டாளா.மெல்ல டேங்கை முழுமையாக சுற்றி வந்தபோது யாருமேயில்லை எனக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது கீழே தங்கப்பன் குளித்து விட்டு செட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தான் .நான் மெல்ல கீழ் நோக்கி நடந்தே மனதில் ஏதோ ஒரு இழப்புணர்வு பற்றிக்கொண்டது .குளத்தின் படிக்கட்டில் ஏறும்போதே தங்கப்பனை முதலாளி திட்டுவது தெரிந்தது நான் மெல்ல நகர்ந்து  தங்கப்பனின் பின்புறமாக மறைந்து நின்றேன்.தீவிர மாக எதையோ பெசிக்கொண்டிருந்தவர் என் வருகையப் பார்த்து விட்டு சட்டென்று பேச்சை மாற்றினார் பின்னர் ஒரு கணம் தங்க்கப்பனிடம்
தங்கப்பா இவன் கொள்ளமல்லடா ஆளு நல்ல முயலு ஒட்டமாடா கறிவச்சு தின்னாம் கொள்ளாம்  என்றார் தங்கப்பன் மெல்ல திரும்பி பார்த்தன் அந்த பார்வையில் ஒரு மெல்லிய சிரிப்புடன் கூடிய கடுமையான் குரோதமும் தெரிந்தது. நான் மெல்ல வீட்டிற்குள் சென்று கஞ்சி வைக்க துவங்கினேன்.தங்க்கப்பனும் முதளாலியும் இப்போது எதோ ஒன்றை சத்த மாக பேசிச்சிரிப்பது கேட்டது  தங்க்கப்பன் வெட்டி வைத்த விரகில் .மண்ணென்ணெய் ஊற்றி அடுப்பில் பற்ற வைத்து விட்டு உள்ளே சணல் சாக்கு கொண்டு போர்த்தப்பட்ட படுக்கையில் வந்து அ மன்ட்படுத்தேன்.நிலையில்லாமல் தவித்த மனத்தை மெல்ல கண்களை மூடி இருட்டின் குகைக்குள் செலுத்தி கட்டிலில் சுருண்டு கொண்டேன் .
தங்க்கப்பனும் பண்ணும் பிணைந்திருந்த காட்சியே மனதிற்குள் வந்தது
மெல்ல தலையனையை கைகளோடு இருக்கி கட்டிக் கொண்டு கட்டிலில் படுத்து கொன்டேன் கண்ட காட்சி ஒரு கனவாய் விரிந்தது.நினைவில் தங்க்கப்பனுடன் பினைந்திருந்த பெண்ணி முகம் பார்க்க மறந்து விட்டதால்கனவில் அந்த முகம் வந்து விடுமென்று நம்பினேன் மெல்ல நான் நடந்து நான் தங்க்கப்ப்னும் அந்த் பெண்ணும் பிணைந்து கொண்டிருந்த இடத்திற்கு மேல் பாகத்திற்குச் செண்றேன் அங்கு தங்க்கப்பன் அப்பெண்ணை தன் கையில் ஏந்திகொண்டிருந்தவன் பின் மார்பில் தழுவிக்கொண்டான் ,நான் மெல்ல கரு வெட்டி மரத்திற்கு பின் நின்று எட்டிப்பார்த்தேன் .என்னால் ந்ம்ப முடியவில்லை காலயில் நான் பார்த்த பேண் ,எனக்கு வீபூதி அளித்த பெண் தங்க்கப்பனின் உடலோடு சேர்ந்து பிணைந்து கொண்டிருந்தாள்
…………………………………………………………………….
மதியப்பொழுது லேசான பசியோடு தூக்கம் களைந்த நேரத்தில் மழை சடசடத்தது.நான் மெல்ல எழுந்து உட்கார்ந்து கொண்டேன் இப்போது தகரத்தில் விழுந்த மழையின் சத்தம் காதை அறைந்தது வெளியில் விறகு எரிவதுடன் கஞ்சி வைக்கும் மணம் வர பசி வ்யிற்றை கிள்ளியது.நான் மெல்ல வெளியில் செல்ல எழுந்து கால்களை தரையில் வைத்தபோது கால்கள் மறத்து போய்விட்டிருந்தன.வெளியில் அடுப்பில் கஞ்சி வெந்து கொண்டிருந்தது.தங்கப்பனை ஆளைக் காணவில்லை கஞ்சி வெந்து குழைந்து சூடேறி பொட்டித்தெரித்து கொண்டிருந்தது. நான் மெல்ல அகப்பையும் சட்டியும் எடுத்து கொண்டு கஞ்சியை வாறி நின்றவாறு உறிஞ்ச்சத்துவங்கினேன் .மழை அதிகமாகி இருள் கூடி கூடி வந்தது.காற்று வீசும்போது மழை பூவாளியில் நீரைக்கொண்டுவந்து கொட்டுவது போல திண்ணையில் நீரை கொட்டிசென்றது.சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் போய் படுத்துகொண்டேன் அகப்பையில் ஒட்டியிருந்த கஞ்சியை வெளியில் மழை நீரில் கழுவப்போனபோது வெளியே  உலகில் காலையில்  யாரோ பேசும் சத்தம் கேட்டது மெல்ல எட்டுபார்த்தேன் செட்டின் பலகையில் காலையில் முதளாலி உட்கார்ந்திருந்த இடத்தில்   தங்கப்பன் உட்கார்ந்திருந்தான் அருகில் காலையில் எனக்கு பொட்டு வைத்த பெண் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் நான் மெல்ல செட்டின் ஒரம் நீட்டியிருந்த தகரத்தின் இடுக்குகள் வழியாக அவனிடம் சென்றேன் தங்க்கப்பன் அவளின் கைகளை பிசைந்துகொண்டிருந்தான்.நேர் கீழே குளத்தை மஞ்சு மூடியிருந்தது நான் மெல்ல அவர்களுக்கு பின்னால் போய் நின்றேன் என்னை கவனிக்காம்ளெ அவர்கள் இருவரும் பேச்சு சுவாரசியத்தில் இருந்தனர்.தங்கப்பன் சில நேரம் லேசாக அவள் புட்டத்தை தட்டிக்கொன்டிருந்தான்.கொஞ்சம் மெனக்கெட்டால் அவர்களால் என்னை பார்த்துவிட முடியும் ஆனால் அவர்கள் மெனக்கெடுவது போல் தெரியவில்லை நான் என் தொண்டையை இருமுறை செருமினேன்.மெல்ல அவல் யாரோ ஒண்டு என்று இருபுறமும் திரும்ம்பி பார்த்தாளும் அன்னைபார்க்கவில்லை.தாங்க்க்ப்பன் அதற்கு அதுவெள்ளம் பட்டியோ,பூச்சையோவா இரிக்கும் ஆ செருக்கன் கிடந்து உறங்க்குவா என்றார். ஏணொ தெரியவில்லை எனக்கு மெல்ல தைரியம் வந்தது.மெல்ல அவர்கள் அவ்விடம் விட்உ நகர்ந்தார்கள் அல்லது தங்க் கப்பன் அவளை  இழுத்து கொண்டு சென்றான். பின் அருகில் இருந்த கதவுகளுக்கு பின்னாள் அவளை வைத்து மார்போடு சேர்த்து அமர்த்திர்னான் எனக்கு ஏணோ தெரியவில்லை தங்க்கப்ப்ன் மேல் கோபம் வந்தது.நான் பின் பக்கமாக அவனிடம் சென்றேன் அவனை அடிக்க வேன்டும் எனத்தோன்றியதா எதற்காக அவ்வாறு சென்றேன் என்றெ தெரியவில்லை பின் மெல்லை பின்னால் சென்று தங்க்கப்பனின் அருகில் நின்றேன் அவர்கள் இருவரும் இவ்வுலகத்தை மறந்து விட்டு வேறோரு மோன நிலையில் இருந்தார்கள் .அதை களைத்து அவர்களை இயல்பு உலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று எனக்கொரு குரூர எண்ணம் மெல்ல.சரி கூப்பிட்டால் என்னவென்று கூப்பிடுவது எதற்காக கூப்பிடாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது அப்போது தான் மெல்ல கஞ்சிக்கு உப்பு போடததும் .நான் ஓரைடத்தில் யாருக்கும் ரியாமல் அட்டைகடிக்கடிக்காக எடுத்து வத்திருனந்த உப்பு எடுத்து க்ஞ்சி குடித்தது லா பக ம் வந்தது .நான் மெல்ல தங்க்கப்பா எனக்கூப்பிடேன் நிச்சயம் அது அவனுக்கு கேட்டிருக்க வய்ப்பில்லை,மழையின் இறைச்சல் வேறு பேசும்போதே கொஞ்ச்சம் சத்தமாகத்தான் பேசுவான் நாமும் அவாறு தான் பேசவேன்டும் அவன் குரலில் தொனிக்கும் ஒரு அதிகாரத்தன்மைக்கு வனட்து செவிட்டு ட்தனமை தான் காரணமா? அந்த யோசனயை தடை செய்து விட்டு தற்பொது இன்னும் கொஞ்சம் சத்தமாக மீண்டும் தங்கப்பா எனக்கூப்பிட்டேன். இம்முறையும் அவனுக்கு காது கேட்கவில்லை மெல்ல அவனை விடுவித்து என்னை திரும்பி பர்த்தவள் .கடும் மழையில் கரையான் புற்று இடிந்து விழுவது போல சட்டென அவளை உதறி விட்டுக்கொண்டு தண் இடுப்பில் கட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் கொங்கானியை விருத்து கொண்டு மெல்ல வேகமாக ஓடத்த்துவங்க்கினாள்
தங்க்கப்பன் மெல்ல பத்து பில்லா ,மழையில வழி நல்லாபாம்பா வழுக்கும் என்றான் சிரிது நேரம் அவளையே பர்த்துகொண்டிருந்தவன் பின் மெல்ல என் பக்கம் திரு ம்பினேன் நான் ஓடுவத்ற்கு தயாராக் கால்களை முன் பக்கம் திருபினேன் இனியும் திசையை முடிவு செய்ய வில்லை. தங்கப்பன் மெல்ல ஒரு கள்ளச்சிரிப்புடன் வாயில் துண்டை லேசாக துடைதுக்கொண்டான்

என்னத்துக்கு பிலேய் இப்ப இங்கிட்டு கெட்டி எழுந்திரு..யாரு அழைச்சாவா என்றான்

நான் மெல்ல கஞ்சி வெந்துருச்சு …..என்றேன்
வெந்த  வாரி குடிக்க வெண்டியது தானே பிலேய் இங்க்க எதுக்கு வந்த அச்சாறு வேன்டியா என்றார் எனக்கு கோபம் வந்து விட்டது கஞ்க்கு உப்பில்ல அதான் எங்க வச்சிரிக்கேருன்னு கேட்டுட்டு போலாம்னு கட்வந்தேன் என்றேன் …ஓ..அதாக்கும் சங்கதி சரி வா போவோம் என்று என்னை கூட்டிக்ககொண்டு ந்டக்கும் போது சொன்னார் டாப்பா உப்பு தீர்ந்ததுன்னா அருல்  .கீழ பரணி இருக்கும் பில என்றார் அடுப்பிற்கு அருகில் வந்து பார்த போது தின்ணையில் நான் கஞ்சி குடித்த பத்திரம் முக்காலி மேல் கிடந்தது.தங்கப்பன்  பார்த்தான நான் மீண்டும் கட்டிலில் போய் சுறுன்ன்டு படுத்து கொண்டேன்.சிறிது நேரத்தில் யாஉம் சத்தம் ரோ உடலை உலுக்குவது வது போல் கேட்டது.கண்விழித்து பார்த்தேன் தங்கப்பன் எழுப்பினான்.அதர்குள் வேறு கைலி கழுத்தில் துண்டில்லை நான் மெல்ல எழுந்து இப்ப தான சாப்பிட்டேன் எண்றேன் தங்க்கப்பன் நான் இப்பதான் கஞ்சியே இறக்குறேன் அதற்குள் நீ எங்க பிலா சாப்பிட்ட எண்ரான் ,மழ நின்னுருச்சா என்றேன்.எந்த மல குரிசு மல அங்க தான் நிக்கு …என்றான் நான் ஒன்று ம் புரியாமல் விழித்தேன் வெளியே சென்ற தங்க்கப்பன் வெளியில் பாடும் சத்தம் கேட்டது
……………………………………………

நான் வெளியில் சென்ற போது என்னைபார்த்து சத்தமாக பாடத்துவங்கினான்
தேவன் கோயில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
இந்த இரு வரியை மீன்டும் மீண்டும் பாடி விட்டு
பின்னர் மெல்ல இனியோரு பாட்டு பாடத்துவங்க்கினான்  

பள்ளி வாக பத்ர வட்டவம் கையிலேந்தி தம்புராட்டி
நல்லச்சண்ட திருமுன்பில் நிந்து களி களிச்சுடுந்து
இதை பாடிக்கொண்டிருக்கும் போதே மெல்ல அடுத்த பாட்டு
 
உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கியிலே
அள்ளி அணைத்திடவே எனக்கும் ஆசை பெருகுதய்யா
கண்கொண்ட தெய்வம் ஐயா நீ எந்தன் கலியுக வரதனய்யா

தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை
கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை

என்னால் இதற்கும் மேல் பொறுக்க முடியவில்லை என்ன தங்க்கப்ப நாய் வாய் வச்சமாறி ஏன் இப்பம் இப்டி கொதறுற .ஒரு பாட்ட முழுசா பாடத்தெரியாதா என்றேன்

எல்லாம் கேட்டு படிக்கது தான பிலா என்றான் .எங்க்கின கேட்டு படிஹ்தீரு!!
ஊர்ல நம்ம முதளாலி குடி பக்கம் தான பகவதியம்மை சேத்ரம்.அங்க வேலை செய்யும் போது அப்படியே கேட்டு பாடவேண்டியது தான் என்ரான்

முதலாளி வீட்லலெல்லாம் வேல செஞ்சிருக்கியா…..நாம தன பில்ல அங்க்க ஆஸ்தான வேலைகாரான் .எப்ப முதலாளி ரெண்டாந்த்ரம் கட்டினாரோ அப்ப வந்தது எனக்கு ஏளரச்சனி .பின்ன என்னாலா அங்க தங்க முடியவில்லை .ஏன் தங்கப்பா அவ்வளவு மோசாமான பொண்ணா அவங்க என்றேன் .அது ஒரு யட்சியாக்கும் பிலா காட்டு யட்செ போ தங்கப்பா உணக்கு எந்த பொன்ன பாத்தாலும் ஒரு யட்சி…..பிலா உம்மையில அவ யட்சியாக்கும் இல்லாட்டு நல்லா சிம்ஹம் போல இருந்த முதளாலிய இப்டி பிடிச்சு கேரி இப்டி வட்டாக்கியிருப்பாலா… என்னா தங்கப்பா முதலாளி வட்டா எண்றென் ஆமா பிலா தனியா எங்கயும் மாட்டிரதா அவன் கிட்ட என்றான்.தங்கப்ப காலைல நான் குளிமுரி விட்டு வெளிவந்தப்ப அவர பார்த்தேன் எனக்கு நேரே தோக்கு நீட்டி சுடப்பாத்தாரு என்றேன் .தொக்கு நீட்டி சுடப்பாத்தாரா ,..ஆமா தங்க்கப்பா பின்ன நான் கீழ குதிசோடி குளத்துக்கு கீழே ஒளிஞ்சுகிட்டேன்
என்று சொல்லிய்விட்டு லேசாக நாக்கை கடித்தேன் பின் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை தங்க்கப்பன் அப்படி அமத்தியாக இருப்பது என்னுள் பயத்தை கிளரச்செய்தது. நான் மெல்ல அவனிடம் சென்று தங்க்கப்பா அப்ப நான் மெல்ல மேலெரி டேங்கிற்கு வந்தென் என்றேன் தங்கப்பனின் பார்வை என் முகம் நோக்கி இருகியது நான் மெல்ல கஞ்சி பஹ்திரஹ்தாய் தூக்கிக் கொண்டு அடுப்பிற்கு கொஞ்சம் பின்னாள் இருந்த சுவரில் நின்று கஞ்சியை உறிஞ்சட்த்துவங்க்கினேன் ……………………………. ஒத்தையடி பாதை மலயேற்றத்தை இதற்கு முன் அவன் அறிந்திருக்கவில்லை ஓவ்வொரு அடி வைக்கும் போதும் காலுடன் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. கூட வந்தவர்கள் முன்னால் உற்சாகமாக பேசிக்கொண்டு மலையேறிக்கொண்டிருந்தார்கள்.பேச்சு பெரும்பாலும் பெண்களைப்பற்றியது தான்.மலையாலத்தில் பேசியதால் அவர்களின் சொலவடைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.அரைகுறைகளாகத்தான் புரிந்து கொண்டான்.அத்வே அவனுக்குள் கற்பனையை விரித்தது.அவர்கள் உடன் செல்வது கூச்சமாக இருந்ததால் செற்று பின்னேயெ நாடந்தான் .கீழே அவர்கள் எல்லோரும்  வந்த ஜீப்பாதை  மலைப்பாம்பை பெட்டியில் அடைத்தாது போல் வளைந்து கிடந்தது.கெண்டைக்கால் சதை இரண்டும்கெட்டிப்பட்டு நரம்புகள் புடைத்து வலி தெரித்தது கயை வைத்து சதையை தட்டி விட்டுகொண்டான் பள்ளியில் ஒட்டபோட்டியில் ஓடும்போது கால் வலிகு மருந்தாக அவன் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த வழிமுறை அது ,மெலே ஏறிக்கொண்டிருந்தவர்களின் கெண்டைக்கால்கலைப்பார்த்தான்.விளைந்த பப்பாளிப்பழத்தின் பின்பக்கத்தை போல் இருந்ததில்  நரம்புகள் பச்சைபாம்புகள் போல் புடைத்து வெளித்தெரிந்ததன.பேச்சு சுவரசியத்தில் வனை யாரும் கண்டு கொண்டதாகவெ தெரியவில்லை துரம் போய்விட்டவர்களை பிடிக்க ஒடினான் உடல் முழுவதும் வலி முதிர்ந்து தினவாக மாறத்தொடங்க்கியது.வலியை ஒரு கட்டத்தில் அவன் விரும்பினான்.அவர்கள் அருகில் செல்லும் முன் மூச்சிரைக்க துவங்கியது இடப்பக்கம் சென்ர மேஸ்திரியை ஒட்டிச்சென்றபோது தான் அவர்களின் பார்வை முதன் முதல்லக அவன் மேல் பட்டது,குஞ்சுமோன் தான் ஆரம்பித்தார் எந்தட செறுக்க பணி கூடுதலானொ,அவர் கேட்டவுடன் கூடியிருந்தவர்கள்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர் ,அவனுக்கு என்னவொ போல் ஆகிவிட்டது..இருபுறமும் வல்ர்ந்திருந்த உண்ணிச்செடிககலின் கருத்த பழங்க்கலை பரித்து வாயில் போட்டுகொண்டு.ஒரு துண்டு தேன்கூடைப்போன்ற அதன் பூவைப் பறித்து வாயில் உரிஞ்சினான்.லேசான துவர்ப்புடன் கூடிய இனிப்பு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது,குஞ்சுமோன் மேஸ்திரி இம்முறை மெதுவாக தோளில் கை போட்டு காதை அணத்து கேட்டார் என்ன தம்பி பசிக்குதா?அதை யாரும் கவனித்தது போல் தெரியவில்லை அவர்கள் உற்சாகமாக சந்ராவைப்பற்றி பெசிக்கொண்டு போனர்கள்.அவன் அவர் முகட்த்தை ஒரு முறை பார்த்து விட்டு இல்லை என்பது போல் தலையாட்டினான் இதோ குளம் வந்து இன்னும் கொஞ்சம் தூரம் தான் என அவனை சாமாதானப்படுத்தினார்.சுற்றிலும் க்ருங்கற்களால் அடுக்கப்பட்டு ஒரு நீள் செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்த குளத்தை அவன் முதன் முறையாக காண்கிறான்.குலத்தில் வெள்ளம் பாத்திரத்தில் பிடித்த வெள்ளம் போல நிறைந்து தழும்பாமல் கிடந்தது.காற்றின் தன்மைக்கேற் ஈட்டி மரத்திலிருந்தும் ,கருங்க்காலி மரத்திலிருந்தும் விழுந்த இலைகள் குளத்திற்கு அழகு சேர்த்தன.தூரத்தில் தெரிந்த தகரகொட்டகைக்கு அருகில் அண்களும் பெண்களுமாய் ஆட்கள் குவிந்திருந்தனர்.புதியவனின் வருகை அறிந்து தங்களுக்குல் ஏதோ பேசிக்கொண்டர்,நெருங்கி வரவர சத்தம் அதிகமாகியது,வர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுகொண்டிருப்பது போல் தோண்ரையது கஞ்சுமோன் மேஸ்திரியப்பார்த்ததும் சத்தம் குறைய ஆரம்பித்தது ……………………..

தங்கப்பனை அங்கு தான் அவன் முதன் முதலாகா பார்த்தான் தலையில் ஒரு சிவப்பு துண்டை கட்டிக்கொண்டு காலையிலேயே வாசல் முற்றத்தில்.குழி வெட்டிக்கொண்டிருந்தான்  குஞ்சு மோன் மேஸ்திரியைப் பார்த்ததும் வேட்டியை இறக்கி விட்டுக்கொண்டு ஓடி வந்தான். மேஸ்திரி அவன் முகத்தை பார்த்து என்ன தங்க்கப்பா  ராவிலே நல்ல பூக்குற்றி பணியானல்லோ என்றார் சும்மா ஒரு தை கொண்டுவந்தேன் அதை நட்டு வைக்க மேஸ்திரி என்றான்.பின் தான் தங்க்கப்பனோடு என்னுடைய அறிமுகம் தங்கப்பா இதானு ஆளு குறைச்சு காலம் இவிடே கழியட்டே பணியக்கே படிபிச்சு கொடுத்தோ என்றார் இரண்டு நாட்களுக்குள் குஞ்சுமோன் மேஸ்திரி மலையிலிர்ந்து கீழிறங்க்கி விட்டார் .பின்னர் தங்கப்பன் தான் எனக்கு எல்லாவற்றையும் சொல்லிக்கொட்த்தான் ..இனி வரும் கா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்வு (சிறுகதை)

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்