குரோதத்தின் ஆப்பிள்கள் சிறுகதை (மலையாளம் ) சோனியா செரியன்
எப்ரல் மாதம்....இமயத்தின் சரிவுகளில் பனி உருகி செடிகள் பூ பூக்கத் துவங்கும் காலம். குளிர்காலத் துவக்கத்தில் தாழ்வாரங்கள் தேடிப்போன பறவைகள் பல மலைகளைக் கடந்து மலை உசிக்கு திரும்ப தொடங்கியிருக்கிறது. மழைச்சரிவில் கட்டப்பட்டிருக்கிற ராணுவ மருத்துவமனையின் வளாகம் முழுவதும் பீச், பிளம், ஆப்ரிகோட் மரங்களால் நிரம்பியிருக்கிறது. எதோ ஒரு காலத்தில் யாரோ சிலர் நட்டு வைத்து வளர்த்தியாவை...சென்ட்ரல் செக்சன் பல் மருத்துவமனையின் முன்னாள் இருக்கும் பிளம் மரம் அடி முதல் நுனி வரை பூத்து குலுங்குகிறது. மயக்கும் நறுமணம். தேனீக்கள், பட்டாம் பூச்சிகளின் கலவரம்.. திங்கள் கிழமை கூட்டமான ஒரு (ஓ பி டி) முடித்து விட்டு நானும், முருகனும், திருவேதியும் வாசலில் இருந்த பிளம் மரத்தின் பூங்கொத்து ஒன்றைப் பிடித்து பிய்த்து மேஜை மேல் வைத்து அதனை செதில் செதிலாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். ரெட்கிறாஸ் சின்னமிட்டிருன்த பழைய பூச்சட்டி ஒன்று தேய்த்து கழுவி மினுக்கி தண்ணீர் நிறைத்து மேஜை மேல் வைக்கப்பட்டிருந்தது... வழக்கமில்லாமால் ...