அஞ்சலை நாவல் ஒரு பதிவு
கண்மணி குணசேகரனின் அஞ்சலை நாவலை இரண்டாவது முறையாக படித்து முடித்தேன். பொதுவாக இயல்புவாத படைப்புகள் பெரும்பாலும் வாசிப்பு சுவாரசியம் குறைவானதாகவும் கதைகூறலே பிரதானமாக இருக்கும். ஆனால் அஞ்சலையை ஒவ்வொரு பக்கத்தையும் விருவிறுப்பாகவும் கண்ணீரும் கம்பலையுமாக படித்துமுடித்தேன் தமிழில் நவீன இலக்கியத்தில் ஒரு பெண் கதா பாத்திரம் எப்படி இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்ப்படுத்தியது என்பதை நினைத்து பார்க்கும் போது ஆச்சரியமாய்! இருக்கிறது. என்னளவில் நான் படித்த தமிழ்நாவல்களில் மிகச்சிறந்த பெண் கதா பாத்திரம் கொண்ட நாவல் என்றால் அஞ்சலை தான். “புகைய ஆரம்பிப்பதற்கு முன்பே அணைத்துவிடாலாம் என்று தான் பாக்கியம் நினைத்தாள்.” என்ற வரியில் நாவல் துவங்குகிறது ஆம் எல்லா அம்மாக்களும் தங்கள் பெண் பிள்ளைகளைப்பற்றி அப்படித்தானே நினைக்கிறாள்! இதனை படித்தவுடனே ஒரு வயது பெண்ணின் கதை இது என தோன்றிவிடுகிறது அஞ்சலையும் ஆண்டை மவனையும் பற்றிய பேச்சு புகைய ஆரம்பித்ததும்.அஞ்சலைக்கு தீவிரமாக பெண் தேடுகிறாள் தாய் பாக்கியம். பாக்கியத்தின் தம்பி (அஞ்சல...
கருத்துகள்
கருத்துரையிடுக