தேர்வு (சிறுகதை)
அன்று கடைசி தேர்வு இனி அரியர் வைத்தவர்கள் தான் தனியே வந்து தேர்வெழுதவேண்டும் .மற்றபடி இறுதியாண்டின் இறுதித்தேர்வு முடிந்துவிட்டது. வழக்கமாக வெளிவந்தவுடன் .கேள்வித்தாளை நுண்ணாய்வு செய்யும் வேணி கூட அன்று கண்ணாடியை கையில் கழட்டி அவளில் நீண்ட கண்களை குட்டையான டர்க்கி கர்ச்சிப்பால் ஒத்திக்கொண்டு சுவற்றில் சாய்ந்திருந்தாள். ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியவரை தேடிக்கொண்டிருந்தார்கள் .இவனை அரித்துக்கொண்டிருந்த கேள்விக்கு இன்று ஒரு முடிவு தெரிந்தாகவேண்டும் இனி அவளைப் பார்ப்பது என்பது அரிடதினும் அரிதான காரியம் இன்றே ,என்ன சொல்கிறாய் என்று கேட்டுவிட வேண்டும் அவள் சம்மதித்தால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தீர்மானமாக இன்று முடிவு செய்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டான் அவன் .நண்பர்கள் பெண்களிடம் நம்பர் ,அட்ரஸ்,எப்ப போன் பண்ணலாம் என்ற விபரங்களை வாங்கிக் கொண்டு பேக்கில் இருந்த பாட்டில்கள் டங் டங்க்என ஆடஆதை இருக்கி பிடித்து அணைத்துகொண்டு வெளியில் சென்றனர். சிலர் வெளியேர மறுத்து மூன்று வருடம் பேசித்தீராததை மூன்று நிமிடங்களில் பேசிவிட முடியும் என்று பேசிக...
கருத்துகள்
கருத்துரையிடுக