பப்ளிமாஸ் மரம்

 பப்ளிமாஸ் மரத்தடிக்கு முத்து வந்து நின்று அரைமணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்னும் ஜீப் வண்டி வரவில்லை. காலையில் இங்கு சரியாக ஏழைரை மணிக்கு நில் என்றுதான் மரம் வெட்டு ஜேம்ஸ் சொன்னார். சரியாகத்தான் நிற்கிறோமா என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தி உறுதிபடுத்திக் கொண்டான் முத்து.  வேறு ஏதும் இடத்தைச் சொல்லியிருப்பார்களா.. என அவனுக்கு தோன்றிய சந்தேகத்தை நீக்க அவனுக்குள்ளேயே முயற்சி செய்தான். 


காலையில்  எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அவனைத் தாண்டிச் சென்றார்கள். முகம்  தெரிந்தவர்களைப் பார்த்ததும் அவர்களை சற்று  பார்க்காதது போல நின்று கொண்டான். 


பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் விஸ்ணுவும் அம்முவையும்  பார்த்தவுடன் சற்று பதட்டமானவன் அவர்களைப்  பார்க்காதது போல் திரும்பி நின்றான். 


இவனை சரியாக கவனித்த விஸ்ணு எந்தாடா  பணிக்கிறங்கியோ? 


ஸ்கூலில் போகுண்ணில்லே என்றான்.


அம்மு இவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு பப்ளிமாஸ் மரத்தை பார்த்தாள். அவளது புன்னகையின் அளவு கூடியது.


மெல்ல முத்துவை பார்த்துக் கொண்டே நடந்த அம்மூவை


 விஸ்ணு நடக்கடி சமையவாயி என்றான். 


விஸ்ணூ முன்னாள் நடக்க அம்மு  முத்துவை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே சென்றாள்.


அவளது ரெட்டைச்சடை ஆடி ஆடி போவதைப் பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது. 


கடந்த கோடையில் பப்ளிமாஸ் மரத்தடியில் நடந்த சம்பவம் அவனுக்கு நினைவு வந்தது. விஸ்ணு, விசாக், அம்மு இவன் எல்லாம் கிரிக்கெட்  விளையாடிவிட்டு ப்ப்ளிமாஸ்  மரத்தின்  அருகில் வந்தார்கள்.


விஸ்ணுவும் விசாகனூம் மரத்தில் ஏற இவனும் அம்முவும் கீழே நின்றார்கள். விஸ்ணு மரத்தின் உச்சி வரை ஏறி நல்ல பெரிய பெரிய பப்ளிமாசுகளைப்  பறித்து கீழே போட்டான். அம்முவும் இவனும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போய் கையாலைக் கட்டின் மேல் வைத்தார்கள். விஸ்ணு எல்லா பப்ளிமாசும் பறிக்க முயற்சிக்கும் போது  

விசாகன் தன்னை ஒரு சக்திமானாக நினைத்து மரத்தில் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தான். மரத்தில் இருக்கும் ஏறும்பு புற்றை எப்படியோ அவன் தட்டி விட பறவை எறும்புகள் மரத்தில் பறக்கத்  துவங்கியது. 


விஸ்ணு அவனைத் திட்டிக் கொண்டே கீழே இறங்க அவனுக்குப் பின்னால் விசாகனும் தாவி இறங்கினான். இருவரும்  கீழே இறங்குவதற்குள் எறும்புகள் பறக்காத துவங்கின.  முத்துவும் அம்முவும் கையில் வைத்திருந்த பப்பிலிமாசை கீழே போட்டுவிட்டு ஓடிச்சென்று தள்ளி நின்று கொண்டார்கள் . 


 விசாகனின் கண்ணத்தில் ஒங்கி அடித்தான் விஸ்ணு. கீழே கிடந்த பப்ளிமாசை தூக்கி விஸ்ணுமேல் விசாகன் எறிந்த போது அது அவன் மேல் பட்டாமல் அருகிலுள்ள பள்ளத்தில் சென்று விழுந்தது.  விசாகன் ஓடிப்பிடிக்க முடியாத தூரத்தில் நின்று கொண்ட விஸ்ணு அம்முவைக் கூப்பிட்டான் ..


அம்மு கையிலிருந்த ப்ளிமாசை கீழே போட்டுவிட்டு விஸ்ணுவிடம் ஓடினாள் விசாகன் அழுது கொண்டே  அம்மாவிடம் சொல்வதற்காக  வீட்டிற்கு ஓடினான்.  முத்து தன் கையில் இரண்டு பப்ளிமாஸுகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் அதான் பின்பு இப்போதுதான் முத்து இங்கு வந்து நிற்கிறான்.  


அவர்கள் பறித்துப் போட்ட ப்ளிமாஸ் எதுவும் அங்கு கிடக்கிறதா எனப் பார்த்தான் எலி கொறித்துப் போட்ட சில கடித்த பப்ளிமாஸ் தோல்களும் விதைகளும்  மட்டும் கிடந்தன.  


முத்து அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஜேம்சின் ஜீப் வந்தது. முத்து பின் பக்கமாக ஏறிக்கொண்டான்.  வண்டியில் இருந்தவர்களெல்லாம் புதியவர்கள். அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்த  முத்து அந்த பப்ளிமாஸ் மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அம்மரம் அவனைவிட்டு அகன்று அகன்று சென்று கொண்டே இருந்தது. வண்டி ஒரு வளைவில் திரும்பும் போது அம்மரம் அவனை விட்டு மறைந்தே போனது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேர்வு (சிறுகதை)

அஞ்சலை நாவல் ஒரு பதிவு

கோட்டையை திறப்பதற்கான சாவி- வாசிப்பது எப்படி நூல் வாசிப்பனுபவம்