தனிமையின் பத்து வருடங்கள்
நண்பர்களுக்கு வணக்கம். இதை வாசிக்கும் நீங்கள் அடையப்போவது என்னவென எனக்குத் தெரியவில்லை . இந்த நாவலுக்கு (அ) கட்டுரைத் தொடருக்கு (அ) டைரிக்குரிப்பிற்கு எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளுங்கள் மேற்கண்ட தலைப்பில் நான் கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்வில் நடந்தவற்றைத் தொகுத்து எழுதப் போகிறேன். அது ஒரு கட்டுரையாக இருக்கலாம் அல்லது நினைவுக் குறிப்பாக இருக்கலாம். அல்லது ஒரு புனைவாகக் கூட இருக்கலாம். எனது கதையை ஏன் நீங்கள் கேட்கவேண்டும்? வாழ்க்கையில் எவ்வளவோ செய்வதற்கு இருக்கும்போது இதையேன் படிக்கவேண்டுமென நீங்கள் கேட்கலாம் . இதற்கு என்னால் உறுதியாக எந்த பதிலும் அளிக்க முடியாவிட்டாலும் எனக்குள் இருக்கும் உங்களை நீங்கள் சிறிதளவு கண்டு கொள்ளலாம் என்றுமட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் எழுத என்ன வயசாகிவிட்டதா? 27 வயது. ஓடுகிற வயது. வென்றெடுக்க வேண்டிய வயது. இந்த வயதில் ஏன் இப்படியொரு சுய சரிதை என நீங்கள் கேட்கலாம். வயது சிறிதென்றாலும் ஒரு பெரும் வாழ்க்கை அனுபவம் இருக்கிறது. அவற்றை எழுத வேண்டுமென தோன்றுகிறது. எது என் நினைவில் நிற்கிறது? அதன் மூலம் என்னை நான் புரிந்து கொள்ள முயல...