மனிதன் பூச்சியாக மாறுகிறான் காப்காவின் உருமாற்றம் நாவலை முன்வைத்து
ஒரு நாள் காலையில் எழும்போது உங்களுக்குத் தெரிகிறது நீங்கள் ஒரு கரப்பான் பூச்சியாக உருமாற்றம் அடைந்திருக்கிறீர்கள். அப்போது என்னவாக இருக்கும் உங்கள் மனநிலை? எப்படியிருந்தாலும் அது நீங்கள் நினைப்பதற்கு அப்பால்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . இந்த ஊகத்தோடுதான் அனைவரும் காப்காவின் உருமாற்றத்தை வாசிக்கத் துவங்குவார்கள
பிரான்ஸ் காப்கா 1883 ஆம் ஆண்டு பெருநாட்டில் பிறந்தார் என்றாலும் அவர் கதைகள் எழுதியுள்ளது ஜெர்மன் மொழியிலாகும். சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற அவர் அரசின் காப்பீட்டுத் துறையில் வேலை செய்தார். தொழிளாலர்களிடம் கூடுமான்வ்வரை கருணையுள்ளவராகவும் அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருபவராக இருந்தார். எப்போதும் தனிமையில் வாழ்ந்தார். அவர் ஆளுமையின் ஒன்றாகவே தனிமை அவரிடம் கு டி கொண்டிருந்தது. அத்தோடு காசநோயும் ஒரு எழுத்தாளனின் கொந்தளிப்பும் சேர்ன்து கொண்ட போது தான்பைத்தியக்கார நிலையின் விளிம்பில் அலைத்து கொண்டிருபோதாக அவருக்குப் பட்டது.
அவரைடய பல படைப்புகளும் அவருடைய மரணத்திற்கு பின்புதான் வெளியிடப்பட்டது. தன் இறப்பிற்குப் பின் தன் படைப்புகளை எரித்துவிட வேண்டுமென தன் ஆத்ம நண்பரான மாக்ஸ் பிரடிடம் சொல்லி ச் சென்றார் ர் காப்கா.
ஆனால் நண்பனையும் அவன் உணர்வுகளையும் புரிந்து கொண்ட அவர் காப்காவின் நூல்ளை பிழை திருத்திப் பதிப்பித்தார். அவ்வாறு தான் காப்காவின் விருப்பத்தை மீறி அவருடைய படைப்புகள் நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. காப்காவின் இலக்கியங்களை வா சி ப் பவர் களுக்கு கவலையும் தனிமையும் இணைந்த ஒரு மனநிலைதான் எப்போதும் ஏற்படும்.
கருணையில்லாத உலகத்தில் மனிதனுக்கு ஏற்படும் தோல்விகள் அவனை மேலும் மேலும் துன்பமடையக் கூடிய சித்திரங்கள் தான் அவருடைய படைப்பில் காணப்படுகின்றன. நம்பிக்கைகள் ஏமாற்றமாக மாறுவதும் முயற்சிகள் தோல்விகளாவதும் பிரிக்க முடியாத அளவுக்கு அவருடைய படைப்புகளில் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. அத்தருணங்கள் வெளிப்படும் தருணங்களாகட்டும் சாதரணம் எனச் சொல்லத்தக்க அன்றாட நிகழ்வுகளாக இருக்கிறது. அன்றாடத்திலிருந்து எவ்வளவோ தூர த் தி லி ரு க்கும் மாயத்தோற்றங்கள் தான் அந்த அன்றாட நடைக்கு உருவம் அளித்திருக்கிறது என்பதை அறியும் எவரும் அற்புதப்பட்டு போவார்கள் எளிய வாக்கியங்கள் நிகழ்வுகள் மூலம் குழப்பமான மற்றொரு உலகை காட்டுவதுதான் அந்த எழுத்தின் இந்திரஜாலம்.
மேற்சொன்ன குணங்கள் அனைத்த காப்காவின் உருமாற்றம் என்ற கதையில் கலந்திருக்கிறது.
"கிரிகர் சம்சா ஒரு காலைவேளையில் உறக்கத்தை கெடுத்த ஒரு கனவிலிருந்து எழுந்தபோது தான் பெரிய ஒரு கோர உருவம் கொண்ட பூச்சியாக மாறி படுக்கையில் கிடக்கிறான்"
இந்த ஒரு வாக்கியம் மூலம் கதையின் மையத்தை காப்கா உருவாக்கி காட்டி விடுகிறார். எளிமையானதும் தெளிவானதுமான அந்த வாக்கியம் நம்முடைய உணர்வு மண்டலத்தைப் பற்றிப் பிடிக்கவும் சாத்தியமற்ற நிகழ்வுகளை விளைவுகளை சாதரண விசயங்களின் தொடர்ச்சியாக நம்மை கான வைக்கிறது.
இந்த விவரிப்பிக்குப் பின் பூச்சியின் தோற்றம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. விற்பனைப் பிரதிநிதியான கிரிகொர் சம்சா எப்படி படுத்துக் கிடக்கிறான் எனப் பாருங்கள்.
கவசம் போன்ற கட்டியான புறப்பகுதி மல்லாந்து படுத்துவ்கிடக்கிறான் அவன் தலையை சற்று தூக்கிப் பார்த்தபோது அவனால் தன் தவிட்டு நிறத்திலுள்ள உருண்டை வயிற்றைப் பார்க்க முடிகிறது அது நுழைவு வாயில் போன்று வளைந்த தண்டுகளாக பிளவுபடுத்தப் பட்டிருந்தது. அதற்கு மேலிருந்த போர்வை சரிந்து விழுவதுபோலிருந்தது. மொத்த உடலையும் சுற்றி பரிதாபமாக கிடந்த கால்கள் அவன் முன்னல் துடித்துக் கொண்டிருந்தது.
வண்டாக மாறிய கிரிகர் சம்சாவின் உருவத்தை எவ்வளவு தெளிவான வார்த்தைகள் கொண்டு வரையறுத்திருக்கிறார். அது எந்த வகையான வண்டு என விமர்சகர்கள் சர்ச்சை செய்கிறார்கள். கதையில் ஒரு இடத்தில் மட்டுமே இதைப்பற்றிய குறிப்பு இருக்கிறது. அந்த வீட்டிற்கு சுத்தம் செய்யவரும் பெண் அவனை சாணி வண்டு என்று அழைப்பது குறிப்பிடப்படுகிறது. என்றால் அந்த உருவத்தை விமர்சிப்பதற்காக அவற்கள் சொல்லும் ஒரு பேராககக் கூட அது இருக்கக்கூடது என்றுமில்லை.
அது என்ன வண்டாக இருக்கட்டும் அதைத் தெரிந்து கொள்வது அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட காரியம் அல்ல . நமக்குத் தெரியவேண்டியது இந்த உருமாற்றத்திற்கு எதிராக கிரிகர் சம்சா எவ்வாறு எதிர்வினையாற்றினார் என்பதைத்தான். கிரிகொருக்கு பெரிய பயம் ஒன்றும் இருக்க வில்லை !
கதையில் இவ்வாறு வருகிறது
எனக்கென்ன நடந்தது? இது கனவல்ல என அவன் நினைத்தான்..அவ்வளவுமட்டும் நினைத்துப் பார்த்துவிட்டு அவன் தன் அறையை சுற்றியும் ஒரு முறை பார்க்க மட்டும் செய்தான். தனிமை நிறைந்த தன்னுடைய பழைய அறை மட்டும்தான். அதிலிருக்கும் சாமங்கள் எல்லாம் அந்த பழைய இடத்தில் தான் இருந்தது.
அவன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான் ...
மேகம் நிறைந்த வானம் அவனை மனச்சோர்வுக்குள்ளாக்கியது. இன்னும் சிறிது நேரம் கூட உறங்கலாமா என அவன் நினைத்தான். ஆனால் உரக்கம் கலைந்து விட்டிருந்தது.
மெல்ல அவனது சிந்தனை அவனுடைய வேலையைப் பற்றியதாக மாறியது.
கடவுளே....எவ்வளவு கேவலமான வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். நிரந்தரமான பயணங்கள் நேரம் தவறிய உணவு, நண்பர்களுடைய குறைகள் இதெல்லாம் இந்த வேலையின் பகுதியாய பிரச்சனைகள். அதையெல்லாம் நினைத்து சலிப்படைந்து கொண்டிருக்கும் போது அவனது அம்மா கதவைத் தட்டி கூப்பிடுகிறார்.
கிரிகர் மணி 6.45 ஆகிறது இந்த வண்டிக்கு நீ போகவேண்டாமா?
அதற்கு பதில் சொல்லத் துணிந்த போதுதான் தனக்குள் இருந்த இன்னொரு மாற்றம் கூட அவனுக்கு தெரிந்தது. அவனது குரலின் பின்னிலிருந்து கரகரக்கும் குரல் ஒன்று ஒலித்தவாறு இருக்கிறது...மற்றவர்கள் அவனோடு பேசுவது அவனுக்கு புரிகிறது என்றாலும் அவன் சொல்வது மற்றவர்களுக்கு புரியவில்லை என்கிற நிலை அவனுக்கு உருவாகிறது.
இது ஒரு பக்கமிருக்க அந்த வீட்டின் நிலை தொடர்ச்சியாக விவரிக்கப்படுகிறது . அவனைத் தேடி அவனது அலுவலக மேலாளர் வருகிறார். அவனுடைய தந்தை அவருடன் பேசுவதைக் கேட்கிறான்.
சார் அவனுக்கு உடம்பு சரியில்லை
என்னை நம்புங்கள். அவனுக்கு எப்போதும் வேலையைப் பற்றித்தான் சிந்தனை வேறு எந்த சிந்தனையும் அவனிடம் இல்லை. மாலையில் கூட அவன் வீட்டை விட்டு வெளியில் செல்ல இறங்குவதில்லை! அது எனக்கு கவலை அளிக்கிறது. கடந்த எட்டு நாட்களாக வீட்டிற்கு வந்தால் அவன் உட்கார்ந்தே இருக்கிறான் அவன் செய்கிற ஒரே வேலை படம் வரைவது மட்டும்தான்.
கிரிகர் சம்சாவைப் பற்றி அவர் தந்தை சொல்லும் இந்த வார்த்தைகள் காப்காவுக்குப் பொருந்தும் . படம் வரைவதுதான் எனச் சொல்லும்போது தனை இலக்கிய உருவாக்கத்திலுள்ள அபரிமிதமான ஆவேசத்தை குறிப்புணர்த்துகிறது என்பதை புரிந்து கொண்டால் போதும். கிரிகரின் மீது அதிக அன்பும்பரிதாபமும் காட்டக் கூடியது அவளுடைய சகோதரியாகும். அம்மாவுக்கும் அவளது நிலையில் வருத்தம் உண்டு. ஆனால் அவனது அப்பா அவன் மேல் எப்போதும் கோபத்தைதான் காட்டியிருக்கிறார்.
கதவைத் திறந்து கிரிகரைப் பார்த்தபோது அவர்களெல்லோரும் பயந்து போய்விட்டனர். மிகப்பெரிய பூச்சி அவர்கள் எவ்வாறு பயப்படாமல் இருப்பார்கள்? ஊர்ந்து ஊர்ந்து நகரும்போது அருவருக்கத்தக்க ஓரு திரவம் அவன் பின்னாலிருந்து வழிந்தது. அருகிலிருக்கும் இடமெல்லாம் அது கறைபிடித்தது சிறிது தூரம் கடந்த போது அவன் சோர்ந்து போய் விட்டான் பின்னர் அவ்வாறே உறங்கிவிட்டான்.
உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன் மாலையாகிவிட்டது. தப்பித் தவறி ஒவ்வொன்றாக தொட்டுப் பார்த்துக் கொண்டு அவர் நகர்ந்தார். இரண்டு கால்களில் நொண்டி நொண்டி அவர் நடந்தார் அவனுடைய படுக்கை சோபாவின் அடியிலாக மாறத் துவங்கியது. சாதாரண வகை உணவு ஒன்றுமவனுக்கு வேண்டாம். பழையதும் அழுகியதுமான காய்கறிகள், இரவு உணவில் எஞ்சிய மசால புரண்ட எலும்புத் துண்டுகள் பாலடைக் கட்டி முதலியவற்றிலவன் சுகம் கண்டுபிடித்தான். அவயெல்லாம் ஒரு பூச்சிக்கு பிடித்த உணவுதான் அவற்றையெல்லாம் பழைய ஒரு பாத்திரத்தில் தரையில் விரித்துதான் அவன் சாப்பிடுவான்.ஈரத்துணியிலிருந்த நீரை உறிஞ்சிக் கொள்வான்.
வீட்டிலிருந்தவர்களெல்லாம் அவனுடைய உருவ மாற்றத்திற்காகவும். அதன் மூலம் உருவான வாழ்க்கை மாற்றத்திற்காகவும் வருத்தப் பட்டார்கள். அவர்களுடைய துன்பம்ம் தொடர்ந்து அவர்களுக்கு அவமானமாக மாறியது. சமூகத்தின் முகத்தை எப்படிப் பார்ப்போம். அந்த நிலை அவர்களுக்கு கோபத்தை உருவாக்கியது. தங்களை இவ்வாறு அவமதித்த கிரிகரை அவர்கள் கோபத்தோடு பார்த்தார்கள். அப்போது அவர்களது சிந்தனை ஒன்றைப் பற்றி மட்டும்தான் யோசித்தது அந்த மனிதப் பூச்சியை எவ்வாறு ஒழிப்பது என்பது மட்டும் தான் அது.
ஆனால் கிரிகர் தன் வீட்டிலிருப்பவர்களின் நலனைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தான். தன் மூலமவர்களுக்கு பிரச்சனை ஒன்றும் நிகழ்ந்து விடக் கூடாது என்றும் தானில்லா விட்டாலும் அவர்களுக்கு சுகமாக வாழ்ந்து போவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் இதுதான் அந்நேரம் அவனுடைய சிந்தனையாக இருந்தது. அதே நேரம் சுய வெறுப்பாலும் துன்பத்தாலும் அவன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு மாத காலம் அந்த வாழ்க்கை தொடருகிறது. அப்போது ஒருநாள் அவனுடைய தந்தை அவனை ஆப்பிள் கொண்டு எறிகிறார். எப்போதும் இரக்க உணர்வோடு பார்த்து விட்டுப் போகும் சகோதரிக்குக் கூட அவன்மேல் வெறுப்பு உண்டாகிறது. அந்த வீட்டில் யாருக்கும் நிம்மதி இல்லையென்றானது. ஒரு நாள் அதெல்லாம் நின்றது. சுத்தம் செய்பவள் கிரிகரின் அறைக்குள் வந்த போது அவன் உணர்வில்லாமல் கிடந்தான். அவள் நீண்ட பிடியுள்ள ஒரு குச்சியை வைத்து அவனுக்கு கூச்சம் காட்ட முயற்சித்தாள் அதற்கு எந்த எதிர்வினையும் இல்லாததால் அவளுக்கு நிலை கொள்ள முடியவில்லை அவள் பின்னர் மெதுவாக அவனை குத்திப் பார்த்தாள் பின்னர் மெதுவாக தள்ளியபோது கொஞ்சம் கூட சக்தி இல்லாமல் அது மெல்ல நகர்வதைப் பார்த்தாள் அவளுக்கு மெதுவாக சந்தேகம் தோன்றியது. தற்போது மெல்ல உண்மை நிலை அவளுக்குப் புரிந்தது. சுத்தம் செய்பவள் உச்சத்தில் சத்தம் போட்டுச் சொன்னாள் இங்க பாருங்க அது செத்து போயிருச்சு... செத்து விரச்சு போயிருச்சு...
அதோடு விவரிப்பு குடும்பத்தில் இருப்பவர்கள் மேல் திரும்புகிறது. அவர்கள் இருவருக்கும் (கிரிகரின் அம்மா அப்பா ) இருவருக்கும் நிம்மதி திரும்ப கிடைத்தது. தங்கை, வேலைக்காரி, என அனைவரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக மாறினர். கிரிகர் சம்சா இறந்தவுடன் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தார்கள் என்பது இந்த விவரிப்பின் சாரம்.
வாசகர்களை வியக்க வைக்கும் விதத்தில் தான் இக்கதை நீங்குகிறது. யதார்த்தமும் கனவும் என வேர் பிரித்தரிய முடியாத விவரிப்பு ஒரு மனிதன் பூச்சியாக மாறுகிற அவஸ்தை நம்மியெல்லாவரையும் தொந்தரவு செய்யக் கூடும். ஆனால்தான் பூச்சியாக மாறிவிட்டதில் கிரிகருக்கு பிரத்யேக அவஸ்தை ஒன்றும் இல்லை அவருக்கு ஏற்பட்ட அவஸ்தை உலகத்தில் யாருக்கும் உருவாக வாய்ப்பிருக்கிறது என அவர் நினைக்கவும் செய்கிறார் அவருக்கு அந்த வியாதி உலகிலுள்ள அனைவருக்கும் பொருந்துமென அவர் நினைக்கிறார்.
என்னவாயிருக்கும் இந்த கதையுடைய பொருள். இதனை எழுதியதக இலக்கியத்தில் மேதைகளில் ஒருவராகிய காப்கா. என்பதால் பலரும் இக்கேள்வியைக் கேட்டுவிடக் கூடும் ஆனால் அசாதரணமான ஒரு கதையாதலால் இதற்கு முழுமையான ஒரு அர்த்தம் கொடுக்க முடியாமலும் தனியே நிற்கிறது.
முதாலாளித்துவ காலகட்டத்தில் வாழ்க்கைக்கான அர்த்தமும் மதிப்பீடுகளும் இழந்து போகிற மனித வாழ்க்கையின் அவஸ்தையா பூச்சியாக மாறிய கிரிகர் சம்சாவில் இருந்து பிரதிபலிக்கிறது. அதற்கு அடிபணியாமல் வேறு வழியில்லையென்ற நிலையில் அப்படி யி ரு க் கலாம். அதல்லவென்றால் ஆன்மீகத்திலிருந்து பிரிந்துவிட்ட வாழ்க்கையின் தனிமையைத் தான் சொல்லியிருக்கிறது என்ற பொருள் வருமா?
அப்படியும் வரலாம் இவையெல்லாம் இல்லாவிட்டால் வெறுமொரு துன்பக்கனவின் வெளிப்பாடாகவும் காணலாம். துன்பக்கனவின் நிச்சயமான அர்த்தத்தை யாராலாவது சொல்லி விட முடியுமா?
உருமாற்றம் என்ற இக்கதையைப் பற்றி விமர்சகர்கள் எழுதியுள்ள வாசிப்புகளுக்கு கணக்கில்லையென நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது கதையின் மலையாள மொழிபெயர்ப்பு க்கு பி ஜி சோமன் நாயர் எழுதிச் சேர்த்து வைத்துள்ள வாசிப்புகளும் குறிப்புகளும் மிகவும் உபயோகமானது
(மலையாள மூலம் எம் கே சாணு)
தமிழில் கதிரேசன்
கருத்துகள்
கருத்துரையிடுக