இடுகைகள்

குரோதத்தின் ஆப்பிள்கள் சிறுகதை (மலையாளம் ) சோனியா செரியன்

எப்ரல் மாதம்....இமயத்தின் சரிவுகளில் பனி உருகி செடிகள் பூ பூக்கத் துவங்கும் காலம். குளிர்காலத் துவக்கத்தில் தாழ்வாரங்கள் தேடிப்போன பறவைகள் பல மலைகளைக் கடந்து மலை உசிக்கு திரும்ப தொடங்கியிருக்கிறது.  மழைச்சரிவில் கட்டப்பட்டிருக்கிற ராணுவ மருத்துவமனையின் வளாகம் முழுவதும் பீச், பிளம், ஆப்ரிகோட்  மரங்களால் நிரம்பியிருக்கிறது.  எதோ ஒரு காலத்தில் யாரோ சிலர் நட்டு வைத்து வளர்த்தியாவை...சென்ட்ரல் செக்சன் பல்  மருத்துவமனையின்  முன்னாள் இருக்கும்  பிளம் மரம் அடி முதல் நுனி வரை பூத்து குலுங்குகிறது.  மயக்கும் நறுமணம். தேனீக்கள், பட்டாம் பூச்சிகளின் கலவரம்.. திங்கள் கிழமை கூட்டமான ஒரு (ஓ பி டி) முடித்து விட்டு நானும், முருகனும், திருவேதியும் வாசலில் இருந்த பிளம் மரத்தின் பூங்கொத்து ஒன்றைப் பிடித்து பிய்த்து மேஜை மேல் வைத்து அதனை செதில் செதிலாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.   ரெட்கிறாஸ் சின்னமிட்டிருன்த பழைய பூச்சட்டி  ஒன்று தேய்த்து கழுவி மினுக்கி தண்ணீர்   நிறைத்து  மேஜை மேல் வைக்கப்பட்டிருந்தது...  வழக்கமில்லாமால் ...

சில வருடங்களுக்கு முன் எனது நண்பர் ஜான் குறித்து நான் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதமும் அவருடைய பதிலும்

https://www.jeyamohan.in/129760/

நீலி இதழில் வெளியான எனது மொழிபெயர்ப்புக் கட்டுரை

  https://neeli.co.in/2403/

பப்ளிமாஸ் மரம்

 பப்ளிமாஸ் மரத்தடிக்கு முத்து வந்து நின்று அரைமணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்னும் ஜீப் வண்டி வரவில்லை. காலையில் இங்கு சரியாக ஏழைரை மணிக்கு நில் என்றுதான் மரம் வெட்டு ஜேம்ஸ் சொன்னார். சரியாகத்தான் நிற்கிறோமா என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தி உறுதிபடுத்திக் கொண்டான் முத்து.  வேறு ஏதும் இடத்தைச் சொல்லியிருப்பார்களா.. என அவனுக்கு தோன்றிய சந்தேகத்தை நீக்க அவனுக்குள்ளேயே முயற்சி செய்தான்.  காலையில்  எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அவனைத் தாண்டிச் சென்றார்கள். முகம்  தெரிந்தவர்களைப் பார்த்ததும் அவர்களை சற்று  பார்க்காதது போல நின்று கொண்டான்.  பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் விஸ்ணுவும் அம்முவையும்  பார்த்தவுடன் சற்று பதட்டமானவன் அவர்களைப்  பார்க்காதது போல் திரும்பி நின்றான்.  இவனை சரியாக கவனித்த விஸ்ணு எந்தாடா  பணிக்கிறங்கியோ?  ஸ்கூலில் போகுண்ணில்லே என்றான். அம்மு இவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு பப்ளிமாஸ் மரத்தை பார்த்தாள். அவளது புன்னகையின் அளவு கூடியது. மெல்ல முத்துவை பார்த்துக் கொண்டே நடந்த அம்மூவை  விஸ்ணு நட...

தனிமையின் பத்து வருடங்கள்

நண்பர்களுக்கு வணக்கம். இதை வாசிக்கும் நீங்கள் அடையப்போவது என்னவென எனக்குத் தெரியவில்லை . இந்த நாவலுக்கு (அ) கட்டுரைத் தொடருக்கு (அ) டைரிக்குரிப்பிற்கு எப்படி வேண்டுமானலும் வைத்துக் கொள்ளுங்கள் மேற்கண்ட தலைப்பில் நான் கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்வில் நடந்தவற்றைத் தொகுத்து எழுதப் போகிறேன். அது ஒரு கட்டுரையாக இருக்கலாம் அல்லது நினைவுக் குறிப்பாக இருக்கலாம். அல்லது ஒரு புனைவாகக் கூட இருக்கலாம். எனது கதையை ஏன் நீங்கள் கேட்கவேண்டும்? வாழ்க்கையில் எவ்வளவோ செய்வதற்கு இருக்கும்போது இதையேன் படிக்கவேண்டுமென நீங்கள் கேட்கலாம் . இதற்கு என்னால் உறுதியாக எந்த பதிலும் அளிக்க முடியாவிட்டாலும் எனக்குள் இருக்கும் உங்களை நீங்கள் சிறிதளவு கண்டு கொள்ளலாம் என்றுமட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது. இவற்றையெல்லாம் எழுத என்ன வயசாகிவிட்டதா? 27 வயது. ஓடுகிற வயது. வென்றெடுக்க வேண்டிய வயது. இந்த வயதில் ஏன் இப்படியொரு சுய சரிதை என நீங்கள் கேட்கலாம். வயது சிறிதென்றாலும் ஒரு பெரும் வாழ்க்கை அனுபவம் இருக்கிறது. அவற்றை எழுத வேண்டுமென தோன்றுகிறது. எது என் நினைவில் நிற்கிறது? அதன் மூலம் என்னை நான் புரிந்து கொள்ள முயல...

மனிதன் பூச்சியாக மாறுகிறான் காப்காவின் உருமாற்றம் நாவலை முன்வைத்து

ஒரு நாள் காலையில் எழும்போது உங்களுக்குத் தெரிகிறது நீங்கள் ஒரு கரப்பான் பூச்சியாக உருமாற்றம் அடைந்திருக்கிறீர்கள். அப்போது என்னவாக இருக்கும் உங்கள் மனநிலை? எப்படியிருந்தாலும் அது நீங்கள் நினைப்பதற்கு அப்பால்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . இந்த ஊகத்தோடுதான் அனைவரும் காப்காவின் உருமாற்றத்தை வாசிக்கத் துவங்குவார்கள பிரான்ஸ் காப்கா 1883 ஆம் ஆண்டு பெருநாட்டில் பிறந்தார் என்றாலும் அவர் கதைகள் எழுதியுள்ளது ஜெர்மன் மொழியிலாகும். சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற அவர் அரசின் காப்பீட்டுத் துறையில் வேலை செய்தார். தொழிளாலர்களிடம் கூடுமான்வ்வரை கருணையுள்ளவராகவும் அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தருபவராக இருந்தார். எப்போதும் தனிமையில் வாழ்ந்தார். அவர் ஆளுமையின் ஒன்றாகவே தனிமை அவரிடம் கு டி கொண்டிருந்தது. அத்தோடு காசநோயும் ஒரு எழுத்தாளனின் கொந்தளிப்பும் சேர்ன்து கொண்ட போது தான்பைத்தியக்கார நிலையின் விளிம்பில் அலைத்து கொண்டிருபோதாக அவருக்குப் பட்டது. அவரைடய பல படைப்புகளும் அவருடைய மரணத்திற்கு பின்புதான் வெளியிடப்பட்டது. தன் இறப்பிற்குப் பின் தன் படைப்புகளை எரித்துவிட வேண்டுமென தன் ஆத்ம நண்பரான மா...

தீட்சையின் சில படி நிலைகள் குரு நித்யசைதன்ய யதி ( தமிழில் கதிரேசன் )

ஒரு மகாகுருவின் அருகில் ஒரு நல்ல சீடன் ஒருவன் வந்தடைவது தெய்வ கருணையால் எனக் கூறலாம். அதுபோல தங்களுக்கிடையே ஒத்துபோகமுடியாத குருவும் சீடனும் சந்திப்பதைத் தற்செயல் என்றுதான் சொல்லவேண்டும் .அப்படிப்பட்ட இருவர் தற்செயலாக சந்திக்கும் சந்திப்பு இருவருக்குமிடையே நேரம் வீணாவதற்கும் மனது புண்படுவதற்கு மட்டுமே வழிவகுக்கும். குருவும் சீடனும் தம்மில் ஒத்து போகிறவர்களா என்பதை அறிந்துகொள்ள ஒரு தவறு நடக்கமால் வேறு வழியில்லை .சிறிது காலம் குருவும் சீடனும் ஒன்றாக கூடிக்கழித்த காலங்களை திரும்பி பார்க்கும்போது மட்டும்தான் அவர்களுடைய சந்திப்பு நன்மைக்கா அல்லது தீமைக்கா என்று புரிந்து கொள்ள முடியும். நான் மிகச்சிறந்த குரு என கம்பீரமாக மார்தட்டிக் கொண்டு திரிபவர்களுக்கே ஆயிரக்கணக்கிள் சீடர்கள் தேவைப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்துவுக்கே பன்னிரண்டு சீடர்கள் கிடைத்து இறுதியில் ஒருவரும் உதவவில்லை. குரு சீட உறவில் ஏற்படும் தவறுகள் முரண்பாடுகளைக் களைந்து அவற்றை உபயோகரமாக மாற்றிக்கொண்டு செயல்படுவது அவ்வளவு எளிதல்ல. ஒரு பழுதடைந்த கடிகாரத்தை சரிசெய்ய வேண்டுமானால்கூட கடிகாரம் செய்பவன் அதனை சிறிது நேரம் இ...