நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு

நதிக்கரை சிறுகதை விவாத நிகழ்வு - கதிரேசன் நதிக்கரை இலக்கிய வட்டத்தின் ஒரு சிறப்பு கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுகதை வடிவம், சிறுகதைக்கான தோற்றம், ஆரம்ப கால சிறுகதைகள், நவீனத்துவ பின்நவீனத்துவ சிறுகதைகள், அதன் போக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழில் பாரதி தொடங்கி தற்கால இளம் எழுத்தாளர்கள் சிறுகதைகள் வரை பேசப்பட்டன.சிறுகதையின் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,வளர்ச்சி போக்குகள் என ஒரு ஒட்டு மொத்த சிறுகதைகள் குறித்த விவாதமாக இக்கூட்டம் இருந்தது. எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் சிறுகதைகள் தோற்றம் குறித்தும் எட்கர் ஆலன்போ, ஓ ஹென்றி முதலான ஆரம்பகால எழுத்தாளர்கள் குறித்தும் மேலைநாடுகளில் பிரபுக்குடும்பங்களில் சிறுகதைகள் ஒரு கேளிக்கை நிகழ்வாக சொல்லப்பட்டது குறித்தும் சொன்னார். ஆசிரியன் கதை சொல்லும்போதே கேட்பவர்கள் கதையின் முடிவை தாங்களாகவே ஊகித்துக்கொண்டு கதையை பின்தொடர்வார்கள். கதை சொல்லியின் சவால் என்பது வாசகன் ஊகிக்கும் அத்தனை முடிவுகளையும் தாண்டி அவன் முற்றிலும் எதிர்பார்க்காத வேறொரு முட...